தாராளம் ஏராளம்!
"சீதா ராமம்' மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான மிருணாள் தாக்கூர், தற்போது தெலுங்கில் நானியுடன் ஒரு படம், விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என 2 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து, சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அது சுமூகமாக முடிந்துள்ள தாம். மேலும் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி றாராம். இதனால் பாலிவுட்டை தாண்டி தென் னிந்தியாவிலும் தனது மார்க்கெட் உயரும் என தனது நெருங்கிய வட்டாரத்தில் குஷியாக கூறிவருகிறார். மேலும் அதே குஷியோடு, தான் புதிதாக கமிட் செய்யும் படங்களுக்கு, இதுவரை வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு கூட்டியுள்ளாராம். இதற்கு அண்மையில் வெளியான "லஸ்ட் ஸ்டோரிஸ் 2' தொடரில் தாராளம் காட்டி நடித்ததும் ஒரு காரணமாம்.
கதைக்காக வெயிட்டிங்!
"தங்கலான்' படத்தைத் தாண்டி, வேறு எந்த படமும் கமிட் செய்யவில்லை விக்ரம். அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். பா.ரஞ் சித் இயக்கத்தில் நடித்து முடித்த அவர், அடுத்ததாக லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்கு நராக பணி யாற்றிய மகேஷ் பால சுப்ர மணியம் இயக்கத்தில் ஒரு படம் பண்ணவுள்ளாராம். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தற்போது "லியோ' பட பணிகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு விக்ரம் படத்திற்கு கதை எழுதத் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை "7 ஸ்க்ரீன் ஸ்டூடி யோஸ்' லலித் தயாரிப்பதாக பேச்சுக்கள் இருக்கிறது.
பாலிவுட் என்ட்ரி!
"மாவீரன்' படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க காஷ்மீரில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடக்கிறது. ராணுவ வீரராக சிவகார்த்தி கேயன் வருகிறார். கதைப்படி ஹீரோவுக்கு இணையான பவர்ஃபுல்லான கதாபாத்திரமாம் வில்லன். அதனால் வில்லனாக பல பேரை தேடியுள்ள படக்குழு, இறுதியாக "விஸ்வரூபம்' படத்தில் மிரட்டிய ராகுல்போஸை தேர்வு செய்துள்ளனர். இதை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் பண்ணவுள்ளார் சிவகார்த்தி கேயன். இது ஒருபுறமிருக்க, அவரது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கோலிவுட்டைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. "மாவீரன்' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு "மகாவீருடு' என்ற தலைப்பில் வெளி யாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
சிம்பு 50!
நடிகர், இயக்கு நர், பாடகர் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய சிம்பு, நடிகராக அரைசதம் அடிக்கவுள்ளார். இப்போது தனது 48வது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் நடித்துவருகிறார். இதையடுத்து 49வது படமாக, "அடங்க மறு' இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நட்புக்காக ஓ.கே!
தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு இந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தெலுங்கு இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் "உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்திருந்த நிலையில், மீண்டும் அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோவாக ராம்சரண் நடிக்கிறார். "ஆர்.ஆர்.ஆர்.' படத்திற்குப் பிறகு உலக அளவில், ராம்சரண் கவனம் ஈர்த்துள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. அதனால் பெரிய பிரபலங்களையே அவர் படத்திற்கு புக் செய்து வருகிறார்கள். புச்சிபாபுவும், விஜய்சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணி அவரை அணுகியுள்ளார். ஏற்கனவே "உப்பெனா' படத்தில் அவருடன் நல்ல நட்பிலிருந்த விஜய் சேதுபதி, அதன் காரணமாகவும் கதா பாத்திரம் வலுவானதாக இருப்பதாகவும் கருதி, நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார்.
-கவிதாசன் ஜெ.