நாகசைதன்யாவுடன் டூயட்!

cc

லீட் ரோல் மற்றும் ஹீரோயின் என இரண்டு கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் சிரஞ்சீவியின் 'போலா சங்கர்', தமிழில் ஜெயம் ரவியின் 'சைரன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் லீட் ரோலில் 'கே.ஜி.எஃப்' பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே, தமிழில் தயாரிக்கும் முதல் படமான 'ரகு தாத்தா' மற்றும் சந்துரு இயக்கும் ஒரு படம் என கைவசம் வைத்துள் ளார். இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிக ரான நாக சைதன்யாவுக்கு முதல் முறையாக ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தை தொடர்ந்து ‘'கார்த்தி கேயா 2'’ படத்தை இயக் கிய சந்து மொண் டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளார். கீதா ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரிக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' நல்ல வரவேற்பைப் பெற, அப் படத்தை பார்த்த படக்குழு மிகவும் இம்ப்ரஸாம். அதனால் அவர் தங்கள் படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என எண்ணி கீர்த்தியை அணுகியுள்ளனர். முன்னதாக கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்த நடிகையர் திலகம் படத்தில் நாக சைதன்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் சிக்குமா?

Advertisment

c

வடக்கில் மட்டும் அதிகமாக வலம் வந்த மிருணாள் தாக்கூர், 'சீதா ராமம்' மூலம் தெற்கு பகுதிகளி லும் காலடி எடுத்து வைத்தார். இதனால் தென்னிந்திய பகுதியான தெலுங்குப் பகுதிகளில் அதிகம் வாய்ப்பு வர, நானியுடன் ஒரு படம், விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என பிசியாகி விட்டார். அப்படி பிஸியான அவரை தமிழுக்கு அழைத்து வர தற்போது முயற்சி கள் நடந்து வருகிறது. முன்ன தாக சூர்யா - சிவா கூட்டணி வலையை விரித்ததாக கிசுகிசுக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி வலை வீசியுள்ளதாக கோலிவுட் கடலில் முணுமுணுக்கப்படு கிறது. இந்த தூண்டிலுக்கு மீன் சிக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

தேவை ஒரு ஹிட்!

Advertisment

இயக்குநர் ஹரி, விஷாலின் 34வது படத்தை இயக்க முழு வீச்சில் செயல் பட்டு வருகிறார். ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி யுள்ள அவர் ஏற்கனவே அவருடன் பணியாற்றிய கலைஞர்களையே கமிட் செய்து வருகிறார். அந்த வகையில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கரை புக் செய்த அவர் தற்போது இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். ஹரி இயக்கத்தில் இதுவரை சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட ஹீரோக் களுக்கு இசையமைத்த டி.எஸ்.பி. இப்போது விஷாலுக்கும் இசையமைக்கிறார்.

கனவு பலிச்சிடுச்சு!

'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி தற்போது 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்தி ரத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட ஹீரோக்கள் நடிக்க படப்பிடிப்பு முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகுவதால் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித் துள்ளார். இதை தொடர்ந்து அண்மையில் 90ஸ் ஹீரோயினான நிரோஷா இணைந்தார். ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிலையில் அவரது கதாபாத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். இவரது போர்ஷன் அனைத்தும் படமாக்கப் பட்டுள்ளது. நிரோஷாவின் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அது அப்போது நடக்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த ஆசை நிறைவேறி யுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நிரோஷா.

- கவிதாசன் ஜெ.