தலைப்பு ரெடி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_178.jpg)
மலையாளத்தைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் கவனம் செலுத்திவரும் துல்கர் சல்மான், கடைசியாக தமிழில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கிய "ஹே சினாமிகா' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாத நிலையில் தற்போது சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளாராம். மேலும் ஹீரோவாக அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திகேயன் வேலப்பன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். துல்கரே இப்படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்கனவே துல்கருடன் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்த வி.ஜே.ரக்ஷன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு இதுவரை பெயர் வைக்காமல் இருந்த நிலையில் தற்போது "கோலி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
டபுள் கால்ஷீட்!
"லியோ' படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார். படத்தில் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் வருகிறாராம் விஜய். அதற்காக சமீபத்தில் அமெரிக்கா பறந்த விஜய் மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு, வி.எப்.எக்ஸ். ஸ்கேன் செய்து டெஸ்ட் எடுத்துள்ளது. அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஜோதிகாவை புக் செய்துள்ள படக்குழு, தற்போது சிம்ரனை அணுகி வருகிறதாம். கடைசி நிமிடத்தில் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டால் யார் ரெடியாக இருக்கிறார்களோ அவரை நடிக்க வைத்துவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளதாம். மேலும் படப்பிடிப்பு திட்ட மிட்டபடி நடக்க வேண்டும் என்பதிலும் எக்காரணத்தைக் கொண்டு தாமதமாகக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறதாம். விஜய், ஜோதிகாவை தவிர்த்து ஜெய், அவருக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் மற்றும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் கமிட்டாகியுள்ளனர்.
வில்லன் இவரா?!
அஜித்தின் "விடாமுயற்சி' படப்பிடிப்பு பலமுறை ப்ளான் போட்டும் இன்னும் தொடங்கவில்லை. படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, "இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் எங்கள் பெருமைமிகு படமாக இது இருக்கும்'' என அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தெரிவித்தார். இது கொஞ்சம் அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் தர, இருப்பினும் படம் பற்றிய அப்டேட் தொடர்ந்து வரவில்லை என்பது அவர்கள் கவலையாம். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அஜித்துடன் இரண்டு வில்லன்கள் மோதவுள்ளார்களாம். ஒரு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் ஒப்பந்தமாகியுள்ளாராம். ஏற்கெனவே வில்லனாக அர்ஜுன்தாஸ் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் சிறிய வில்லனாம். மெயின் வில்லனாக சஞ்சய்தத் நடிக்கவுள்ளாராம். படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்க வுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சஞ்சய்தத் தற்போது விஜய்க்கு வில்லனாக "லியோ' படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_237.jpg)
அரசியல்வாதி தனுஷ்!
தமிழ் நடிகர்களில் தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்துள்ள நடிகராக தனுஷ் இருப்பதாக தெரிகிறது. அருண் மாதேஸ்வரனின் "கேப்டன் மில்லர்', தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம், பின்பு மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. மேலும் அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் சேகர் கம்முலா படம். இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளார். தனுஷ் பிறந்தநாளன்று வெளியான இப்படத்தின் போஸ்டரை பார்க்கையில் மும்பையில் உள்ள தாராவி பகுதிக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் இடையே நடக்கும் அரசியல் குறித்துப் பேசவுள்ளதாகத் தெரிந்தது.
இந்நிலையில் இப்படம் உண்மைச் சம்பவத்தை மையப் படுத்தி உருவாகிறதாம். அரசியல்வாதியாக தனுஷ் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு நவம்பரில் ஆரம்பிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/cinema-t.jpg)