பாலிவுட்டில் கீர்த்தி!

cc

Advertisment

அட்லீ தயாரிப் பில் "கீ' படத்தை இயக் கிய காளீஸ் இயக்கத்தில் வருண்தவான் நடிக்க வுள்ள படம், அட்லீ- விஜய் கூட்டணியில் வெளியான "தெறி' படத்தின் ரீமேக் என தெரிகிறது. வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்க, இதன்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் மற்றொரு நாயகியாக வாமிகாகபி ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் "மாலை நேரத்து மயக்கம்' மற்றும் சமீபத்தில் வெளியான "மாடர்ன் லவ்' சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய "நினைவோ ஒரு பறவை' மூலம் கவனம் ஈர்த்தவர். இதையடுத்து தமிழில் ஜெயம் ரவியின் "ஜீனி' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கவுள்ளார்.

வில்லங்க டைரக்டர்!

அருண்விஜய்யை வைத்து "வணங்கான்' படத்தை எடுத்துவரும் பாலா, முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்திவருகிறார். கன்னியாகுமரில் தொடங்கி பல்வேறு கட்டங்களாக அதை சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலான காட்சிகளை எடுக்கிறார். இந்நிலையில் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கினை புக் செய்துள்ளார் பாலா. அவரது கதாபாத்திரம் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரம் எனக் கூறப் படுகிறது. இவரது காட்சிகளை கன்னியாகுமரியில் படமாக்க பாலா திட்டமிட்டுள்ளார். முன்னதாக பாலா தயாரிப்பில் "பிசாசு' படத்தை இயக்கியிருந்தார் மிஷ்கின். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாகவும் கதாபாத்திரம் பிடித்துப் போனதாலும் ஓ.கே. சொல்லிவிட்டார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடக்கவுள்ளது. அடுத்த மாதம் மொத்த படப்பிடிப்பும் முடிகிறதாம். ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் "மாவீரன்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிஷ்கின், விஜய்யின் லியோ படத்திலும் சிறிய வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

ss

நீண்ட பேச்சுவார்த்தை!

"பேச்சிலர்' படம் மூலம் பிரபலமான திவ்யபாரதி, பிக்பாஸ் புகழ் முகெனுடன் "மதில் மேல் காதல்', கதிரின் "ஆசை' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் சுடிகாலி சுதீர் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். நரேஷ் குப்பிலி இயக்கும் இப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில் தற்போது தமிழில் கவினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தை "பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அஜயன்பாலா அறிமுகம்!

Advertisment

ss

உதவி இயக்குநர் அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய்யின் பல படங்களுக்கு ஆஸ்தான எழுத்தாளராக பணியாற்றியுள்ள அஜயன்பாலாவுக்கு இப்போதுதான் நேரமும், காலமும் கனிந்திருக்கிறது. "சுற்றுப்புற சூழலை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் காதல் படத்தில் "கன்னிமாடம்' பட நாயகன் ஸ்ரீராம் கார்த்தி கதாநாயக னாக நடிக்கிறார். யோகிபாபு, முனீஸ் காந்த் இருவரும் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கதைக்கு மேலும் வலு சேர்க்கும். காமெடிக்கும் பஞ்சமிருக்காது. படத்தின் தலைப்பு மற்றும் முழு விபரங்களும் விரைவில் வெளியாகும்' என்கிறார்கள் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

சல்மான் உறுதி!

இயக்குநர் விஷ்ணுவர்தன், கடைசியாக இந்தியில் "ஷெர்ஷா'’ படத்தை இயக்கியிருந்த நிலையில், அதன்மூலம் இந்தியில் கால்பதித்தார். அதன் பிறகு எந்த படமும் கமிட்டாகாமல் இருந்த அவர், மீண்டும் இந்தியில் சல்மான்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், கரண்ஜோகர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவல் பல மாதங்களாக உலா வந்து கொண்டிருக்கும் நிலை யில், தற்போது அது உறுதியாகிவிட்டது. இது சல்மான்கானின் அடுத்த படமாக உருவாகவுள் ளது. படப்பிடிப்பை வருகிற நவம்பரில் தொடங்கி மொத்தம் 8 மாதங்கள் என பல்வேறு கட்டங்களாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிடத் திட்ட மிட்டுள்ளனர். இப்படம் ஆக்ஷன் ஜானரில் பெரிய பொருட் செலவில் உருவாகிறது.

-கவிதாசன் ஜெ.