Advertisment

டூரிங் டாக்கீஸ்! எகிறும் பில்!

ss

எகிறும் பில்!

dd

சமீப காலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் தமன்னா, தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கிறார். அதுவும் "ஜெயிலர்' படத்தில் "காவாலா...' பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம், அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிய, அதைவிட நிகழ்ச்சிகளுக்கு நடனமாட ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். தனக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதால் இதுதான் சரியான நேரம் என தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். நடன நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பெரிய தொகையை பில் போடுகிறாராம். அவரின் மார்க்கெட்டை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமன்னா கேட்கும் சம்பளத்தை யோசிக்காமல் கொடுக்கிறார்களாம். ஆகமொத் தம், காவாலா மூலம் தமன்னா கல்லா கட்டி வருவகி

எகிறும் பில்!

dd

சமீப காலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் தமன்னா, தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கிறார். அதுவும் "ஜெயிலர்' படத்தில் "காவாலா...' பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம், அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிய, அதைவிட நிகழ்ச்சிகளுக்கு நடனமாட ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம். தனக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதால் இதுதான் சரியான நேரம் என தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். நடன நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பெரிய தொகையை பில் போடுகிறாராம். அவரின் மார்க்கெட்டை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமன்னா கேட்கும் சம்பளத்தை யோசிக்காமல் கொடுக்கிறார்களாம். ஆகமொத் தம், காவாலா மூலம் தமன்னா கல்லா கட்டி வருவகிறார்.

Advertisment

அபிராமி... அபிராமி!

cc

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள நாயகன் கூட்டணி, அதே பாணியில் மற்றொரு கேங்ஸ்டர் கதையை "தக் லைஃப்' படத்தில் கையில் எடுத்துள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் "தக் லைஃப்' -பிற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர்சல்மான் கமிட்டாகியுள்ள நிலையில்... தற்போது அபிராமி இணைந்துள்ளார். "விருமாண்டி' படத்திற்கு பிறகு கமல் படத்தில் நடிக்கிறார். அதில் கமலுடன் ஜோடி போட்டவர், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

சல்மான் நம்பிக்கை!

கௌதம்மேனன் -அஜித் கூட்டணியில் வெளியான படம் "என்னை அறிந்தால்'. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம், தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. அங்கும் கௌதம்மேனனே இயக்குகிறார். அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயின் உள்பட மற்ற நடிகர்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக அஜித் நடித்த "வீரம்' படத்தை ‘"கிசி கா பாய் கிசி கி ஜான்'’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்தார் சல்மான்கான். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் சல்மான்கான் ரசிகர்களை திருப்திபடுத்தியது. வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. அதனால் இந்த படமும் திருப்திபடுத்தும் என்ற நம்பிக்கையில் சல்மான் கான் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

சந்தானம் ஓ.கே!

"பில்டப்', "வடக்குப்பட்டி ராமசாமி' உள்ளிட்ட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார் சந்தானம். இந்த நிலையில் "கட்டா குஸ்தி' பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் புது படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை மதுரை அன்பு தயாரிக்கிறார். ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் செல்லா அய்யாவு, "கட்டா குஸ்தி' படத்தை தொடர்ந்து தனுஷுக்கு கதை சொன்னார். தனுஷும் ஓ.கே. சொன்னார். ஆனால் தனுஷின் லைனப்பில் தொடர்ந்து பல்வேறு படங்கள் இருந்ததால் அது கைகூடாமல் போனது. இதனால் தற்போது சந்தானத்தை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். அது பிடித்துப் போன சந்தானம் உடனே ஓ.கே. சொல்லி, கால்ஷீட்டையும் ஒதுக்கிவிட்டதாக பேச்சுக்கள் உலா வருகிறது. இந்த படம் வழக்கமான சந்தானத்தின் ஸ்டைலில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக உள்ளதாம்.

வாடிவாசலில் அமீர்!

வெற்றிமாறன் தற்போது "விடுதலை 2' படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் படப்பிடிப்பு திருவள்ளூர் அருகே நடந்துவருவதாக தகவல். படத்தை அடுத்தாண்டு தொடக்கத்தில்... அதாவது வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியிட முடிவெடுத்தனர். ஆனால், படப் பிடிப்பு முழுமையாக முடிவடைய இன்னும் நாட்கள் தேவைப்படு கிறதாம். அதனால் அடுத்த ஆண்டு கோடையை குறிவைத் துள்ளனர் படக்குழுவினர். இத னிடையே சூர்யாவை வைத்து தான் இயக்கவுள்ள "வாடி வாசல்' படத்தின் அப்டேட் டை வெற்றிமாறன் கொடுத் துள்ளார். இயக்குநரும் நடிகருமான அமீர், இப் படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்கவுள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn111123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe