Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஷகீலா சரித்திரம்!

​​shakila

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் கவர்ச்சி நடிகை ஷகீலா உண்டாக்கிய தாக்கம் அதிகம். அதிலும்... மம்முட்டி, மோகன்லால் போன்ற மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களே ஷகீலாவின் படங்கள்முன் மண்ணைக் கவ்வின கேரளாவில். இதனால் ஷகீலாவுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் தரப்பட்டதால்... மலையாளத் திரையுலகை விட்டுவிட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் காமெடி கலந்த கவர்ச்சி வேஷங்களில் நடித்துவந்தார்.

Advertisment

shakeela

தன் பெற்றோரால் சினிமாவுக்குத் தள்ளப்பட்டு... ஆபாசப் படங்களின் நடிகையாக்கப்பட்டார். ஒருகட்டத்தில் தனது சேமிப்பு பணத்தையெல்லாம் தனது சொந்த சகோதரியே அபகரித்துக்கொண்டு விரட்ட

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் கவர்ச்சி நடிகை ஷகீலா உண்டாக்கிய தாக்கம் அதிகம். அதிலும்... மம்முட்டி, மோகன்லால் போன்ற மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களே ஷகீலாவின் படங்கள்முன் மண்ணைக் கவ்வின கேரளாவில். இதனால் ஷகீலாவுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் தரப்பட்டதால்... மலையாளத் திரையுலகை விட்டுவிட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் காமெடி கலந்த கவர்ச்சி வேஷங்களில் நடித்துவந்தார்.

Advertisment

shakeela

தன் பெற்றோரால் சினிமாவுக்குத் தள்ளப்பட்டு... ஆபாசப் படங்களின் நடிகையாக்கப்பட்டார். ஒருகட்டத்தில் தனது சேமிப்பு பணத்தையெல்லாம் தனது சொந்த சகோதரியே அபகரித்துக்கொண்டு விரட்டியதால்... நொந்துபோனார்.

Shakeela

Advertisment

மனரீதியாக, உடல் ரீதியாக தான் ஏமாற்றப்பட்ட கடந்தகால கசப்புகளை... "ஆத்ம சரிதா' என்ற பெயரில் சுயசரிதைப் புத்தகமாக மலையாளத்தில் எழுதினார் ஷகீலா.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் வெளியான அந்த புத்தகத்தின் அடிப்படையில் ஷகீலாவின் வாழ்க்கை பல மொழிகளில் திரைப்படமாகிறது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாலிவுட் நடிகை ரிச்சா சடா இந்தப் படத்தில் ஷகீலாவாக நடித்து வருகிறார். பிரபல கன்னட திரைப்பட டைரக்டர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கி வருகிறார்.

கீலா தன் முதல் படத்தில் சிலுக்கு ஸ்மிதாவின் தங்கையாக நடித்தார்.

காட்சிப்படி.. டர்க்கி டவல் எனப்படும் பெரிய துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வரும் ஷகீலாவை சிலுக்கு கன்னத்தில் அறையவேண்டும். ஷகீலா அழவேண்டும்.

நிஜமாகவே ஷகீலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சிலுக்கு. அடிதாங்க முடியாமல் அழுதுவிட்டார் ஷகீலா.

முன்னணி நடிகை... தனக்கு போட்டியாக வரும் புதுமுக நடிகை மீது காட்டும் கடுப்பாக அது இருக்கலாம்... எனத்தான் ஷகீலா நினைத்தார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு, ஷகீலாவை அருகே அழைத்த சிலுக்கு... "இந்தக் காட்சி முதலிலேயே சரியாக வராவிட்டால்... "ரீ-டேக்... ரீடேக்...' என்று சொல்லி உன்னை ரொம்ப நேரம் டவலுடன் நிற்க வைப்பார்கள். அதனால்தான்... முதல் டேக்கே ஓ.கே. ஆகட்டும் என பலமாக அடித்தேன்' என காரணத்தைச் சொன்னார் சிலுக்கு.

"சிலுக்கு சுமிதாவைப் பற்றியும், அவரின் வாழ்க்கையைப் பற்றியும் எனக்கு நன்கு தெரியும். "சிலுக்குவின் வாழ்க்கைப் படம்' என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்ட "தி டர்ட்டி பிக்ஸர்ஸ்' படத்தில் வியாபாரத்திற்காக நிறைய விஷயங்களைச் சேர்த்துவிட்டார்கள்'’என வருத்தப்பட்ட ஷகீலா... தனது வாழ்க்கையைப் படமாக்க பல வாய்ப்புகள் வந்தபோதும்... "அது சரியாக சொல்லப்படுமா?' என்கிற சந்தேகத்தில் சம்மதிக்காமல் இருந்தார் ஷகீலா.

"முழுக்க உங்களின் வாழ்க்கைச் சம்பவமாகவே இருக்கும்' என உறுதியளித்த பிறகே... தனது "பயோபிக்'கிற்கு சம்மதித்துள்ளார் ஷகீலா.

shakilaஷகீலாவாக நடிக்கும் ரிச்சா சடா, சமீபத்தில் பெங்களூருவில் ஷகீலாவை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு இந்தப் படத்தில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

"ஷகீலாவின் இளமைக்காலம் கஷ்டமாக இருந்திருக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் கவர்ச்சிப்பட நடிகையாகிவிட்டார். கவர்ச்சி நடிகையின் வேஷம்தானே என நினைக்காமல், சிரத்தை எடுத்து நடிக்கிறேன். காரணம்... ஷகீலா இப்போது சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும்... இப்போதும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்... மிகையில்லாமல், உள்ளது உள்ளபடியே இந்தப் படம் தயாராகிறது'’ எனச் சொல்லியுள்ளார் ரிச்சா சடா.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies nkn03-08-2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe