Advertisment

டூரிங் டாக்கீஸ்! வெல்லும் நஸ்ரியா!

cc

வெல்லும் நஸ்ரியா!

மல்லுவுட்டில் இருந்து வந்த நயன்தாரா, அசின், பாவனா உள்ளிட்ட சிலர் கோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கினர். அந்த வரிசையில் குறுகிய காலத்திலே, கோலிவுட்டில் ஜொலித்தவர் நஸ்ரியா. ஆனால் 2014ஆம் ஆண்டு வெளியான "திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை முடித்த கையோடு அதே ஆண்டில் நிக்காஹ் ஆனதால் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன்பிறகு 2018ல் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'கூடே' படம் மூலம் மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் ரீ என்ட்ரிக்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் ஒரு தமிழ் வெப் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதை என்பதால் முதன்மைக் கதாபாத்திரத

வெல்லும் நஸ்ரியா!

மல்லுவுட்டில் இருந்து வந்த நயன்தாரா, அசின், பாவனா உள்ளிட்ட சிலர் கோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கினர். அந்த வரிசையில் குறுகிய காலத்திலே, கோலிவுட்டில் ஜொலித்தவர் நஸ்ரியா. ஆனால் 2014ஆம் ஆண்டு வெளியான "திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை முடித்த கையோடு அதே ஆண்டில் நிக்காஹ் ஆனதால் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன்பிறகு 2018ல் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'கூடே' படம் மூலம் மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் ரீ என்ட்ரிக்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் ஒரு தமிழ் வெப் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதை என்பதால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்தொடரை சூர்யா பிரதாப் என்பவர் இயக்க, விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisment

cc

முதல்வராக வி.சே.!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவருக்கு நெருங்கியவர்கள் பல மாதங்களாக முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இப்படம் பான் இந்தியா படமாக உருவாவதாகவும் சித்தராமையா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கடந்த ஆண்டு இறுதியில் தகவல்வெளியானது. பின்பு இந்த ஆண்டு தொடக்கத் தில் 'லீடர் ராமையா - ஏ கிங் ரைஸ்டு பை பீப்பிள் (Leader Ramaiah - A King Raised by the People) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவயதில் தொடங்கி அரசியலில் ஜெயித்ததில் தொடர்ந்து, கர்நாடகாவில் அவர் ஆற்றிய பங்குவரை எடுக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'கதலேகானா' என்ற கன்னட படத்தை எடுத்த சத்யா ரத்னம் என்பவர் இயக்க இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். ஷஷாங்க் சேஷகிரி என்பவர் இசையமைக்கும் நிலையில் முதல் பாகத்தில் மொத்தம் 4 பாடல்கள் இருக்கிறது. ஒரு பாடலை முன்னதாகவே முடித்துவிட்டார். விஜய் சேதுபதியிடம் நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது சுமூகமாக முடிந்துள்ளது. ஆனால் கால்ஷீட் ஒதுக்குவதில் சற்று குழப்பம் நீடித்துவருகிறதாம். இருப்பினும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்துள்ளார். அதிவிரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படத்தின் இறுதியில் 20 நிமிடத்திற்கு மேல் சித்தராமையா தோன்றவுள்ளார். முதல் பாகத்தில் சித்தராமையாவின் சிறுவயது மற்றும் இளம்வயது வரை வருவதால் அதற்கேற்ப நடிகர்களைத் தேடிவருகிறார்கள். மேலும் இரண்டு கதாநாயகிகள் கமிட்டாகியுள்ளார்கள். விரைவில் அவர்களை அறிவிக்க உள்ளார்கள்.

இசைஞானியாக தனுஷ்!

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியில் செட்டிலாகியுள்ள இயக்குநர் பால்கி, 'ஷமிதாப்', 'பேட்மேன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இந்நிலையில் ஒரு ஆங்கில இணையதளத்தில் அவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இந்திய திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது, "இளையராஜாவின் வாழ்க்கை கதை யை தனுஷை வைத்து படமாக எடுப்பது என் கனவு. தனுஷின் முகம் 3 தசாப்தங்களாக இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என 1000 படங்களுக்கு மேல் பின்னணி இசையமைத்த இளையராஜா போல் இருக்கும். லண்டன் பில்ஹார்மோனிக் இசைக்குழு விற்காக சிம்பொனியை வாசித்த முதல் ஆசிய நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தனுஷ் மேஸ்ட்ரோவாக நடிப்பது எங்கள் இருவருக்குமே கனவு நினைவாகும் தருணம். மேலும் தனுஷின் 40வது பிறந்தநாளில், இந்த படத்தை நான் எடுத்தால், அது தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். ஏனென்றால் என்னைப் போலவே ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகர்களில் அவரும் ஒருவர்'' என்றார். இந்த செய்தியை தொடர்ந்து இளையராஜா பயோ-பிக் விரைவில் உருவாகுவது உறுதியாகிய நிலையில் தனுஷும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

ரஜினி -அமிதாப் காம்போ!

cc

Advertisment

"ஜெயிலர்' படத்தை தொடர்ந்து த.செ.ஞான வேல் இயக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை யமைக்கிறார். இப்படம் 2024ஆம் ஆண்டுக்குள் வெளி யாகவுள்ளது. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ள நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியும் கமிட்டாகியுள் ளார். கேமியோ ரோலில் அவர் நடிக்கிறார்.

-கவிதாசன் ஜெ.

nkn090823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe