தென்னிந்திய மோகம்!
பாலிவுட்டுக்கு போன அட்லீ, அவரோடு சேர்த்து தமிழ்க் கலைஞர்களையும் கொண்டு போய் பணியாற்ற வைத்தார். அட்லீ மீதுள்ள நம்பிக்கையால் ஷாருக்கானும் அவர் விருப்பத்துக்கு விட, அதன் பலனாக தற்போது ஜவான் படம் வசூல் ரீதியாக சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் இதே ஃபார்முலாவை பின்பற்ற முடிவெடுத்துள்ளாராம் சல்மான் கான். அவரது அடுத்த படத்தை தமிழ் இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்கவுள்ள நிலையில், அவர் விருப்பத்துக்கே எல்லா பணிகளையும் கவனிக்க சொல்லியுள்ளாராம். குறிப்பாக தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் நயன்தாராவோடு ஷாருக்கான் ஜோடி போட்டுள்ளதால் தானும் ஒரு தென்னிந்திய நடிகையுடன் ஜோடி போட வேண்டும் என்ற அவரது ஆசையை வெளிப்படையாக விஷ்ணு வர்தனிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து வந்த
தென்னிந்திய மோகம்!
பாலிவுட்டுக்கு போன அட்லீ, அவரோடு சேர்த்து தமிழ்க் கலைஞர்களையும் கொண்டு போய் பணியாற்ற வைத்தார். அட்லீ மீதுள்ள நம்பிக்கையால் ஷாருக்கானும் அவர் விருப்பத்துக்கு விட, அதன் பலனாக தற்போது ஜவான் படம் வசூல் ரீதியாக சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் இதே ஃபார்முலாவை பின்பற்ற முடிவெடுத்துள்ளாராம் சல்மான் கான். அவரது அடுத்த படத்தை தமிழ் இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்கவுள்ள நிலையில், அவர் விருப்பத்துக்கே எல்லா பணிகளையும் கவனிக்க சொல்லியுள்ளாராம். குறிப்பாக தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் நயன்தாராவோடு ஷாருக்கான் ஜோடி போட்டுள்ளதால் தானும் ஒரு தென்னிந்திய நடிகையுடன் ஜோடி போட வேண்டும் என்ற அவரது ஆசையை வெளிப்படையாக விஷ்ணு வர்தனிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து வந்த விஷ்ணுவர்தன், தற்போது த்ரிஷா மற்றும் சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். எனவே விரைவில் தென்னிந்திய நடிகையுடன் சல்மான்கான் டூயட் பாடவுள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டம் தீட்டியுள் ளது. விஷ்ணு வர்தன், தற்போது தமிழில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி -அதிதி ஷங்கர் ஆகியோரை வைத்து ஒரு படம் இயக்கி வருவதால், இதனை முடித்துவிட்டு சல்மான்கான் படத்தை தொடங்கவுள்ளார்.
பார்ட்லி2 ப்ளான்!
செல்வராகவன், இயக்குநராக மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க ஆசைப்படுகிறார். அதற்காக ஏற்கனவே ஹிட் கொடுத்த படத்தை, அதன் இரண்டாம் பாகம் எடுக்க முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது "7ஜி ரெயின்போ காலனி' 2ஆம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில் ஹீரோவாக முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணாவே நடிக்க, ஹீரோயினாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் கமிட்டாகியுள்ளார். படத்தின் ப்ரீ ப்ரோடெக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஹிட்டடித்த இன்னொரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத் துள்ளார். தெலுங்கில் அவர் இயக்கிய "ஆடவாரி மாடலருகு அர்தாலே வேருலே' படம் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழிலும் "யாரடி நீ மோகினி' என்ற தலைப் பில் ரீமேக் ஆனது. தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற் றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, அடுத்து தெலுங்கில் எடுக்கவுள்ள செல்வராகவன், அதற்கான வேலைகளை விரைவில் கவனிக்கவுள்ளாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_242.jpg)
படுகுஷி இயக்குநர்!
அருண்விஜய் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "மிஷன் சாப்டர் 1 -அச்சம் என்பது இல்லையே', பாலாவின் "வணங்கான்' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஏ.எல்.விஜய் படம் எல்லா பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. பாலா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த இரண்டு படத்தையும் முடித்துவிட்டு அடுத்த படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார் அருண்விஜய். இதனிடையே "மான் கராத்தே', "கெத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய திருக்குமரன், அருண்விஜய்யிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட அருண்விஜய், கதை நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார். ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் அருண்விஜய்யிடம் இருந்து திருக்குமரனுக்கு வரவில்லையாம். இதனால் வருத்தத்திலிருந்த திருக்குமரனுக்கு அருண் விஜய்யிடமிருந்து அண்மையில் அழைப்பு வந்துள்ளது. அருண்விஜய் படத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் குஷியாக வேலைகளை தொடங்கி விட்டார் .
ஸ்காட்லாந்து ஷூட்டிங்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_181.jpg)
நித்யா மேனன் தற்போது ஸ்காட்லாந்தில் வலம் வருகிறார். என்னவென்று விசாரித்தால், வெகேஷன்லாம் இல்லையாம், படப்பிடிப்பிற்காக சென்றுள்ளாராம். என்ன படம் என்று கேட்கையில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தது திரை வட்டாரம். அதாவது கதாநாயகியாக இந்தி படம் ஒன்றில் விவேக் ஓபராய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகும் இப்படத்தை விஷால்ரஞ்சன் மிஸ்ரா இயக்க படத் திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆசிஷ் வித்யார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக் கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் கவனம் செலுத்திவந்த நித்யா மேனன், இந்தியில் ஏற்கனவே அக்ஷய் குமார் நடித்த "மிஷன் மங்கள்' படத்தில் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடித்திருந் தார்.
-கவிதாசன் ஜெ.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us