பூஜை போட்டாச்சு!
"வாரிசு' பட ரிலீஸுக்கு முன்பே "லியோ' படத்தின் பூஜையை போட்ட விஜய், அதே போல் தற்போது "லியோ' பட ரிலீஸுக்கு முன்பே வெங்கட்பிரபு படத்தின் பூஜையை சமீபத்தில் போட்டுள்ளார். பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக முன்பே தகவல் வெளியானது. அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்து பின்பு சினேகா கமிட்டானார். மகன் விஜய்க்கு ஜோடியாகப் பிரியங்காமோகன் கமிட்டானதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கவில்லையாம். அவ ருக்கு பதிலாக மீனாட்சிசவுத்ரி நடிக்கிறார். இவர் விஜய்ஆண்டனியின் "கொலை' படத் தில் நடித்திருந்தார். இவரைத் தவிர்த்து லைலாவும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரஷாந்த், ஜ
பூஜை போட்டாச்சு!
"வாரிசு' பட ரிலீஸுக்கு முன்பே "லியோ' படத்தின் பூஜையை போட்ட விஜய், அதே போல் தற்போது "லியோ' பட ரிலீஸுக்கு முன்பே வெங்கட்பிரபு படத்தின் பூஜையை சமீபத்தில் போட்டுள்ளார். பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக முன்பே தகவல் வெளியானது. அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்து பின்பு சினேகா கமிட்டானார். மகன் விஜய்க்கு ஜோடியாகப் பிரியங்காமோகன் கமிட்டானதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கவில்லையாம். அவ ருக்கு பதிலாக மீனாட்சிசவுத்ரி நடிக்கிறார். இவர் விஜய்ஆண்டனியின் "கொலை' படத் தில் நடித்திருந்தார். இவரைத் தவிர்த்து லைலாவும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரஷாந்த், ஜெயராம், மோகன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங் கள் நடிக்கின்றனர். இப்படம் வழக்கமான வெங்கட்பிரபு படம்போல் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது.
தள்ளிப்போகும் ரிலீஸ்!
பா.ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் 'தங்கலான்' படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டேஜில் உள்ளது. கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க, கடந்த ஜூலை மாதம் படப் பிடிப்பை முடித்த படக்குழு, இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது பட வெளியீடு தள்ளிப் போகிறதாம். என்னவென்று படக்குழுவிற்கு நெருங்கிய வட்டா ரத்திடம் விசாரித்தால் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லையாம். இன்னும் சில பேட்ச் ஒர்க் இருக்கிறதாம். பெரும்பாலான காட்சிகள் கே.ஜி.எஃப் பகுதியில் படமாக்கப்பட்ட நிலையில் அதே இடத்தில் தான் தற்போது பேட்ச் ஒர்க்கும் நடந்து வருகிறதாம். அதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது..
ட்ரெண்ட் துஷாரா!
"அநீதி' படத்தில் கடைசியாக நடித்திருந்த துஷாரா விஜயன், தற்போது தனுஷின் 50வது படத்தில் நடித்துவருகிறார். தனுஷே இயக்கி நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தில் கமிட்டாகியுள்ளார். த.செ ஞானவேல் இயக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகாசிங் என பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படி தொடர்ந்து பெரிய ஹரோக்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் துஷாரா, கதாநாயகியாக நடிப்பதை விட அழுத்தமான கதாபாத்திரத்திலே நடிப்பதைத்தான் விரும்பு கிறாராம். மேலும் தற்போது மல்டி ஸ்டாரர் சப்ஜெக்ட் அதிகம் ஹிட்டடித்துவருவ தால் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தாமும் மாறவேண்டும் என அவரது நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம்.
இரண்டாவது முயற்சி!
விஜய்சேதுபதி தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் "விடுதலை 2', ஆறுமுககுமார் இயக்கத்தில் பெயரிடாத தலைப்பில் ஒரு படம், மற்றும் மணிகண் டன் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸ் என பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்திற்காக வெற்றிமாற னுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். வெற்றிமாறன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். பொன்ராம் இயக்கத்தில் இதற்கு முன்னதாக விஜய்சேதுபதி நடித்த "டி.எஸ்.பி' படம் சரியாக போகவில்லை. இதனால் பொன்ராம் இயக்கத்தில் ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என விஜய் சேதுபதி நினைக்கிறாராம்.
மாமன்னன் காம்போ!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "மாமன்னன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பகத்ஃபாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இப்படத்தை ஆர்.பி.சவுத்ரி அவரது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்க ஒரு புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்குமெனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.
-கவிதாசன் ஜெ.