டூரிங் டாக்கீஸ்! வருத்தம் போயிடுச்சு!

dd

வருத்தம் போயிடுச்சு!

cc

சென்னையைச் சேர்ந்த நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா, தற்போது தெலுங்கில் பிசியாக இருக் கிறார். இருந்தாலும் தமிழில் தான் நடித்த படம் அடிக்கடி வெளியாகாத தால் தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என வருத் தத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த "சூர்ப்பனகை', "பார்டர்', உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் சில காரணங்களால் வெளியாகாததால் தமிழில் தற்போது சீக்கிரம் ஒரு படம் வெளி யாகவேண்டும் என நினைத்தாராம். அதிர்ஷ்ட வசமாக மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் "விடாமுயற்சி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாதென... கதையைக் கேட்ட ரெஜினா உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம். இவர் நடிக்கவுள்ள கதா பாத்திரத்தில் முதலில் ஹுமாகுரேஷி கமிட்டாகி யிருந்ததாக கூறப்பட்டது. அவர் சில காரணங்களால் நடிக்க முடிய

வருத்தம் போயிடுச்சு!

cc

சென்னையைச் சேர்ந்த நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா, தற்போது தெலுங்கில் பிசியாக இருக் கிறார். இருந்தாலும் தமிழில் தான் நடித்த படம் அடிக்கடி வெளியாகாத தால் தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என வருத் தத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த "சூர்ப்பனகை', "பார்டர்', உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் சில காரணங்களால் வெளியாகாததால் தமிழில் தற்போது சீக்கிரம் ஒரு படம் வெளி யாகவேண்டும் என நினைத்தாராம். அதிர்ஷ்ட வசமாக மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் "விடாமுயற்சி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாதென... கதையைக் கேட்ட ரெஜினா உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம். இவர் நடிக்கவுள்ள கதா பாத்திரத்தில் முதலில் ஹுமாகுரேஷி கமிட்டாகி யிருந்ததாக கூறப்பட்டது. அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக, தற்போது ரெஜினாவை தேர்வு செய்துள்ளது படக்குழு. அஜர் பைஜானில் சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, வில்லனாக சஞ்சய்தத் மற்றும் ஆரவ் நடிக்கின்ற னர். முதல் ஷெட்யூலாக மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

சீதை நம்பிக்கை!

2019ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ்திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்க... பிரம்மாண்டமாக படமெடுக்கத் திட்டமிட்டுள்ளதால் பக்கா ப்ளானுடன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால்தான் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வில் பிசியாக இருக்கும் படக்குழு, சீதை கதாபாத்திரத்திற்காக கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. முதலில் ஆலியாபட்டை கமிட்செய்தார்கள். பின்பு சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் ரெட் சிக்னல் தர மீண்டும் ஆலியாபட்டிடம் படக்குழு போனது. அது ஒருவழியாக கைகூட டெஸ்ட் லுக்கும் வெற்றிகரமாக நடந்தது. இந்தச் சூழலில் ஆலியாபட் தற்போது நோ சொல்லியுள்ளாராம். இதனால் தற்போது மீண்டும் சாய்பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறதாம் படக்குழு. இந்த முறை சுமூகமாக முடிந்துவிடும் என படக்குழு நம்புகிறதாம். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர்கபூரையும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷையும் தேர்வுசெய்து வைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

saipalavi

சூர்யா கட்டளை!

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் "கங்குவா' படத்தில் நடித்துவருகிறார். கதாநாயகியாக திஷாபதானி நடிக்கிறார். படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. அங்கு வரலாற்று பின்னணியில் உள்ள போர்ஷன்களை படமாக்கி வருகிறார்கள். இந்த மாத இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது படப்பிடிப்பை வேகப்படுத்தியுள்ளதாம். காரணம், சூர்யா இந்த மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க ஆர்டர் போட்டுள்ளாராம். ஏனென்றால் அடுத்த மாத இறுதியில் அவர் அடுத்து கமிட்டாகியுள்ள சுதா கொங்கரா படத்துக்கு செல்லவுள்ளா ராம். அதன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதால் விரைந்து படப்பிடிப்பை முடித்து தன்னுடைய டப்பிங் பணிகளை அடுத்த மாதத் தொடக்கத்தில் தொடங்க கண்டிஷன் போட்டுள்ளாராம். இதனால் சூர்யா கட்டளையின்படி படக்குழு தற்போது தங்களது ப்ளானில் சில மாற்றங்களை செய்து செயல்பட்டு வருகிறதாம்.

கில்லர் வெயிட்டிங்!

இயக்குநர் டூ ஹீரோ என்ற லிஸ்டில் முக்கியமாக பார்க்கப் பட்டவர் எஸ்.ஜே.சூர்யா. சமீப காலமாக வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். இதனிடையே நீண்ட இடை வெளிக்கு பிறகு "கில்லர்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார். இதன் படப்பிடிப்பிற்காக ஜெர்மனியில் இருந்து ஒரு சொகுசு காரை தமிழ்நாட் டிற்கு இறக்குமதி செய்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பை தொடங்கத் திட்டம் தீட்டியிருந்தார். இந்த நிலையில் அது தள்ளிப்போகிறதாம். சமீபத்தில் விஷாலுடன் அவர் நடித்த "மார்க் ஆண்டனி' படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மார்க்கெட் அதிகரித் துள்ளது. இதன் காரணத்தால் நல்ல படங்களில் நடிப்பதற்காக "கில்லர்' படத்தை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளாராம்.

-கவிதாசன். ஜெ

nkn111023
இதையும் படியுங்கள்
Subscribe