Advertisment

டூரிங் டாக்கீஸ்! வித்தியாச தலைப்பு!

cc

வித்தியாச தலைப்பு!

தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பதில், எப்போதுமே ஆர்வம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அந்த செண்டிமெண்டை தொடர்ந்து ஃபாலோ செய்துவரும் அவர், "ஹிட்லர்', "வள்ளி மயில்', "மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "மழை பிடிக்காத மனிதன்' படத்தின் தலைப்பை தற் போது மாற்ற முடிவெடுத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முன்னரே முடிந்துள்ள நிலையில் இன்னும் ரிலீசாகவில்லை. இதனால் இப்போது "சலீம் 2' என்று தலைப்பை மாற்றி ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மே மாதம் வெளியான "பிச்சைக்காரன் 2' வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், அந்த சென்டிமெண்ட் இதிலும் ஒர்க்அவுட் ஆகும் என நம்புகிறார். விஜ

வித்தியாச தலைப்பு!

தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பதில், எப்போதுமே ஆர்வம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அந்த செண்டிமெண்டை தொடர்ந்து ஃபாலோ செய்துவரும் அவர், "ஹிட்லர்', "வள்ளி மயில்', "மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் "மழை பிடிக்காத மனிதன்' படத்தின் தலைப்பை தற் போது மாற்ற முடிவெடுத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முன்னரே முடிந்துள்ள நிலையில் இன்னும் ரிலீசாகவில்லை. இதனால் இப்போது "சலீம் 2' என்று தலைப்பை மாற்றி ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மே மாதம் வெளியான "பிச்சைக்காரன் 2' வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், அந்த சென்டிமெண்ட் இதிலும் ஒர்க்அவுட் ஆகும் என நம்புகிறார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' தயாரிக்கும் இப்பட பாடல்களுக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

Advertisment

விஜய் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!

c

வெங்கட் பிரபு -விஜய் கூட்டணியில் உருவாகிவரும் விஜய் யின் 68வது படம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிவடைந்து, தொடர்ந்து இலங்கை, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் படப் பிடிப்பை தொடரவுள்ளார்கள். ஏற்கனவே, இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஏகப்பட்ட பிரபலங்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த ஷெட்யூல்களில் தொடர்ந்து புதுப்புது நடிகர்கள் இணைந்து வருகின்றனர். அண்மையில் பாடகர் மற்றும் நடிகர் யுகேந்திரன், "காஃபி வித் காதல்' படத்தில் நடித்த மாளவிகா ஷர்மா உள்ளிட்டோர் இணைந்தனர். தற்போது ரம்யா கிருஷ்ண னும் படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் மாஸ்!

ரஜினியின் 171வது படத்தை எடுக்க தயாராகிவரும் லோகேஷ் கனகராஜ், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் வழக்கமாக அவரது படங்களில் இருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற விஷயங்கள் இருக்காதென சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதோடு "லியோ 2' உருவாகும் என்றும், ரஜினி படம் முடித்துவிட்டு "கைதி 2' ஆரம்பிக்கவுள்ள தாகவும், அதன் பிறகு கமிட்டான படங்களை முடித்துவிட்டு தொடங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கலைஞரின் திரை வாழ்க்கை!

தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும்விதமாக "கலைஞர் 100' விழா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 6ஆம் தேதி கிண்டி ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலைஞரின் திரை வாழ்க்கை பற்றிய முழு ஆவணப்படம் திரையிடப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத் தை ஏ.எல்.விஜய் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி-கத்ரீனா கைஃப் ஜோடி!

Advertisment

cc

பாலிவுட்டின் டாப் ஹீரோயினாக வலம்வரும் கத்ரீனா கைஃப், தென்னிந்திய படங்களில்... குறிப்பாக டோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் விரல்விட்டு எண்ணும் அளவிற்குத்தான் நடித்துள்ளார். இந்தச் சூழலில் அவர் நடிப்பில் வருகிற 12ஆம் தேதி வெளி வரவுள்ள "மெர்ரி கிறிஸ்துமஸ்'’தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி களில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப் பட்டுள்ளது. கத்ரீனா கைஃப்புக்கு, கோலிவுட்டின் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் ரிலீசாகவுள்ளது. நேரடி தமிழ்ப் படத்தில் முதன்முதலாக கத்ரீனா கைஃப் நடித்து வெளிவருவதால் அவரது ரசிகர்கள் பார்த்து ரசிக்க ஆவலோடு இருக்கிறார்கள்.

-கவிதாசன் ஜெ.

nkn030124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe