Advertisment

டூரிங் டாக்கீஸ்! முருகதாஸ் ஹேப்பி!

ss

முருகதாஸ் ஹேப்பி!

"தர்பார்' படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான், விஜய் என பலரிடமும் கதை சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். அது எதுவும் கைகூடவில்லை. இப்போது தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். 2 வருடங்களுக்கு மேலாக படம் இயக்காமலிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படத்தால் சற்று மகிழ்ச்சியில் இருந்தார். இப்போது சற்று வருத்தத்தில் இருக்கிறார். காரணம் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி நடித்து வருவதால் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். என்னவென்று அவரது நெரு

முருகதாஸ் ஹேப்பி!

"தர்பார்' படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான், விஜய் என பலரிடமும் கதை சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். அது எதுவும் கைகூடவில்லை. இப்போது தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். 2 வருடங்களுக்கு மேலாக படம் இயக்காமலிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படத்தால் சற்று மகிழ்ச்சியில் இருந்தார். இப்போது சற்று வருத்தத்தில் இருக்கிறார். காரணம் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி நடித்து வருவதால் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். என்னவென்று அவரது நெருங்கிய வட்டாரத்திடம் விசா ரித்தால், சல்மான்கான் அலுவலகத் திலிருந்து போன் வந்துள்ளது. சல்மான் கான் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதனை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளதால் யோசிக் காமல் ஓகே சொல்லியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுவரை இந்தி யில், தமிழ் படத்தின் ரீமேக்கை எடுத்துவந்த ஏ.ஆர்.முருகதாஸ், முதல் முறையாக நேரடி இந்தி படத்தை இயக்கவுள்ளார். அதனால் ஹேப்பி மூடில் இருக்கிறார்

சிக்குவாரா மீனா?

Advertisment

நடிப்பு, இயக்கம், கதையாசிரியர் என தமிழ் சினிமாவில் வலம் வந்த ராமராஜன், நீண்ட இடைவெளிக்கு பிறகு "சாமானியன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராமராஜனின் 45வது படமாக உருவாகிவரும் இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவருகிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் 46வது படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராமராஜன். இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் என்பவர் இயக்குகிறார். "உத்தமன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வக்கீல் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக மீனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜூனியர் ஜோடி!

cc

"முனி', "காளை', "பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை வேதிகா. கடைசியாக டான்ஸ் மாஸ்டர் டூ ஹீரோ, இயக்குநர் என உருமாறிய லாரன் ஸின் "காஞ்சனா 3' படத்தில் நடித்திருந்தார். இப்படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் மாஸ்டர் டூ ஹீரோ, இயக்குநர் என அதே ஃபார்முலாவில் சீனியராக இருக்கும் பிரபுதேவாவுடன் நடிக்க தற்போது கமிட்டாகி யுள்ளார். "பேட்ட ராப்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சின்னு இயக்குகிறார். நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகவுள்ளது. படப்பிடிப்பு வருகிற 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூனியரின் படம் சரியாக போகாததால், சீனியரின் படம் நமக்கு கைகொடுக்கும் என்று நம்பிக்கையில் உள்ளார் வேதிகா.

கமல் ஓ.கே!

Advertisment

dd

அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவரும் படம் "ப்ராஜெக்ட் கே'. நாக் அஸ்வின் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வருவதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும்விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும், இதுவரை கமல் கரியரில் வாங்காத சம்பளம் படக்குழு பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆஃபருக்கு கமல் கிட்டத்தட்ட ஓ.கே. சொல்லியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. "இந்தியன் 2' வில் பிஸியாக இருக்கும் கமல், அடுத்ததாக அ.வினோத், மணிரத்னம், பா.ரஞ்சித் ஆகியோரின் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn070623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe