Advertisment

டூரிங் டாக்கீஸ்! கதையில் கவனம்!

88

கதையில் கவனம்!

cc

Advertisment

"பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. "கட்டா குஸ்தி' படத்தை தொடர்ந்து தற்போது பலரிடம் கதை கேட்டுள்ளார் ஐஸ்வர்யா. குறிப்பாக பெண்களை மையப்படுத்தின கதை என்றால் யோசிக்காமல் ஓ.கே. சொல்லிவிடுகிறாராம். ஏற்கனவே அப்படி தேர்வுசெய்து அவர் தயாரித்த "கார்கி' படம் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், அந்த சென்டிமென்ட் தான் காரணமாம். இந்நிலையில் அறிமுக இயக்குநர் தனலட்சுமி கூறிய கதை, அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். இதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதால் அதில் லீட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனலட்சுமி, "96' பட இயக்குநர் பிரேம் குமாரின் மன

கதையில் கவனம்!

cc

Advertisment

"பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. "கட்டா குஸ்தி' படத்தை தொடர்ந்து தற்போது பலரிடம் கதை கேட்டுள்ளார் ஐஸ்வர்யா. குறிப்பாக பெண்களை மையப்படுத்தின கதை என்றால் யோசிக்காமல் ஓ.கே. சொல்லிவிடுகிறாராம். ஏற்கனவே அப்படி தேர்வுசெய்து அவர் தயாரித்த "கார்கி' படம் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், அந்த சென்டிமென்ட் தான் காரணமாம். இந்நிலையில் அறிமுக இயக்குநர் தனலட்சுமி கூறிய கதை, அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். இதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதால் அதில் லீட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனலட்சுமி, "96' பட இயக்குநர் பிரேம் குமாரின் மனைவி என்பது கூடுதல் தகவல். இவர் படத் தொகுப் பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் இயக்குநராக அறி முகமாகிறார்.

இசை தேடல்!

இயக்கத்துக்கு பிரேக் விட்டுவிட்டு சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்திவரும் மிஷ்கின், மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார். தாணு தயாரிப் பில் ஒரு படம் இயக்க கமிட்டான அவர், ஹீரோவாக விஜய்சேது பதியை அணுகினார். அவரும் ஒப்புதல் கொடுக்க சில மாதங்களுக்கு முன்பு கதை எழுதும் பணிகளைத் தொடங்கினார். அது தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் வேலைகளைத் தொடங்கியுள்ளார். நடிகர்கள் தேர்வு ஒரு பக்கம் போய்க் கிட்டிருக்க... இசையமைப்பாளராக ஏ.ஆர் ரஹ்மானை அணுகியுள்ளார் மிஷ்கின். ஏ.ஆர். ரஹ்மான் இன்னும் பதில் சொல்ல வில்லையாம். அவரது பதிலுக்கு காத்திருக் கிறார். மேலும் இளையராஜாவையே, மீண்டும் அணுகலாமா அல்லது அவரது மகனான கார்த்திக் ராஜாவை புக் செய்யலாமா என யோசித்து வருகிறாராம். முதல்முறையாக கார்த்திக்ராஜாவுடன் பணியாற்றிய "பிசாசு 2' படம், சில காரணங்களால் இன்னும் திரைக்கு வரவில்லை. அதோடு, அதிலும் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

cc

தமிழில் குஷி!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படம் மூலம் தென்னிந்தியாவில் கால் பதிக்கவுள்ளார். அவரை தமிழுக்கு அழைத்து வர முயற்சிகள் நடந்தது. அது எதுவும் சரியாக அமைய வில்லை. ஆனால் அவரது தங்கையான குஷி கபூர் தமிழுக்கு வரவுள்ளாராம். லைகா தயாரிப்பில் உரு வாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதில் அதர்வா நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்க வுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகிறதாம்.

இந்தியில் என்ட்ரி!

Advertisment

தமிழ், மலையாளம், தெலுங்கு எனத் தென்னிந்திய அளவில் பிரபல ஹீரோயினாக வரும் சாய்பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடை பெற்று முடிந்துள்ளது. இதை முடித்துவிட்டு இந்தியில் அறிமுகமாகவுள்ளாராம் சாய் பல்லவி. அமீர்கானின் மகனான ஜுனைத் கான், பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுனில்பாண்டே இயக்க, காதல் கதையாக உருவாகிறது. இதில் ஜுனைத்கானுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவி கமிட்டாகியுள்ளாராம்.

இயக்குநர் ஓ.கே!

கே.ஜி.எஃப் புகழ் யஷ், அடுத்ததாக மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வெளியானது. ஆனால் யஷ்ஷோ, "நான் கடுமையாக உழைக்கிறேன். கண்டிப்பாக அது மாஸ் படமாக இருக் காது. வலுவான நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்கும், கொஞ்சம் காத்திருங்கள்'' என பேட்டிகளில் தெரிவித்தார். படம் குறித்து எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் கீது மோகன்தாஸிடம் கதை கேட்ட யஷ், அவருடன் படம் பற்றி நிறைய உரையாடியுள்ளார். பல கட்டங்களாக ஸ்க்ரிப்டில் டிஸ்கஷன் செய்து இறுதியாக அவரை தன் அடுத்த பட இயக்குநராக தேர்ந்தெடுத் துள்ளார். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரு கிறது. விரைவில் கதாபாத்திரத் திற்கான டெஸ்ட் லுக்கை எடுக்க வுள்ளார்களாம். இப்படம் நல்ல கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

-கவிதாசன் ஜெ.

nkn200923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe