ஐஸ்வர்யா நம்பிக்கை!
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங் களில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிளேஸ் கண்ணன் என்பவர் தயா ரிக்க சவரிமுத்து எழுதி இயக்குகிறார். ஒரு மருத் துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் பெண் ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படை யாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. அதனால் நர்ஸ் கதாபாத்திரத்தில் முதல்முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகும் நிலையில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர். சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெறாத தால் இந்த படம் அதை செய்யும் என அவர் நம்புகிறார்.
தீப

தீபாவளி கொண்டாட்டம்!
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "காக்கி சட்டை', "ஈட்டி' என பல்வேறு படங்களில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கி னார். ஆனால் அது நீண்டகாலம் நிலைத்து நிற்கவில்லை. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெறாததால் அவரது மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து கடந்த 5 வருடமாக தமிழ் சினிமாவில் தலையே காண்பிக்காமல் இருந்து வந்தார். இடையில் மலையாளத்தில் மட்டும் கடந்த ஆண்டு வெளியான "ஜன கண மன' படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். விக்ரம்பிரபுவுடன் 'ரெய்டு' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்து, சில காரணங்களால் வெளி யாகவில்லை. இந்த சூழலில் தீபாவளியை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய படம் திரைக்கு வருவதால், அதுவும் தீபாவளியை முன்னிட்டு வெளியாவதால் தன்னுடைய கரியருக்கு இது சரியான படமாக இருக்குமென மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஸ்ரீ திவ்யா.
வில்லன் வி.சே!
சிவகார்த்திகேயனை வைத்து "டான்' படத்தை இயக்கிய சிபிசக்ர வர்த்தி, அடுத்ததாக ரஜினியை இயக்க விருந்தார். ஆனால் சில காரணங் களால் அது நடக்கவில்லை. பின்பு சிறிய பட்ஜெட்டில் தனது தயாரிப் பிலே புது முகங்களை வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்தார். அது வும் கைகூடவில்லை. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார். அந்த படம் இப்போ தைக்கு தொடங்கும் சூழல் இல்லை. அதனால் இப்போது நானியுடன் ஒரு படம் பண்ண ஒப்பந்த மாகியுள்ளார். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உரு வாக்கத் திட்ட மிட்டுள்ளார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சித்துவருகிறார். இரு மொழிகளிலும் தற்போது அவருக்கு வில்லனாக ஒரு இமேஜ் உருவாகியுள்ளதால் அவர் பொருத்தமாக இருப்பார் என எண்ணியுள் ளார். இது தொடர்பாக அவரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.
பட்டாசுப் பாடல்!
தனுஷ் தற்போது அவரது 50வது படத்தில் பிசியாக உள்ளார். இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலக்ஷ்மி சரத் குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர். வட சென்னை பேக்ட்ராப் பில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் இப்படம், தற்போது அடுத்த கட்டத்தை எட்டவுள்ளது. படப்பிடிப்பு மிக விரைவில் முடிகிறது. சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அண்மையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளார்கள். இதற்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். பாடல் காட்சி பிரம்மாண்டமாக வந் துள்ளதாக தகவல். மேலும் படத்திற்கு ப்ரோமோஷன் தேடிக் கொடுக்கும் பாடலாக இந்த பாடல் இருக்குமென யூனிட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 'ரவுடி பேபி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்ததால், அதற்கு இணையாக இதுவும் போகவேண்டும் என தனுஷ் நினைக்கிறாராம். தனுஷின் 51வது படத்தைப் பற்றிய ஒரு தகவல். சேகர் கம்முலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு இசை யமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளார்.
-கவிதாசன் ஜெ.