குவியும் வாய்ப்பு!
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகை தந்த நயன்தாரா, அசின், பாவனா உள்ளிட்ட சில நடிகைகள் வெற்றிகரமாக கோலிவுட்டையும் கலக்கினர். தற்போது தீவிரமாக அதை பின்பற்றத் தொடங்கியிருக்கிறாராம் மடோனா செபாஸ்டின். "காதலும் கடந்து போகும்', "கவண்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு இமேஜை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது லியோ படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இமேஜோடு சேர்த்து மார்க்கெட்டும் உயரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு வித்தாக பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அந்த வகையில் அருள்நிதி படத்துக்கு கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இப்படத்தை "ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லக்ஷ்மனின் உதவியாளர் ஒருவர் இயக்குகிறார். அருள்நிதி கரியரில் அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விறு விறு தேர்வு!
தனது செகண்ட் இன்னிங்சில் இருக்கும் நயன்தாரா கைவசம் ஷாருக்கானின் "ஜவான்', ஜெயம் ரவியின் "இறைவன்', மாதவனின் 'டெஸ்ட்' உள்பட ஏகப்பட்ட படங்களை வைத்துள் ளார். இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இப்படம் தயாரிக்கப்படுகிறது. முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க, யூட்யூபர் டியூட் விக்கி இயக்குகிறார். "மண்ணாங்கட்டி' எனத் தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக் கத்தில் கொடைக்கானலில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதனால் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தேர்வு முழுவீச்சில் நடைபெறுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_222.jpg)
அனுராக் என்ட்ரி!
விஜய்யை வைத்து "லியோ' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனக ராஜ், படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். மேலும், மல்ட்டி ஸ்டார் படம் என்பதால் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களை களம் இறக்கியுள்ளார். ஏற்கெனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய பட்டாளமே இருக்கும் நிலையில், அண்மையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை புக் செய்துள்ளதாக தகவல் வெளியானது. . மேலும் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி யுள்ளது. விஜய் போர்ஷன் முழுவதும் முடிந்துள்ளது. இன்னும் சில படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதால் அதனை காஷ்மீரில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதில் தான் அனுராக் காஷ்யப் கலந்து கொள்கிறார். அங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பு நடக்கிறது என விவரிக்கின்றார்.
ஆத்மிகா அவுட்!
"மீசையமுறுக்கு' படத்தில் நிலாவாக அறிமுகமான ஆத்மிகா, நிலவு போன்று வெளிச்சம் பெற வில்லை. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் இருளில் மூழ்கின. மேலும் ஒரு படம் வெளிச்சத்துக்கே வராமல் போய்விட்டது. இதனால் இருண்டு
கிடந்த ஆத்மிகா அவ்வப்போது தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் மனம் தளராமல் வெளிச்சம் பிறக்கும் என்ற நம்பிக்கையில், வருகின்ற வாய்ப்பு பிடித்திருந்தால் அதற்கு நோ சொல்வதில்லை. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக "ஹிட்லர்' படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருந்தார். இப்படத்தை விஜய் ஆண்டனி - ஆத்மிகா இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்த "கோடியில் ஒருவன்' படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, 'படைவீரன்' இயக்குநர் தனா இயக்கி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுத்த ஆத்மிகா திடீரென்று வர மறுத்துவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு வேறு ஹீரோயினை புக் செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
பிரமாண்ட பாடல்!
சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் "கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் சென்னையில் படப்பிடிப்பு நடத்திய படக்குழு ஒரு பிரம்மாண்ட செட் போட்டு கிட்டத்தட்ட 200 நடனக் கலைஞர்களை வைத்து ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியுள்ளது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/cinema-t_0.jpg)