டூரிங் டாக்கீஸ் நல்ல செய்தி!

ss

நல்ல செய்தி!

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நஸ்ரியா, திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த நிலையில்... "கூடே' படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தனது செகண்ட் இன்னிங்சில் தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம்செலுத்தி வந்த அவர், தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாக வில்லை. ஆனால் ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இத்தொடர் பெண்களை மையப்படுத்தி உருவாவ தாகவும், முதன்மைக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாகவும், சூர்யா பிரதாப் என்பவர் இயக்குவ தாகவும் கூறப்பட்டது. இந் நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் நஸ்ரியா. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். "கங்குவா' படத்தில் கவனம் செலுத்திவரும் சூர்யா, அடுத்ததாக

நல்ல செய்தி!

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நஸ்ரியா, திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த நிலையில்... "கூடே' படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தனது செகண்ட் இன்னிங்சில் தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம்செலுத்தி வந்த அவர், தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாக வில்லை. ஆனால் ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இத்தொடர் பெண்களை மையப்படுத்தி உருவாவ தாகவும், முதன்மைக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாகவும், சூர்யா பிரதாப் என்பவர் இயக்குவ தாகவும் கூறப்பட்டது. இந் நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் நஸ்ரியா. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். "கங்குவா' படத்தில் கவனம் செலுத்திவரும் சூர்யா, அடுத்ததாக சுதாகொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் பரபரவென நடந்து கொண்டிருக்க, துல்கர்சல்மான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி போடவுள்ள நஸ்ரியா, தனது ரீ என்ட்ரிக்கு கரெக்ட்டாக இருக்கும் என நம்புகிறார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு அதிதி ஷங்கரிடம் பேச்சு வார்த்தை நடந்து, ஆனால் அது கைகூடாமல் போக, தற்போது நஸ்ரியாவை அணுகி ஓ.கே. வாங்கியுள்ளது படக்குழு.

dd

மீண்டும் கூட்டணி!

இயக்குநர் கரு.பழனியப்பன் சமீபகாலமாக நடிப்பு, சின்னத்திரை, அரசியல் என பயணித்து வருகிறார். அதனால் இயக்கம் பக்கம் திரும்பாமல் இருந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். அதற்காக தனது உதவி இயக்குநர்களுடன் தற்போது ஸ்டோரி டிஸ்கஷனில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் ஹீரோவாக அருள்நிதியை ஒப்பந்தம் செய்துள்ளார். குடும்ப கதை பேக்ட்ராப்பில் இப்படம் உருவாகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு "புகழேந்தி எனும் நான்' என்ற தலைப்பில் அருள்நிதியை வைத்து ஒரு படம் தொடங்கினார். இதில் பிந்துமாதவியை கதாநாயகியாக்கி படப்பிடிப்பையும் சில நாட்கள் நடத்தினார். ஆனால் சில காரணங்களால் படம் நிறுத்தப்பட்டு, பின்பு கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்போது அருள்நிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பைத் தீர்க்க மீண்டும் அவரையே ஹீரோவாக தேர்ந்தெடுத்துள்ளார் கரு.பழனியப்பன்.

கங்கனாவின் ஆசை!

"தாம் தூம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான கங்கனா ரணவத்துக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் ஜெயலலிதாவின் பயோபிக் படமான "தலைவி'யில் வாய்ப்புக் கிடைத்தது. "தலைவி' படத்தின் மூலம் கோடம்பாக்கத்தின் தலைவியாகிவிடலாம் என்ற கங்கனாவின் கணக்கு மறுபடியும் பொய்த்துப்போனது. "சந்திரமுகி-2' படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா, நடிப்பில் கலக்கியிருப்பதாக யூனிட் ஆட்கள் பேசிக்கொள்ள... கங்கனாவோ, ""முதல் பாகத்தில் ஜோதிகாவின் அளவுக்கு நான் நடித்திருக்கிறேனா என்று ரசிகர்கள்தான் சொல்லவேண்டும். இப்படத்தின் மூலம் கோலிவுட் எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஏன்னா அவங்கவங்க தங்களது வேலை முடிந்துவிட்டது என்று தங்களது கேரவேனுக்கு சென்று அடையாமல், மற்றவர்கள் நடிப்பதையும் பார்த்து, டிப்ஸ் வழங்கியது ஆச்சர்யமாக இருந்தது. மறுபடியும் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நடிப்பேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

பெரிய லிஸ்ட்!

ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி... காமெடி நடிகராக பிரபலமாகி , தற்போது கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார் சூரி. "விடுதலை' வெற்றிக்கு பிறகு சூரியை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சித்துவருகின்றனர். இதில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடங்கி, துரை.செந்தில்குமார், விக்ரம் சுகுமாரன், பொன்ராம் உள்ளிட்ட பலரும் சூரிக்கு கதை கூறியுள்ளனர். அனைவருக்கும் ஓ.கே. சொல்லி வைத்துள்ளார் சூரி. இந்நிலையில் சூரியின் இயக்குநர் லிஸ்டில் லிங்குசாமியும் இணைந்துள் ளார். இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். மேலும் வெற்றிமாறனே கதை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது சிவகார்த்திகேயன் தயாரிக்கும், "கொட்டுக்காளி' மற்றும் வெற்றிமாறன் இயக்கும் "விடுதலை 2' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn130923
இதையும் படியுங்கள்
Subscribe