தனுஷுக்கு ஜோடி!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக "புஷ்பா 2' படத்திலும், வெங்கிகுடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் "ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். மேலும் பா-வுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்துள்ளார். இப்படி படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகி வரும் நிலையில், தற்போது மற்றொரு டாப் ஹீரோவான தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில், கதாநாயகியாக ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. இப்படத்தின் அறிவிப்பு இ
தனுஷுக்கு ஜோடி!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக "புஷ்பா 2' படத்திலும், வெங்கிகுடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் "ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். மேலும் பா-வுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்துள்ளார். இப்படி படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகி வரும் நிலையில், தற்போது மற்றொரு டாப் ஹீரோவான தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில், கதாநாயகியாக ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. இப்படத்தின் அறிவிப்பு இரண்டு ஆண்டுகள் முன்பு வெளியான நிலையில், படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. இந்நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
மஞ்சு ஓ.கே!
"விடுதலை பாகம் 1' வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக படம் முழுக்க வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறதாம். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என தீவிர ஆலோசனை நடத்திய வெற்றிமாறன், ஏற்கனவே "அசுரன்' படத்தில் அவரை பிரமிக்க வைத்த மஞ்சுவாரியரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்துள்ளார். ஆனால் தமிழில் கிடைத்த வாய்ப்புக்கெல்லாம் நடிக்காமல், கதைத் தேர்வில் கறாராக இருக்கும் மஞ்சுவாரியர், வெற்றிமாறன் மீது தனி மரியாதை வைத்துள்ளார். அதனால் அவர் படம் என்பதால் ஆர்வத்துடன் கதை கேட்டதும், உடனே ஓ.கே. சொல்-விட்டார். மேலும் கால்ஷீட்டையும் வாரி வழங்கி, வாத்தியாருக்கு ஜோடியாக படத்தில் வருகிறார்.
"அசுரன்' மூலம் தமிழுக்கு அறிமுகமான மஞ்சுவாரியர், பின்பு "துணிவு' படத்தில் நடித்த நிலையில் தற்போது ஆர்யா -கௌதம்கார்த்திக் கூட்டணியில் உருவாகும் "மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடித்துவருகிறார்.
நாலாவது நம்பிக்கை!
ஏ.எல் விஜய் இயக்கத்தில் "மிஷன் சாப்டர் 1 -அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்து முடித்துள்ள அருண் விஜய், தற்போது பாலா இயக்கும் "வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். பல கட்டங்களாக படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தநிலையில்... தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அருண்விஜய். முதல்படமாக அருண்விஜய் -அறிவழ கன் கூட்டணியில் வெளியான "குற்றம் 23', சூப்பர் ஹிட்டடிக்க தொடர்ந்து "பார்டர்' என்ற தலைப்பில் ஒரு படம் உரு வானது. ஆனால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக் கப்பட்டு கடைசி நேரத்தில் படம் வெளியாமலே போனது. இன்றுவரை இப்படம் வெளியாக வில்லை. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் "தமிழ் ராக்கர்ஸ்' வெப்தொடர் வெளி யானது. இந்நிலை யில் இதுவரை
மூன்றுமுறை கைகோர்த்துள்ள கூட்டணி தற்போது அருண் விஜய்யின் அடுத்த படம் மூலம் நான்காவது முறை கைகோர்க்கிறது. இப்படத்தை "குற்றம் 23' தயாரித்த இந்தர்குமார் தயாரிக்க, அடுத்த வருடம் தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
மீண்டும் சித்தார்த்!
சித்தார்த் நடிப்பில் கடைசி யாக "டக்கர்' படம் வெளியான நிலையில் தற்போது "இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், "டெஸ்ட்' படத்தில் முதன்மை கதாபாத்திரங் களில் ஒருவராகவும் நடித்துவருகிறார். இந்நிலை யில் அவரது தயாரிப்பில் வெளியான "ஜில் ஜங் ஜக்' படத்தை இயக்கிய தீரஜ் வைத்தி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். முதல் படம் டார்க் காமெடி ஜானரில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவானதைத் தொடர்ந்து, அது இந்த படத்திலும் தொடரும் எனக் கூறப்படுகிறது. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்துவருகிறது. தீரஜ்வைத்தி, விஜய் நடிப்பில் உருவாகும் "-யோ' படத்தில் லோகேஷ் கனகராஜ், ரத்னா குமார் ஆகி யோருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
-கவிதாசன் ஜெ.