கால்ஷீட் சிக்கல்!

"திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு நித்யாமேனன் நடிப்பில் தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அதில் நடித்த "ஷோபனா' கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். அப்படி காத்துக்கொண்டி ருந்த நித்யாமேனனுக்கு வாசல் தேடி வந்துள்ளது ஒரு வாய்ப்பு. "ஜெயம்'ரவி நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி தற்போது வேல்ஸ் ஃபிலிம் தயாரிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். மேலும் எம். ராஜேஷ் இயக்கும் ஒரு பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படங்களில் பிசியாக இருப்ப தால், கிருத்திகா உதயநிதி படத்திற்கு கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜெயம் ரவி அவர் கமிட்டான படங்களை முடித்த வுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வுள்ளது.

ஷெட்டி ரொம்ப கெட்டி!

Advertisment

cc

கார்த்தி தனது 25-வது படமான "ஜப்பான்' படத்தில் நடித்துவருகிறார். ராஜுமுருகன் இயக்கத்தில் அனுஇமானுவேல் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் இந்தி நடிகை காயத்ரி பரத்வாஜ் பெயர் அடிபட்டது. பின்பு தெலுங்கு இளம்நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார் கீர்த்தி ஷெட்டி. முன்னதாக சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கும் "வணங்கான்' படத்தில் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் வெளியேறிவிட்டார். இதனால் தமிழில், தான் கமிட்டான முதல் படம் கைகூடாமல் போன அப்செட்டில் இருந்த கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அண்ணன் சூர்யா படம் கைநழுவிப் போனதால் தம்பி கார்த்தி படத்தை கைவிடக்கூடாதென உடனே இப்படத்திற்கு ஒப்புக்கொண் டுள்ளாராம்.

இப்போது ஜெயம் ரவி நடிக்கும் பான் இந்தியா படத்திலும் கீர்த்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை!

கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்துள்ள ஜெய், சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படியான பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுக்கவில்லை. வெற்றி பெற்றே ஆகவேண்டுமென தீவிரமாக தயாராகி வருகிறார். சினிமாவில் வெற்றிப்பாதைக்காக வில்ல னாகவும் இசையமைப்பாள ராகவும் கூட அவதாரம் எடுத்தார். அது எதிர்பார்த்த வெற்றியை ஜெய்க்கு பெற்றுத்தரவில்லை. இதைப்பார்த்த சசிகுமார், 'சுப்ரமணியபுரம்' படத்தில் ஜெய்யின் நடிப்புக்கு தீனி போட்டது போல் மீண்டும் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் பிசியாக இருந்த சசிகுமார் தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய "குற்றப் பரம்பரை' நாவலை தழுவி ஒரு படம் எடுக்கும் சசிகுமார் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெய்யை அணுகியுள்ளார். சசி குமார் அழைத்ததால், ஜெய் யோசிக்காமல் இப்படத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சுப்ரமணியபுரம் போல் இப்படம் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜெய். இப்படத் தில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனும் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நடிக்கிறார் கள் என்பது குறிப்பிடத் தக்கது.

"ஜெயிலரில்' விக்ரம்?

vv

Advertisment

நெல்சன் இயக்கும் "ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத் தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினியுடன் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவும் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனை முடித்து விட்டு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதனால் இப்படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளிலும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளிலும் பிசியாகவுள்ளார் த.செ ஞானவேல். படத்தின் முக்கிய மான ரோல்களில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். அண்மை யில் சூர்யாவை சந்தித்து 15 நிமிடம் வரும் ரோலில் நடிக்க கேட் டுள்ளார். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இன் னொரு முன்னணி நடிகரான விக்ரமை சந்தித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளார். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

-கவிதாசன் ஜெ.