டூரிங் டாக்கீஸ்! - குட் பிரதர்ஸ்!

surya karthi

னக்கு சினிமா டைட்டிலில் பட்டப்பெயர் தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிற சூர்யாவுக்கு பொதுவானவர்களிடமிருந்து "நல்ல பெயர்' கிடைத்துக்கொண்டேயிருக்கிறது.

surya

தனது தாயார் பெயரில் மாணவர்களுக்கு உதவி செய்துவந்தார் சிவக்குமார். அவரின் பிள்ளைகளான சூர்யாவும், கார்த்தியும் "அகரம் பவுண்டேஷன்' மூலமும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளைச் செய்துவருகிறார்கள். அதிலும் கல்விச்சேவையில் சூ

னக்கு சினிமா டைட்டிலில் பட்டப்பெயர் தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிற சூர்யாவுக்கு பொதுவானவர்களிடமிருந்து "நல்ல பெயர்' கிடைத்துக்கொண்டேயிருக்கிறது.

surya

தனது தாயார் பெயரில் மாணவர்களுக்கு உதவி செய்துவந்தார் சிவக்குமார். அவரின் பிள்ளைகளான சூர்யாவும், கார்த்தியும் "அகரம் பவுண்டேஷன்' மூலமும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளைச் செய்துவருகிறார்கள். அதிலும் கல்விச்சேவையில் சூர்யா ஈடுபட்டுவருவது அவரின் மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா... ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.

karthi

""நமது நாடு முன்னேறிய நாடாக இருந்தாலும் தேவையான அளவிற்கு கழிவறைகள் இல்லை. அதிலும் தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமை ரொம்ப மோசம். அதனால் தமிழகம் முழுக்க 400 அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சீரமைப்பதுடன், தண்ணீர் வசதியும் செய்து தரப்படும்'' என ஒரு "ஆரோக்கியமான' செயலை தன் பிறந்தநாளில் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த கழிப்பறைகள் சரியான முறையில் சீரமைக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் ஒரு கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தவிருக்கிறார் சூர்யா. இந்த சேவையில் தனது ரசிகர்களையும் ஈடுபடுத்தவிருக்கிறார்.

சமூகத்திற்கு அட்வைஸ் செய்வது மாதிரி நடித்தால் மட்டும் போதாது... குறைந்தபட்சம் சொன்னதில் ஓரிரு விஷயங்களையாவது கடைப்பிடிக்க வேண்டும்.

"விவசாயியாக இருப்பதற்கு பெருமைப்படு' என "கடைக்குட்டி சிங்கம்' படத்தில் வலியுறுத்தி நடித்த கார்த்தி... படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில்... விவசாயம் செழிக்க முன்முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஐந்து விவசாயிகளை தேர்வு செய்து, தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.

விவசாயத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்தப் படத்தை தயாரித்த சூர்யாவின் "2-டி' நிறுவனம் சார்பில்... தமிழக விவசாயிகள் மேம்பாட்டிற்காக ஒருகோடி ரூபாயை வழங்கியிருக்கிறார் சூர்யா.

தமிழகம் முழுக்க பல்லாயிரம் மரக்கன்றுகளை நட்டு பூமி வெப்பமயமாதலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவரும் விவேக்... விவசாயிகள் மேல், விவசாயம் மேல் சூர்யாவும் கார்த்தியும் அக்கறை கொண்டு செயல்படுவதைப் பாராட்டியிருக்கிறார்.

சூர்யா-கார்த்தி சகோதரர்களை நாமும் பாராட்டுவோம்.

""குட் பிரதர்ஸ்''.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn31-07-2018
இதையும் படியுங்கள்
Subscribe