அமிதாப்புக்கு எக்ஸ்ட்ரா!

cc

த.செ ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து மும்பையில் தற்போது படப்பிடிப்பு நடந்துவருகிறது. அங்கு அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப்பச்சனைப் பார்த்ததும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண் டுள்ளார் ரஜினி. பதிலுக்கு அவரும் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள நிலையில் கொஞ்சம்கூட ரஜினி மாறவில்லை என அமிதாப்பச்சன் கூறியுள்ளார். இருவரும் படப்பிடிப்பு போக மீதமுள்ள நேரத்தில் பழைய நினைவுகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்தநிலையில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தை இன்னும் அதிகமாக்கும்படி இயக்குநரிடம் சொல்லியுள்ளார் ரஜினி. அவரின் சொல்லிற்கேற்ப ஞானவேலும் தற்போது திரைக்கதையில் சற்று மாற்றம் செய்துள்ளார்.

பெங்களூருவில் வீடு!

Advertisment

தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் கவனம் செலுத்திவருகிறார் வரலட்சுமி சரத்குமார். அங்கே பாலகிருஷ்ணா, ரவிதேஜா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்ததன் மூலம் டோலிவுட்டில் அவருக்கு ஒரு மார்க்கெட் உருவாகியிருக் கிறது. இதனால் முன்னணி நடிகர்களின் படங்கள் உள்ளிட்ட பல்வேறு பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிகிறது. கமிட்டான படங்களை முடிக்கும் வரையில், படப்பிடிப்புக்கு செல்ல வசதியாக பெங்களூருவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். மேலும், கதாநாயகியை விட முக்கிய கதாபாத்திரத்தில் தான் அவர் முனைப்பு காட்டுகிறார். அதனால் டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என பேச்சுக்கள் அடிபடுகிறது.

தெலுங்கில் அறிமுகம்!

தமிழில் இயக்குநராக தடம் பதித்த செல்வராகவன் விஜய்யின் "பீஸ்ட்' படம் மூலம் நடிகராக கால் பதித்தார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், "சாணிக் காயிதம்', "பகாசூரன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கிலும் ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். மேலும், இப்படம் மூலம் தமிழ் நடிகை இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகமாகிறார். செல்வராகவன் இயக்கிய "நானே வருவேன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

Advertisment

ட்ரிபிள் ஷாட்!

cc

கமல் -ஷங்கர் கூட்டணியின் "இந்தியன் 2' படப்பிடிப்பு, நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் மொத்த நீளம் 5 மணி நேரத்திற்கு மேல் போகிறதாம். அதில் பிரம்மாண்ட பொருட்செலவில் நிறைய காட்சிகள் அமைந்துள்ளதால் படத்தினை "இந்தியன் 2' மற்றும் "இந்தியன் 3' என இரண்டு பாகமாக வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதனால் மூன்றாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் பணியிலும் ஷங்கர் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான படப்பிடிப்பையும் உடனடியாக எடுக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக கமலிடம் கூடுதலாக கால்ஷீட் கேட்க, கமலும் ஓ.கே. சொல்லி, படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்கவுள்ளது. இதனால் கமல் அடுத்து நடிக்கவிருந்த தனது 233வது படமான அ.வினோத் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுவிட்டதாம். இதற்கிடையில் 234வது படமான மணிரத்னத்தின் படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ள தாகப் பேசப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தின் டைட்டில் லுக் டீசரை படக்குழு படமாக்கிவிட்ட தாம். ஆக்ஷன் அதிகம் கலந்த டீசராக அது அமைந்துள்ளதாம். கமலின் பிறந்தநாளை (நவம்பர் 7) முன்னிட்டு இந்த டீசர் வெளியாக வுள்ளது. அதேநாளில் அ.வினோத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

-கவிதாசன் ஜெ.