Advertisment

டூரிங் டாக்கீஸ்! கிறிஸ்துமஸ் கிஃப்ட்!

dd

கிறிஸ்துமஸ் கிஃப்ட்!

tt

Advertisment

தமிழ்நாட்டில் பிறந்த ராதிகா ஆப்தே, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். பிரகாஷ்ராஜின் "தோனி', ரஜினியின் "கபாலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய்சேதுபதி படத்தில் நடிக்கிறார். ஆனால் தமிழ் படத்தில் இல்லை. விஜய் சேதுபதி இந்தியில் நடிக்கும் "மெர்ரி கிறிஸ்துமஸ்' படத் தில் ஒரு முக் கியமான கேமியோ ரோலில் நடிக் கிறார். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இப்படத்தில் கத்ரீனா கைஃப் கதாநாயகி யாக நடிக்க ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் தலைப்புக்கேற்ப கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் சில காரணங் களால் வெளியாகவில்லை. இதனால் இந்தாண்டு கிறிஸ்துமஸை குறிவைத் துள்ளது படக்குழு.

t

ஓ.டி.டி.யில

ஓ.டி.டி.யில் சசிகுமார்!

"குற்றம்பரம்பரை' நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார் சசிகுமார். இதன்மூலம் இயக்குநராக மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். இதில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், ஜெய் உள்ளிட்டோரை புக் செய்துள்ளார். மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து வந்த சசிகுமார் தெலுங்கு நடிகர் ராணா பொருத்தமாக இருப்பார் என்றெண்ணி அவரை சந்தித்து கதை கூற அவ ருக்கு மிகவும் பிடித்துப்போக நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். இத்தொடரை 11 எபிசோடுகளாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

தலைப்புல வித்தியாசம்!

Advertisment

இசையமைப்பாளர், ஹீரோ என இரட்டை சவாரி செய்யும் விஜய்ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் கூடுதலாக டைரக்ஷன், எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்டவற்றையும் சேர்த்து பயணித்தார். இப்போது சத்தமே இல்லாமல் ஒரு படம் நடித்துவருகிறார். இதனை "படைவீரன்' படத்தை இயக்கிய தனா இயக்க "கோடியில் ஒருவன்' பட தயாரிப்பு நிறுவனம் செந்தூர் ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றனர். படத்திற்கு "ஹிட்லர்' என தலைப்பு வைத்துள்ளனர். தலைப்பு காரணம் என்ன வென்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால், ஹீரோவின் முந்தைய படங்களான "சைத்தான்', "எமன்', "கொலைகாரன்' மற்றும் தற்போது நடித்து வரும் "ரத்தம்', "மழை பிடிக்காத மனிதன்', "கொலை' என படத் துக்கு படம் வித்தியாசமான தலைப்பு அமைந்துவருவதால் மக்களிடம் படத்தின் மீது ஒரு கவனம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் அந்த சென் டிமெண்டை இந்த படத் திலும் பின்பற்று கிறார்களாம்.

கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்கள்!

நெல்சன் இயக்கும் "ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க வுள்ளார். அவரது 170வது படமாக உருவாகும் இப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது. போலீஸ் கதாபாத் திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்ல னாக விக்ரமை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப் பட்டது. அது கைகூடவில்லை. "ஜெயிலர்' படத்தில் தென்னிந்திய ஸ்டார் ஹீரோக்களான மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில்... "ரஜினி 170' படத்தில் நார்த் இந்தியா ஸ்டாரான அமிதாப்பச்சனை படக்குழு அணுகியுள்ளது. கதை கேட்ட அமிதாப், ரஜினி படம் என்பதாலும் தனது கதாபாத்திரம் வலுவானதாக இருப்பதாலும் பச்சைக்கொடி காண்பித்துள்ளார். இரு பெரிய ஸ்டார்கள் இணைந்து நடிக்கவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதுதான் இதா...?

கவின் தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ‘"அயோத்தி'’ மூலம் கவனம்ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை "பியார் பிரேமா காதல்' படத்தை எடுத்த இளன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக் கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்துள்ளது. இப்படம் ஹரிஷ்கல்யாணை வைத்து "ஸ்டார்' என்ற தலைப்பில் இளன் இயக்கி... பின்பு படப்பிடிப்பு தொட ராமல் இருந்த படம் என ஒரு தகவல் உலா வந்துகொண்டி ருக்கிறது.

-கவிதாசன் ஜெ.

nkn170623
இதையும் படியுங்கள்
Subscribe