டூரிங் டாக்கீஸ்! சிஸ்டர் செலக்ஷன்!

cc

சிஸ்டர் செலக்ஷன்!

வெங்கட்பிரபு இயக்கத் தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் "தளபதி 68' படத்திற்கு பக்கா பிளானுடன் படு பிசியாக பணிகள் நடந்துவருகிறது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பை தற்போது தாய்லாந்தில் நடத்திவருகிறது. அங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். அதை முடித்துவிட்டு சென்னையில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட் ஒன்று தயாராகி வருகிறது. தாய்லாந்து செட்யூலை முடித்துவிட்டு சில நாட்கள் மட்டுமே பிரேக் விட்டு உடனடியாக சென்னை செட்யூலை தொடங்கவுள்ளார்கள். இப்படி பரபரவென பணிகள் பறந்துகொண்டிருக்க, படம் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில்... தற்போது மகன் விஜய்க்கு ஒரு தங்கச்சி இருக்கிறது

சிஸ்டர் செலக்ஷன்!

வெங்கட்பிரபு இயக்கத் தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் "தளபதி 68' படத்திற்கு பக்கா பிளானுடன் படு பிசியாக பணிகள் நடந்துவருகிறது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பை தற்போது தாய்லாந்தில் நடத்திவருகிறது. அங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். அதை முடித்துவிட்டு சென்னையில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட் ஒன்று தயாராகி வருகிறது. தாய்லாந்து செட்யூலை முடித்துவிட்டு சில நாட்கள் மட்டுமே பிரேக் விட்டு உடனடியாக சென்னை செட்யூலை தொடங்கவுள்ளார்கள். இப்படி பரபரவென பணிகள் பறந்துகொண்டிருக்க, படம் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில்... தற்போது மகன் விஜய்க்கு ஒரு தங்கச்சி இருக்கிறது. அந்த கதாபாத்திரம் வழக்கமாக விஜய் படங்களில் வரும் தங்கச்சி கதாபாத்திரம் போல எமோஷனல் சென்டிமெண்ட் நிறைந்த ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதற்காக பல ஆர்ட்டிஸ்டுகளை படக்குழுவினர் தேடிவருகிறார்கள். அதில் "லவ் டுடே' நாயகி இவானா, பொருத்தமாக இருப்பதாக முடிவெடுத்து அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் புதிதாக ஒரு நடிகர் படத்தில் இணைந்துள்ளார். "வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ரிஷிகேஷ் இதில் விஜய்யின் நண்பர்கள் குழுவில் நடிக்கிறார்.

cc

கோலமாவு 2

"ஜெயிலர்' வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கைவசம் வைத்துள்ளார் நெல்சன். ஆனால் ரஜினி, த.செ.ஞானவேல் படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளதால் "ஜெயிலர் 2' தள்ளிப்போகிறது. இதனால் இந்த இடைவெளியில் இன்னொரு படம் எடுக்க முடிவெடுத்த நெல்சன், தெலுங்கு ஹீரோவான அல்லு அர்ஜுனை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் அவரது லைனப்பில் பிசியாக இருக்க, இப்போதைக்கு இந்த படமும் டேக் ஆஃப் ஆக வாய்ப்பில்லை. இதை உணர்ந்த நெல்சன், இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு படம் பண்ண முடிவெடுத்து, "கோலமாவு கோகிலா' இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். குறுகிய காலத்தில் ஒரு படத்தை முடிக்க இந்த படம் கரெக்ட்டாக இருப்பதாக நினைத்த நெல்சன், அதற்கான முதற்கட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். நயன்தாராவையும் இது தொடர்பாக அணுகியுள்ளார். அவரும் க்ரீன் சிக்னல் கொடுக்க... தற்போது "கோலமாவு கோகிலா பார்ட் 2' வேகமெடுக்கிறது. இதை பான் இந்தியா படமாக வெளியிட நெல்சன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத்தான் இசையமைக்கவுள்ளார்.

சீயான் 63

"தங்கலான்' படத்தைத் தொடர்ந்து "சித்தா' பட இயக்குநர் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார் விக்ரம். இது அவரின் 62வது படமாக உருவாகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை புக் செய்துவிட்டார் விக்ரம். அஸ்வின்ராம் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஹிப்ஹாப் ஆதி நடித்த "அன்பறிவு' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் தனது இரண்டாவது படத்திற்காக லைகா நிறுவனத்திடம் கதை கூறியுள்ளார். அவர்களுக்கு கதை பிடித்துப்போக... விக்ரமிடம் இயக்குநரை அனுப்பியுள்ளனர். விக்ரமும் கதை பிடித்து பச்சைக்கொடி காட்டிவிட்டார். எனவே லைகா தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் அஸ்வின்ராம் இயக்கத்தில் "சீயான் 63' படம் உருவாகவுள்ளதாக தெரிகிறது.

பேய் சென்டிமெண்ட்!

cc

திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிப்பில் வெளியான "பார்ட்னர்' மற்றும் "மை3' வெப் தொடர் படுதோல்வி அடைந்தது. இதனால் ஹன்சிகா ரொம்ப அப்செட்டில் இருக்கிறார். இருப்பினும் ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் "ரவுடி பேபி', "காந்தாரி', "கார்டியன்' உள்ளிட்ட சில படங் களை வைத்துள்ளார். இதில் "கார்டியன்' படம் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் தனக்கு ஒரு ஆறுதல் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறாராம் ஹன்சிகா. காரணம் "அரண்மனை' படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள் ளார். அதனால் அந்த சென்டிமண்ட் இதில் ஒர்க்காகும் என எதிர்பார்க்கிறார். இப்படத்தை சபரி மற்றும் குருசரவணன் என இரண்டு பேர் இயக்கியுள்ளார்கள். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

-கவிதாசன் ஜெ.

nkn041123
இதையும் படியுங்கள்
Subscribe