வெயிட்டிங் லிஸ்ட்!
தனது செகன்ட் இன்னிங்ஸை ஆடிவரும் நயன்தாரா கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்துள்ளார். அந்த லிஸ்ட்டில் சசிகாந்த் இயக்கும் "டெஸ்ட்', நிலேஷ்கிருஷ்ணா இயக்கும் ‘"அன்னபூரணி', ட்யூட் விக்கி இயக்கும் "மண்ணாங்கட்டி', மோகன்ராஜா இயக்கும் "தனி ஒருவன் 2' உள்ளிட்ட படங்கள் அடங்கும். இந்த நிலையில் அந்த லிஸ்ட்டில் இன்னொரு படம் சேர்ந்துள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் லீட் ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கமிட் செய்த படங்களை முடித்துவிட்டு இப்படத்திற்கு தேதிகள் தருவதாகச் சொல்லியுள்ளார். அதனால் அந்த இடைவெளியில் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக முடிக்க முடிவெடுத்துள்ள அருண்ராஜா காமராஜ், அதேசமயம் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வுகளையும் கவனித்து வருகிறார்.
ஜாக்கி ஹேப்பி!
விஜ

விஜய்சேதுபதி, தன்னுடைய ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான மணிகண்டன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு வெப் தொடரில் நடித்துவருகிறார். முதலில் இருவரும் ஒரு படத்திற்காக கைகோர்த்துள்ளதாகத்தான் தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு வெப் தொடர் என அறிவிப்பு வெளியானது. முன்னதாக படம் என்று சொல்லப்பட்ட நிலையில், மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் வெப் தொடர் எனத் தெரிந்ததும் விலகிவிட்டார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்த மணிகண்டன், கம்பீர தோற்றத்துடன் இருக்கும் பல்வேறு முன்னணி நடிகர்களை அணுகிவந்தார். ஆனால் எதுவுமே கைகூடவில்லை. இந்த நிலையில் இறுதியாக பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராப் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்து அவரை அணுகியுள்ளார். கதையைக் கேட்ட அவர் மிகவும் இம்ப்ரஸாகி உடனே ஓ.கே. சொல்லிவிட்டார். அவரது கதாபாத்திரம் கதையில் வலுவானதாக அமைந்துள்ளதாம். அதனால்தான் இவ்வளவு மெனெக்கெடல்களாம்.
குட் கூட்டணி!
சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி படம் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனது அடுத்த படத்திற்கான கதையை அவர் கேட்டுவரும் நிலையில்... "குட்நைட்'’ பட டைரக்டர் விநாயக் சந்திரசேகரனிடம் ஒரு கதை கேட்டுள்ளார். பின்பு கதை நல்லாயிருப்பதாக பாராட்டி நடிப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
கங்கனா நம்பிக்கை!
கங்கனா ரணாவத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் "சந்திரமுகி 2' படத்தில் நடித்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் படுதோல்வியடைந்தது. இதை யடுத்து இந்தியில் வெளியான ‘"தேஜஸ்'’ படமும் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதனிடையே இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு "எமெர்ஜென்சி' படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் கங்கனா. இதில் மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "ட்ரிடென்ஸ் ஆர்ட்' ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத் தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்தியில் உருவாக்கி, பின்பு தமிழில் டப் செய்து வெளியிட படக்குழு திட்ட மிட்டுள்ளது. ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘"தலைவி'’வெப் தொடரில் கங்கனா நடித்துள்ள நிலையில்... மீண்டும் இருவரும் இந்த படத்திற்காக கைகோர்த்துள்ளனர். மேலும் அந்த வெப் தொடர் பண்ணும்போதே இப்படத்திற்கான கதையை சொல்லி கங்கனாவிடம் ஏ.எல்.விஜய் ஓ.கே. வாங்கிவிட்டார். அதனடிப்படையில்தான் தற்போது படப்பிடிப்பு தொடங் கப்பட்டுள்ளது. "எமெர்ஜென்சி' மற்றும் ஏ.எல்.விஜய் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் கங்கனா.
-கவிதாசன் ஜெ.