Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஓ.கே. சொன்ன அதிதிராவ்!

cc

ஓ.கே. சொன்ன அதிதிராவ்!

cc

சித்தார்த்துடன் ஏற்பட்ட காதலால்... தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவந்த அதிதி ராவுக்கு... சரியான கதைக்களம் கிடைக்காததால், தமிழில் நடிப்பதற் கான வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில், "கடாரம் கொண்டான்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போக... உடேன நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சப்ஜெக்டாம்.

Advertisment

இழுபறி!

செல்வராகவன், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் இயக்குநராக "நானே வருவேன்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக "7ஜி ரெயின்போ காலனி 2' எடுக்கவுள்ளார். அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணியில் பிசியாக உள்ளார். இப்படத்தை முதல் பாகம் எடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ரவி கிருஷ்ணாவே இதிலும் நடிக்கிறார். செல்வராக வனின் ஆஸ்தான இசையமைப் பாளரான யுவன்ஷங்கர் ராஜா இச

ஓ.கே. சொன்ன அதிதிராவ்!

cc

சித்தார்த்துடன் ஏற்பட்ட காதலால்... தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவந்த அதிதி ராவுக்கு... சரியான கதைக்களம் கிடைக்காததால், தமிழில் நடிப்பதற் கான வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில், "கடாரம் கொண்டான்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போக... உடேன நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சப்ஜெக்டாம்.

Advertisment

இழுபறி!

செல்வராகவன், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் இயக்குநராக "நானே வருவேன்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக "7ஜி ரெயின்போ காலனி 2' எடுக்கவுள்ளார். அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணியில் பிசியாக உள்ளார். இப்படத்தை முதல் பாகம் எடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ரவி கிருஷ்ணாவே இதிலும் நடிக்கிறார். செல்வராக வனின் ஆஸ்தான இசையமைப் பாளரான யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் பாகத்தில் சோனியா அகர்வால் கதைப்படி இறந்து விட்டதால் இரண்டாம் பாகத்தில் வேறொரு கதாநாயகியைத் தேடி வருகிறார்கள். பல ஹீரோயின் களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்... அதிதி ஷங்கரிடம் நடத்திய பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட கைகூடி யது. படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம்வார தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதிதி ஷங்கர், விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிசியாக இருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமூகமாக முடிந்த பேச்சுவார்த்தை கால்ஷீட் பிரச்சனை காரணமாக இழுபறியில் உள்ளது.

Advertisment

வி.சே.யால் குஷி!

முன்னணி ஹீரோவாக வலம்வந்தாலும், முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய் என மூவருக்கும் வில்லனாக நடித்துவிட்டார் விஜய்சேதுபதி. இதனால் வில்லன் பட வாய்ப்புகளும் வந்து குவிய... கோலிவுட்டைத் தாண்டி டோலிவுட் மற்றும் பாலிவுட் வரை சென்றுள்ளார். இந்நிலையில் கடைசியாக தமிழில் கமலுடன் மோதிய விஜய்சேதுபதி அடுத்ததாக கார்த்தியுடன் மோதப்போகிறார். "சர்தார் 2' படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. கதையை எழுதி முடித்துள்ள பி.எஸ்.மித்ரன், வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதிதான் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்து, அவரிடம் கதை கூறியுள்ளார். கதையைக் கேட்ட விஜய்சேதுபதி, கதாபாத்திரம் வலுவாக இருப்பதாகக் கூறி ஓ.கே. சொல்லியுள்ளார். இதனால் நினைத்த வில்லன் கிடைத்துவிட்டார் என குஷியில் உள்ளார் பி.எஸ்.மித்ரன்.

இனி ஆர்யா!

"காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' சரியாகப் போகவில்லை என்ற காரணத்தால் கவலையில் இருக்கும் ஆர்யா, கைவசம் "மிஸ்டர் எக்ஸ்' படத்தை வைத்துள்ளார். கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுவாரியருடன் அவர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுபோக பா.ரஞ்சித் இயக்கத்தில் "சார்பட்டா 2' படத்திற்கு தயாராகிவருகிறார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் விஜய்ஆண்டனியை வைத்து "கொலை' படம் இயக்கிய பாலாஜி கே.குமார் இயக்கத்தில் ஆர்யா ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் முதலில் கமிட்டாகியிருந்தது விஜய்சேதுபதி. சில காரணங்களால் அவர் விலகவே படம் கைவிடப்பட்டது. பிறகு அண்மையில் ஆர்யாவைச் சந்தித்த பாலாஜி, அந்த கதையை கூறவே மிகவும் இம்ப்ரஸான ஆர்யா, தான் நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். அதனாலேயேதான் "கொலை' பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்யா கலந்து கொண்டுள்ளார். விரைவில் படத்தின் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

"90'ஸ் சங்கமம்!

cc

90-களில் கதாநாயகிகளாக ஜொலித்த பலரும் தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ற கதை அமையும் பட்சத்தில் லீட் ரோலிலும் நடிக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகைகளாக மின்னிய சிம்ரன், ரேவதி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் ஒரு இந்தி வெப் சீரிஸிற்காக கை கோர்த்துள்ளனர். "நோட்டோரியஸ் கேர்ல்ஸ்' (சர்ற்ர்ழ்ண்ர்ன்ள் ஏண்ழ்ப்ள்) என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரிஸ், கல்லூரி வாழ்க்கையில் பெண்களின் நட்பை மையப்படுத்தி உருவாகிறது. இளம் வயதிலிருந்து முதிர்ந்த வயதுவரை நடக்கும் கதை என்பதால் முக்கிய கதாபாத்திரத்தில் மூன்றுபேரும் நடிக்கின்றனர். இளம் வயது கதாபாத்திரத்தில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகின்றனர். டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஷோனா- போஸ் இயக்கும் இப்படத்தை அமேசான் நிறுவனம் தங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.

-கவிதாசன் ஜெ.

nkn290723
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe