மந்தனாவின் அச்சம்!
செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக, டிஜிட்டல் துறையில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் முகத்தை வைத்து கற்பனையில் பல ஏ.ஐ. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின் றன. கடந்த சில நாட்களாக பல்வேறு தமிழ்ப் பாடல்கள் பிரதமர் மோடியின் குரலில் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் "டீப் ஃபேக்" மூலம் நடிகை ராஷ்மிகா வின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந் தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்... நடிகை ராஷ்மிகா இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பேசியுள்ளார்.
அந்தப் பதிவில், "இணையத்தில் பரவிவரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ குறித்து பேசுவதற்கு வேதனையாக உள்ளது. தொழில் நுட்பம் இப்படி தவறாக பயன் படுத்தப்படுவதை பார்க்கும்போது எனக்கு மட்டுமல்ல, அவற் றின் தீங்குகளுக்கு ஆளா கக்கூடிய ஒவ்வொரு வருக்கும் அச்சம் ஏற்படத்தான் செய்யும். அதை நினைத்தாலே வேதனையாக உள் ளது'' என்றிருக் கிறார்.
ஸ்லிம் அனுஷ்கா!
அனுஷ்கா நடித்த "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த படத்தில் வந்ததைவிட தற்போது இன்னும் உடலை குறைக்கவுள்ளாராம். இதுவரை 49 படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, 50வது படமாக அவர் நடித்த "பாகமதி' படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரம் என்பதாலும் 50வது படம் என்பதாலும், நிச்சயம் இந்த படத்தை வெற்றியாக்க வேண்டும் என முனைப்போடு இருக்கிறார் அனுஷ்கா.
இசைஞானி பயோபிக்!
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் பால்கி முன்பு ஒரு பேட்டியில் தெரி வித்தார். மேலும், தனுஷை வைத்து அந்த படத்தை இயக்குவது தன்னுடைய கனவு என்றும் கூறியிருந் தார். இதையடுத்து தனுஷும் இளையராஜாவாக நடிக்க ஆர்வத்தோடு இருந்தார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு அக்டோபரில் படப் பிடிப்பைத் தொடங்க திட்டமிட் டுள்ளனர். 2025 நடுவில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். இதனை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறு வனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளனர். தனுஷ் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் அனேகமாக பால்கிதான் இயக்குவார் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்கு கொடுத்தாச்சு!
"பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கோல்டு படத்தை தொடர்ந்து 'கிஃப்ட்' என்ற தலைப்பில் இளையராஜா இசையில் ஒரு படம் இயக்கி வந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக தெரிவித்து சினிமா கரியரை நிறுத்துவ தாகத் தெரிவித்தார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இதனால் அவர் இயக்கி வந்த கிஃப்ட் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரான ராகுலுக்கு பெரும் நஷ்டமாம். இதை அறிந்த அல்போன்ஸ் புத்திரன், மீதமுள்ள படத்தை எடுத்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தாய்க்கிழவி ராதிகா!
நடிகை ராதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோபிநயினாரின் புது படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். "யூதன்' படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை காக்காமுட்டை மணிகண்டனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்த சிவா என்பவர் இயக்குகிறார். படத்திற்கு "தாய்க்கிழவி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த ஒரு பாட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாகிறது. அடுத்த மாத இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்ட மிட்டுள்ளார்கள்.
-கவிதாசன் ஜெ.