பிரபல இளம் ஹீரோக்களின் ஃபேவரைட்டாக இருக்கும் "கடைக்குட்டி சிங்கம்' நாயகி சாயிஷா... சமீபத்தில் தன் பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். பாலிவுட் ஸ்டைலில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் அழைத்து ஹோட்டலில் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

ன்ஸிகா தனது பிறந்தநாளையொட்டி, தனது 50-ஆவது பட அறிவிப்பை தனுஷ் மூலம் வெளியிடுவதாக இருந்தார். கலைஞர் மறைவையொட்டி அந்த அறிவிப்பை தள்ளி வைத்ததாகச் சொல்லியுள்ளார்.

touringtalkies

Advertisment

12 கோடி ரூபாய் சம்பளத்துடன் சல்மான்கான் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் பட வாய்ப்பு அமைந்ததால் சல்மான் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

மிழில் "தாம்தூம்' படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் "குயின்' ஆக கொடிகட்டிப் பறக்கும் கங்கனா ரணவத்... பிரதமர் மோடியின் தீவிர ரசிகைபோல்... மோடி பாட்டு பாடிவருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மோடிக்காக பிரச்சாரம் செய்ய கங்கனாவிடம் பேசிவருகிறார்கள்.

ஹாலிவுட் விருது வகைகளில் கூடுதலாக ஒரு விருது இடம்பெறவிருக்கிறது. கமர்ஷியல் படங்களை விருதுக்குள் கொண்டுவரும் நோக்கில், "மக்களிடம் மிகவும் பிரபலமான படம்' என்கிற பிரிவில் 2019-ஆம் ஆண்டிலிருந்து விருது வழங்கவிருக்கிறார்கள்.

கேரள சினிமா நடிகர் சங்கமான "அம்மா'வுக்கு எதிராகவும், குறிப்பாக... மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு எதிராகவும் துணிச்சலோடு குரல் கொடுத்துவரும் "பூ', "மரியான்' படங்களின் நடிகை பார்வதிக்கு தொடர் மிரட்டல், நெருக்கடிகள் வந்த நிலையில்... சினிமாவிலிருந்தும், சமூகவலைப் பக்கங்களிலிருந்தும் சில காலத்துக்கு விலகியிருக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.

"சண்டக்கோழி-2' படப்பிடிப்பில் தனது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட அன்று... 150 தொழிலாளர்களுக்கு தலா ஒரு கோல்ட் காயின் பரிசளித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

-ஆர்.டி.எ(க்)ஸ்