Advertisment

டுரிங் டாக்கீஸ் மீண்டு வருக!

dd

மீண்டு வருக!

samantha

Advertisment

கடந்த ஆண்டு தசை அலர்ஜி நோயால் பாதிக்கப் பட்டதை அறிவித்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் சமந்தா. இந்நிலையில் மேலும் ஒரு ஷாக் செய்தியை அறிவிக்கவுள்ளாராம். நோயிலிருந்து குண மடைந்தாலும் கோவில், சர்ச் என வழிபாட்டுத் தளங்களில் தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்து வந்தார். இதனிடையே தான் கமிட்டான படங்களில் மட்டும் நடித்தார். அவை அனைத்தும் தற்போது முடிந்த நிலையில் பூரண குணமடைய சுமார் 1 வருட காலம் சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளாராம். அதனால் புதிதாக எந்த ஒரு படத்துக்கும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் சில படங்களுக்கு அட் வான்ஸ் வாங்கியிருந்தாராம், அதை யும் திருப்பி கொடுத்துவிட்டாராம். சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுக்கும் கேப்பில் கூடுதல் சிகிச்சை பெறவும் திட்டமிட்

மீண்டு வருக!

samantha

Advertisment

கடந்த ஆண்டு தசை அலர்ஜி நோயால் பாதிக்கப் பட்டதை அறிவித்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் சமந்தா. இந்நிலையில் மேலும் ஒரு ஷாக் செய்தியை அறிவிக்கவுள்ளாராம். நோயிலிருந்து குண மடைந்தாலும் கோவில், சர்ச் என வழிபாட்டுத் தளங்களில் தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்து வந்தார். இதனிடையே தான் கமிட்டான படங்களில் மட்டும் நடித்தார். அவை அனைத்தும் தற்போது முடிந்த நிலையில் பூரண குணமடைய சுமார் 1 வருட காலம் சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளாராம். அதனால் புதிதாக எந்த ஒரு படத்துக்கும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் சில படங்களுக்கு அட் வான்ஸ் வாங்கியிருந்தாராம், அதை யும் திருப்பி கொடுத்துவிட்டாராம். சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுக்கும் கேப்பில் கூடுதல் சிகிச்சை பெறவும் திட்டமிட்டுள்ளதாக திரை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமந்தா ரசிகர்கள் சற்று வருத்தத் தில் இருக்க, விரைவில் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பெர்மிஷன் ஓ.கே.!

மலையாளத்தில் "2018' என்ற பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தவர் இயக்குநர் ஜூட் அந்தோனி ஜோசப். உலகம் முழுவதும் மொத்தம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படும் இப்படம், கேரள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் பண்ண கமிட்டாகியுள்ளார் ஜூட் அந்தோனி ஜோசப். பான் இந்தியா படமாக இப்படம் உருவாவதால் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒவ்வொரு ஹீரோவை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் நிவின் பாலியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் நடிக்கவுள்ளார்கள்.

cinema

மலையாள மோகம்!

Advertisment

இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுத்த த்ரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக "லியோ' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக "ஏகே 62' படத்திலும் தனுஷின் 50வது படத்திலும் கமிட்டாகியுள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து மலையாளத்திலும் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். அகில் பால் மற்றும் அனாஸ் கான் இருவரின் இயக்கத்தில் "ஐடென்டிட்டி' என்ற தலைப்பில் ஒரு படம் பண்ணவுள்ளார் டோவினோ தாமஸ். இக்கூட்டணி ஏற்கனவே 'ஃபாரன்சிக்' என்ற வெற்றி படத்தைக் கொடுத்துள்ளது. இதையடுத்து மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள் ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் த்ரிஷாவை அழைத்துள்ளார்கள். கதையை கேட்ட த்ரிஷா கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போக உடனே ஓ.கே. சொல்லிவிட்டார். முன்னதாக நிவின் பாலி நடிப்பில் வெளி யான "ஹே ஜூட்' படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் "ராம் பார்ட் 1' படத்தில் நடிக்கிறார்.

பிஸி இசைப்புயல்!

மாரி செல்வராஜ், "வாழை' படத்தில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு துருவ் விக்ரம் படத்தை ஆரம்பிக்கவுள்ளார். படப்பிடிப்பிற்கு காத்திருக்கும் துருவ் விக்ரம், இதை முடித்துவிட்டு "டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஒரு படம் பண்ண கமிட்டாகியுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க இசை யமைப்பாளராக ஏ.ஆர் ரஹ்மானை புக் செய்துள்ளார்களாம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசை யமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் "லால் சலாம்', ஜெயம் ரவியின் "ஜீனி' உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைக்கிறார். இதுபோக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

சிங்கிள் ஷெட்யூல்!

தனது 50வது படத்தின் மூலம் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளார் தனுஷ். அண்மையில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் சென்னையில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வரும் நிலையில் படப்பிடிப்பிற்காக 100 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்து படமாக்கி வருகிறார்கள். ஒரே ஷெட்யூலில் முடிக்கவும், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கே நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

- கவிதாசன் ஜெ.

nkn120723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe