ராஷ்மிகா பதிலடி!
தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான நடிகைகள் பாலிவுட்டிற்கு பறக்கும் பொழுது, அங்குள்ள கலாச்சாரத்திற்கேற்ப முழுவதுமாக மாறிவிடுகின்றனர். சமீபத்தில் தமன்னா, அந்த லிஸ்ட்டில் இணைந்தார். அதைத்தொடர்ந்து புதுவரவாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். அண்மையில் ரன்பீர்கபூர் நடிப்பில் வெளியான "அனிமல்' படத்தில் வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை தர, சில விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என்ற ரீதியில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ராஷ்மிகா. "தி கேர்ள் ஃபிரண்ட்'’என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சிம்பு 50!
சிம்பு தனது 48-வது படத்திற்காக தயாராகி வருகிறார். தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமல் தயாரிக்க படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. இப்படத்தை முடித்து விட்டு 49வது படத்திற்காக யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், அவரது 50வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அவரே இயக்கி நடித்து தயாரிக்கவும் உள்ளார். ஏற்கனவே ஒரு நேர்காணலில் இயக்கி நடிக்கவுள்ள ப்ளானை சொல்லியிருந்தாலும் தற்போது தீவிரமாக அதை செயல்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 50வது படத்துக்கு கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ளதால், இப்படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பேசப்படுகிறது.
அக்கா நடிகை!
இயக்குநர் விக்னேஷ் சிவன், "லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இப்படத்தை முத லில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. பின்பு பெரிய பொருட்செலவில் விக்னேஷ் சிவன் எடுக்கத் திட்டமிட்டதால், லலித்தின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு கை மாறியது. இப்படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வுசெய்யும் பணிகளில் ஈடுபட்டுவரும் விக்னேஷ் சிவன், ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நயன்தாராவையும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார். பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக அவர் நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக ‘"இமைக்கா நொடிகள்'’ படத்தில் அதர்வாவிற்கு அக்காவாக நயன்தாரா நடித்திருந்த நிலையில், அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கன்னட பல்லவி!
"கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் கீதுமோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். ‘"டாக்சிக்'’என்ற தலைப்பில் உருவாகும் இப்படம், கோவாவில் போதைப்பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். கதாநாயகியை சஸ்பென்ஸாக வைத்துள்ளது படக்குழு. ஆனால் சாய்பல்லவிதான் யஷ்ஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படம் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி.
தீரன்-2 தொடக்கம்!
கமலின் 233-வது படத்தை இயக்க கமிட்டான வினோத், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் இந்தியன் 2, இந்தியன் 3 என நீண்டது, மணிரத்னம் படம் மற்றும் பாலிவுட்டில் 'கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களில் கமல் கவனம் செலுத்தியது உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. மணிரத்னம் படத்திற்கு பிறகுதான் இப்படம் தொடங்கும் என்றும் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனால் வினோத், கமல் படம் தொடங்கு வதற்கு முன்பு வேறொரு படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார். லலித் தயாரிப்பில் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அதை எடுக்க முயற்சித் தார். ஆனால் தனுஷ் கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்துள்ளதால் அவரது டேட் கிடைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கார்த்தியோடு கைகோர்த்து "தீரன்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். கார்த்தியும் இதற்கு ஓ.கே சொல்லிவிட்டார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக வுள்ளது.
-கவிதாசன் ஜெ.