Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஐந்தாவது ரவுண்ட்!

cc

ஐந்தாவது ரவுண்ட்!

நடிப்பைத் தாண்டி பைக்கிலேயே உலகச் சுற்றுலா சென்று கொண்டிருக் கிறார் அஜித். அந்த அனுபவத்தை வைத்து "ஏகே மோட்டோ ரைடு' என ஒரு சுற்றுலா நிறுவனமும் ஆரம்பிப்பதாக அறிக்கை விட்டிருந்தார். மீண்டும் சினிமா பக்கம் திரும்பியவர், துணிவு படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை பிடிக்காமல் போகவே அந்த படம் டிராப் ஆகி விட்டது. இதை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி சொன்ன கதை பிடித்துப்போகவே அந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பிட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியுள்ளாராம். தனது ஆஸ்தான இயக்குநரான சிவா இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்றும், அப்படி இந்த கூட்டணி இணைந்தால் வீரம், வேதாளம், விவேகம், விஸ

ஐந்தாவது ரவுண்ட்!

நடிப்பைத் தாண்டி பைக்கிலேயே உலகச் சுற்றுலா சென்று கொண்டிருக் கிறார் அஜித். அந்த அனுபவத்தை வைத்து "ஏகே மோட்டோ ரைடு' என ஒரு சுற்றுலா நிறுவனமும் ஆரம்பிப்பதாக அறிக்கை விட்டிருந்தார். மீண்டும் சினிமா பக்கம் திரும்பியவர், துணிவு படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை பிடிக்காமல் போகவே அந்த படம் டிராப் ஆகி விட்டது. இதை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி சொன்ன கதை பிடித்துப்போகவே அந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பிட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியுள்ளாராம். தனது ஆஸ்தான இயக்குநரான சிவா இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்றும், அப்படி இந்த கூட்டணி இணைந்தால் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களுக்குப் பிறகு சிவா - அஜித் இணையும் ஐந்தாவது படமாக இப்படம் அமையும்.

Advertisment

cc

ரஜினி-யாஷ் கூட்டணி!

கே.ஜி.எப். இரண்டு பாகங்களில் நடித்து மாபெரும் வெற்றியைப் பார்த்த பிறகு யாஷ் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. மீண்டும் ஒருவேளை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் "சலார்' படம் வெளியானதும், அவரது இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கக் காத்திருக்கிறார் என்று கூட பேசப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப் பூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தில் யாஷ் நடிக்கப் போவதாகவும், இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், லைகா புரொடக்சன் தயாரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ரஜினி "ஜெயிலர்' படத்திற்கு பிறகு "லால் சலாம்', இயக்குநர் ஞானவேல்ராஜா இயக்கும் படத்தை முடித்துவிட்டு யாஷ் உடன் இணைந்து நடிக்கலாம். ரஜினி - யாஷ் இணைந்து நடித்தால் மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும்.

மீண்டும் லியோ!

விஜய் நடிக்கும் ’லியோ’ படப்பிடிப்பு தீவிரமாக நடை பெற்றுவருகிறது. மிகப்பிரம்மாண்டமான செட் போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்படவிருந்த சூழலில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், படத்தில் இணைந்த மடோனா செபாஸ்டின் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. படத்தில் விஜயின் தங்கையாக நடிக்கிறாராம். மேலும், அர்ஜுனும், சஞ்சய் தத்தும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது லியோ படத்தின் கூடுதல் அப்டேட்.

Advertisment

cc

டிமிக்கி நடிகர்கள்!

படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு முன் பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்பிற்கு வராமல் இருப்பது, சரியான நேரத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது, போஸ்ட் புரொடக்சன் பணிகளின் போது டப்பிங் பேச வராமல் இருப்பது, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதாகக்கூறி படப்பிடிப்பை தள்ளி வைக்க அழுத்தம் தருவது போன்ற பல காரணங்களால் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத 5 முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் முடிவில் அந்த 5 முன்னணி நடிகர்கள் யார் என்று தெரிவிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, விஷால், அதர்வா, யோகிபாபு ஆகிய ஐந்து பேருக்கு எதிராகத்தான் தயாரிப்பாளர் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்கிற தகவல் நமக்கு தெரிய வருகிறது. இதைப்போலவே சிம்பு, விஷால் ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுப்பது ஏற்கனவே நடந்திருக்கிறது. காலம் கடந்து நீக்கவும் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

விரைவில் வெளியீடு!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த படம் "துருவ நட்சத்திரம்'. ரீத்துவர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பெரும் பட்டாளமே நடித்த இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் வெளியீடு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லா நிலையில் படத்தில் பி.ஜி.எம். பணிகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆரம்பித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் படத்தில் கதாநாயகனே கதையை நகர்த்திப் போகிற தன்மையும், அடிக்கடி ஒலிக்கும் பின்னணிக் குரலும் இதில் இல்லையாம். அத்தோடு மூன்று மணி நேரத்தை நெருக்கும் கால அளவும் இல்லாமல் சரியாக இரண்டரை மணி நேரத்தில் முடிந்துவிடுகிற அளவில் தயாராகி வருகிறதாம், விரைவில் வெளியீடு குறித்த அறிவிப்பு வரலாம்.

-தாஸ்

nkn240623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe