டூரிங் டாக்கீஸ்! ஜான்விக்காக வெயிட்டிங்!

dfad

ஜான்விக்காக வெயிட்டிங்!

dd

பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்திவந்த ஜான்வி கபூர், தற்போது டோலிவுட் பக்கமும் கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த நிலையில் கோலிவுட் இயக்குநரான அட்லீ இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஆஃபர் வந்துள்ளது. ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கிவரும் அட்லீ, அடுத்ததாக வருண்தவானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் "தெறி' இந்தி ரீமேக்காம். முன்பே இத்தகவல் வந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு ஹீரோயினாக ஜான்வி கபூரை நடிக்க வைக்க முயற்சி செய்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடையில் வெளியிட அட்லீ முடிவு செய்துள்ளார். இதனால் ஜான்வி கபூர் பதிலுக்கு காத்திருக்கிறார் அட்லீ.

ஹாட்ரிக் கூட்டணி!

d

பொன்

பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் தற்போது "தங்கலான்' படத்தில் நடித்துவருகிறார். பா.ரஞ்சித் இயக்கும் இப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச் சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க லைகா நிறுவனம் தயாரிக்க வுள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக "ராவணன்' படத்தில் மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யாராய் கூட்டணி அமைந்தது. பின்னர் "பொன்னியின் செல்வன்' படத்தில் தொடர்ந்தது. இதையடுத்து ஹாட்ரிக் போடவுள்ளது இக்கூட்டணி. மணிரத்னம் தற்போது கமலின் 234-வது படத்தை இயக்கவுள்ளதால் அப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ளார். படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது நவம்பரில் தொடங்கவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு விக்ரம், ஐஸ்வர்யாராய் படத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

விஜய் குட்நியூஸ்!

c

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் "லியோ' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அட்லீயிடம் கூட்டணி அமைக்க இருந்த விஜய், திடீரென தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனியிடம் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இப்படி விஜய்யின் அடுத்த பட இயக்குநர் லிஸ்ட்டில் முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிபட... தற்போது புதிதாக இணைந்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. "மங்காத்தா' முடித்த சமயத்தில் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்குவார் என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அது பேச்சாகவே இருந்துவந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே அஜித்தை வைத்து அவரது ரசிகர்களுக்கு தீனி போட்ட வெங்கட்பிரபு விரைவில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு பேட்டியில், விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் தீனி போடும் வகையில் ஒரு கதை எழுதி வருவதாகவும் விரைவில் விஜய்யை சந்தித்து கூறவுள்ள தாகவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரில்லர் ஜோ!

சமீபகாலமாக தமிழைத் தாண்டி மற்றமொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்திவரும் ஜோதிகா, தற்போது மலை யாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக "காதல்' படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் "ஸ்ரீ' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அஜய்தேவ்கன் நடிப்பில் விகாஸ்பால் இயக்கத்தில், சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ஜோதிகாவோடு இணைந்து மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

கட்டா குஸ்தி ஹேப்பி!

"கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக இருக்கும் தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கத்தில் ஒரு படமும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் அவரது 50-வது படத்தை அவரே இயக்க வுள்ளார். இந்த நிலையில் "கட்டா குஸ்தி' பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இயக்குநர் செல்லாஅய்யாவு, சமீபத்தில் தனுஷை சந்தித்து தனது அடுத்த பட கதையை கூறியுள்ளார். கதையை கேட்டு இம்ப்ரஸான தனுஷ், திரைக்கதை எழுதி முழு ஸ்க்ரிப்டை கொண்டுவரச் சொல்லியுள்ளார். இதனால் தற்போது திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வரு கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

-கவிதாசன் ஜெ.

nkn200523
இதையும் படியுங்கள்
Subscribe