Advertisment

டூரிங் டாக்கீஸ்! மோகன்லாலுக்கு எதிர்ப்பு! ஸ்ரீரெட்டிக்கு சவால்!

mohanlal

"அம்மா' மீதும், அரசாங்கம் மீதும் கோபமாக இருக்கிறார்கள் பிரபல நடிகைகள்.

(அஸோஸியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட் என்பதன் சுருக்கப்பெயர் "அம்மா')

Advertisment

dileepmohanlal

நடிகை கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகர் திலீப்பை மீண்டும் "அம்மா'வில் உறுப்பினராக்கினார் புதிய தலைவர் மோகன்லால்.

Advertisment

இதற்கு பிரபல நடிகைகள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து ஏற்கனவே நம்ம டாக்கீஸில் போட்டிருந்தோம்.

வரும் 8-ந்தேதி கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் விழா நடக்கவிருக்கிறது.

இந்த விழாவில் மோகன்லாலை சிறப்பு விருந்தினர

"அம்மா' மீதும், அரசாங்கம் மீதும் கோபமாக இருக்கிறார்கள் பிரபல நடிகைகள்.

(அஸோஸியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட் என்பதன் சுருக்கப்பெயர் "அம்மா')

Advertisment

dileepmohanlal

நடிகை கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகர் திலீப்பை மீண்டும் "அம்மா'வில் உறுப்பினராக்கினார் புதிய தலைவர் மோகன்லால்.

Advertisment

இதற்கு பிரபல நடிகைகள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து ஏற்கனவே நம்ம டாக்கீஸில் போட்டிருந்தோம்.

வரும் 8-ந்தேதி கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் விழா நடக்கவிருக்கிறது.

இந்த விழாவில் மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கேரள அரசு முடிவு செய்திருப்பதாக... செவிவழிச் செய்திகள் வந்ததுமே... ஏற்கனவே திலீப்பை சேர்த்த விஷயத்தில் மோகன்லாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் மஞ்சு வாரியர், கீது மோகன்தாஸ், பாவனா, ரீமா கலிங்கல், ரம்யா நம்பீசன், ரேவதி, பத்மப்ரியா, பார்வதி மேனன் உட்பட எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலதுறைப் பிரமுகர் நூற்றுக்கு மேற்பட்டோர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினர்.

""முதல்வரும், அமைச்சர்களும், விருது பெறுவோரும் மேடையில் இருந்தால்போதும். விருதுப் போட்டியில் மோகன்லாலின் படமும் கலந்துகொண்டது. அந்த வகையில் விருதுப் போட்டியில் தோற்ற சக போட்டியாளரை சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது'' என கடிதம் எழுதினர்.

ஆனால்... ’நடிகர்சங்கத் தலைவர் என்ற முறையில் மோகன்லாலை சிறப்பு விருந்தினராக விருது விழாவில் கலந்துகொள்ள’ அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுத்துள்ளது அரசு.

இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்ப்பாளர்களும், மலையாள சினிமா பெண்கள் கூட்டமைப்பும் "எங்களின் எதிர்ப்பை மீறி மோகன்லாலை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளச் செய்தால்..... விருது விழாவை புறக்கணிப்போம்' எனச் சொல்லி வருகிறார்கள்.

மிழ் சினிமாவில் சில வி.ஐ.பி.கள் மீது பாலியல் புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி.

srireddy

புகாருக்கு ஆளான ராகவா லாரன்ஸ்... டுவிட்டர் மூலம் தனது விளக்கத்தையும், ஸ்ரீ ரெட்டிக்கு ஒரு சவாலையும் வைத்தார்.

lawrance

""நீங்கள் சொல்றபடி பார்த்தா இது ஏழு வருஷத்துக்கு முந்தி. இவ்வளவு நாளா சும்மா இருந்தது ஏன்? இது பொய்யான குற்றச்சாட்டு. இருந்தாலும் உங்கமேல எனக்கு கோவமில்ல. "நடிக்க சான்ஸ் தராம ஏமாத்திட்டதா'த்தான உங்க குற்றச்சாட்டு. நான் சொல்றபடி... நடிச்சுக்காட்டுங்க. என்னை நீங்க நேருக்கு நேர் பார்க்க சங்கடப்பட்டா... என் மேனேஜர் முன்னால... நீங்க உங்க லாயரை வச்சுக்கிட்டு பெர்ஃபாமென்ஸ் பண்ணி வீடியோ எடுத்து அனுப்புங்க. நீங்க நல்லா நடிச்சிருந்தா... உடனே என் படத்தில் உங்களுக்கு வாய்ப்புத் தர்றேன்'' என தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

"இது ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு' என கேப்ஷன் போட்டு... ஒரு குட்டியூண்டு வீடியோவை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி, அதில் குட்டியூண்டு காஸ்ட்யூமில் தோன்றி... சில டான்ஸ் மூவ்மெண்ட்டுகளை செய்து ஃபேஸ்புக்கில் போட்டார்.

""நான் ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்கிறேன். எல்லாரும் என்னை ஆசிர்வாதம் செய்ங்க'' என வேண்டுகோள் விட்டதுடன்... ஆக்டிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். பிறகு அதை நீக்கிவிட்டார்.

"அவுக கூப்ட்டாக... இவுக கூப்ட்டாக... ஏமாத்திட்டாக...' எனச் சொல்லும் ஸ்ரீ ரெட்டி... இவுக நடிக்கக் கூப்ட்டதுக்கும் போகாம நழுவுனா எப்படி?

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn07-08-2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe