தெலுங்குக்கு முன்னுரிமை!

வெங்கட்பிரபு இயக்கிவரும் விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக இலங்கை, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. தொடர்ந்து புதுப்புது கலைஞர்களை கமிட்செய்து வருகிறது படக்குழு. சமீபத்தில் பாடகர் மற்றும் நடிகர் யுகேந்திரனை முக்கிய கதாபாத்திரத்தில் புக் செய்த படக்குழு, விஜய் யின் தங்கை கதாபத்திரத்திற்கு இவானாவை அணுகியது. ஆனால் சில காரணங்களால் அவரை வெளியேற்ற வேறோரு நடிகையை தேடி வந்தது. இந்த நிலையில் தற்போது மாளவிகா ஷர்மாவை புக் செய்துள்ளது. இவர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான "காஃபி வித் காதல்' படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதே போல் தெலுங்கில் வளர்ந்து வரும் மீனாட்சி சௌத்ரிதான் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா ரிலீஸுக்கு படக்குழு பிளான் பண்ணியுள்ளதால் மற்ற மொழி நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக திரை வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

ff

கேமியோ ரன்வீர்!

ரஜினியின் 171வது படத்தில் கவனம் செலுத்திவரும் லோகேஷ் கனகராஜ், கதை எழுதும் பணிகளுக்காக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி முழுமூச்சுடன் செயல்பட்டுவருகிறார். மேலும் நடிகர், நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். ஏற்கனவே வில்லன் கதாபாத்திரத்திற்கு ராகவா லாரன்ஸையும் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனையும் ஓ.கே. பண்ணியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலிவுட் பிரபலம் ஒன்றை கேமியோ ரோலில் களமிறக்க முடிவுசெய்துள்ளார். முதலில் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார். அவர் சில காரணங்களைக் காட்டி மறுத்துவிட்டார். பின்பு ரன்வீர் சிங்கிடம் பேசியுள்ளார். அவரும் படத்தின் ஒன்லைனை கேட்க, பிடித்துவிட்டதாம். முழுக்கதையை எழுதி முடித்தவுடன் திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார். அதனால் இப்போதைக்கு ரன்வீர் சிங்கிடமிருந்து க்ரீன் சிக்னல் வர மீண்டும் அவரை சந்தித்து பேசவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஹீரோயின் என்ட்ரி!

தனது 50வது படத்தை இயக்கி நடித்து முடித்துள்ள தனுஷ், தனது அக்கா மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சரத்குமாரும் நடிக்கிறார். அவர் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. இந்த நிலையில் புதுவரவாக அனிகாவை புக் செய்துள்ளது படக்குழு. கதாநாயகியாக நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், கடந்த ஆண்டு ஹீரோயினாக உருவெடுத்தார். தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் ஏற்கனவே ஹீரோயினாக அறிமுகமான நிலையில், தற்போது தனுஷ் இயக்கும் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கிறார்.

நானி ஹேப்பி!

சமீபகாலமாக தென்னிந்திய இயக்குநர் களுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறார் தெலுங்கு நடிகர் நானி. "டான்' பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சனை வந்ததால் அது இப்போதைக்கு டேக் ஆஃப் ஆக வாய்ப்பில்லை என தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் வேறோரு இயக்குநரை தேடி வந்த அவர் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்துள்ளார். அதனால் அவரது கவனம் கார்த்திக் சுப்புராஜிடம் விழ, அவரை சந்திக்க அழைத்துள்ளார். இரு வரும் சமீபத்தில் சந்தித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதை நானிக்கு மிகவும் பிடித்துப் போய்விட் டது. உடனே திரைக்கதை எழுதும் பணியை தொடங்கச் சொல்லிவிட் டார். அதனால் ஆரம்பக் கட்ட பணிகளில் தனது இயக்குநர் டீமுடன் கார்த்திக் சுப்புராஜ் இறங்கிவிட்டார்.

Advertisment

cc

மெஹ்ரின் நம்பிக்கை!

"நெஞ்சில் துணி விருந்தால்', "நோட்டா', "பட்டாஸ்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் சிறிது ப்ரேக் விட்டுவிட்டு தெலுங்கில் முழுக் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழில் "இந்திரா' என்ற படத்தில் நடித்துவருகிறார். வசந்த் ரவி நடிக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களிடையே தன்னை பரவலாக சேர்க்கும் என நம்புகிறார்.

Advertisment

-கவிதாசன்.ஜெ