டூரிங் டாக்கீஸ்! மீண்டும் வில்லனாக!

cc

மீண்டும் வில்லனாக!

ராஜு முருகன் இயக்கும் "ஜப்பான்' படத்தில் நடித்துவரும் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையான பவர்ஃபுல்லான கதாபாத்திரமாம். அதனால் சமீபகாலமாக வில்லன் சத்யராஜை மிஸ் செய்தவர்கள், இப்படத்தில் பார்க்கலாம் என பேசுகின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர். சத்யராஜை தாண்டி ராஜ்கிரணும் இப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும் படத்தில் முக்கிய ரோலாம்.

cc

ஹேப்பி நிதிஅகர்வால்!

தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை நிதிஅகர்வால், இந்தியில் தனது கேரியரை ஆரம்பித்

மீண்டும் வில்லனாக!

ராஜு முருகன் இயக்கும் "ஜப்பான்' படத்தில் நடித்துவரும் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையான பவர்ஃபுல்லான கதாபாத்திரமாம். அதனால் சமீபகாலமாக வில்லன் சத்யராஜை மிஸ் செய்தவர்கள், இப்படத்தில் பார்க்கலாம் என பேசுகின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர். சத்யராஜை தாண்டி ராஜ்கிரணும் இப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும் படத்தில் முக்கிய ரோலாம்.

cc

ஹேப்பி நிதிஅகர்வால்!

தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை நிதிஅகர்வால், இந்தியில் தனது கேரியரை ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்திவந்தார். இதனிடையே தமிழிலும் "ஈஸ்வரன்', "பூமி', "கலகத் தலைவன்' என மூன்று படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் க்ளிக் ஆகவில்லை. இதனால் அப்செட்டில் இருந்த அவர் தொடர்ந்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவசரப்படாமல் கதைத் தேர்வில் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்தே தேர்வு செய்கிறாராம். அதன் பலனாக பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கிறார். மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒரு ஹீரோயினாக நிதிஅகர்வால் நடிக்க இன்னொரு ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் தன் கதாபாத்திரம் தனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நிதி. மேலும் பிரபாஸிற்கு ஜோடி என்பதால் ஹேப்பியாக இருக்கிறார்.

எதிர்பார்ப்பு!

"கங்குவா' படத்தில் கவனம் செலுத்திவரும் சூர்யா, அடுத்தடுத்து சுதாகொங்கரா படம், வெற்றிமாறன் படம் , லோகேஷ் கனகராஜ் படங்கள் என முன்னணி இயக்குநர்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் சுதாகொங்கரா படம், வருகிற அக்டோபரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மீண்டும் "சூரரைப் போற்று' கூட்டணி என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் ஹீரோயினாக அதிதிஷங்கரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. ஏற்கனவே அதிதிஷங்கர் அறிமுகமான "விருமன்' படத்தை சூர்யா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

cc

ஒரு நாயகன்... இரு நாயகி!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "டாக்டர்' படத்தில் தமிழில் அறிமுகமான பிரியங்கா மோகன், இரண்டாவது படத்திலே சூர்யாவுக்கு ஜோடியானார். பின்பு மீண்டும் "டான்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நிலையில் இப்போது தனுஷுக்கு ஜோடியாக "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துவருகிறார். இப்படி தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவரும் பிரியங்கா மோகன், அடுத்ததாக விஜய்யுடன் ஜோடியாகவுள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான "தளபதி 68' படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளாராம் பிரியங்கா மோகன். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்க ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக் கிறார். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முன்பு ஜோதிகா கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாகவும் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்ட நிலையில்... ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

நட்சத்திர தேர்வு!

"ஜெயிலர்' பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள ரஜினி, தனது அடுத்த படத்திற்காக தயாராகிவருகிறார். இமயமலை பயணத்தில் இருந்த ஹேர்ஸ்டைல்தான் த.செ.ஞானவேல் படத்திற்குமாம். போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறாராம். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ள நிலையில், சமீபத்தில் தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கேமியோ ரோலில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் இப்போது சில காரணங்களால் அவர் விலகிவிட்டாராம். அவருக்கு பதில் "எங்கேயும் எப்போதும்' பட பிரபலம் சர்வானந்த் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படியாக நட்சத்திர தேர்வு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம்!

-கவிதாசன் ஜெ.

nkn260823
இதையும் படியுங்கள்
Subscribe