சிங்கிள் டான்ஸ்!
தமிழில் "தாம் தூம்', "வாமனன்', "மங்காத்தா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிராய். தமிழைத் தாண்டி இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்திவந்தார். இப்படி பலமொழிப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தனது பெயரை கூட ராய்லட்சுமி என மாற்றினார். அதன்பிறகும் பெரிதளவு கவனம் ஈர்க்கவில்லை. பின்பு தமிழை தாண்டி மற்ற மொழிகளில் அவர் நடித்த படங்கள் சில ஹிட்டடிக்க, அவரது மார்க்கெட் உயர்ந்தது. இதனால் டைட்டில் ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்க
சிங்கிள் டான்ஸ்!
தமிழில் "தாம் தூம்', "வாமனன்', "மங்காத்தா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிராய். தமிழைத் தாண்டி இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்திவந்தார். இப்படி பலமொழிப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தனது பெயரை கூட ராய்லட்சுமி என மாற்றினார். அதன்பிறகும் பெரிதளவு கவனம் ஈர்க்கவில்லை. பின்பு தமிழை தாண்டி மற்ற மொழிகளில் அவர் நடித்த படங்கள் சில ஹிட்டடிக்க, அவரது மார்க்கெட் உயர்ந்தது. இதனால் டைட்டில் ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய பிறகும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை கடைப்பிடித்து வருகிறார் ராய்லட்சுமி. இது குறித்து அவரிடம் யாரவது கேட்டால், தனக்கு "நடிப்புக்கு இணையாக டான்ஸ் ரொம்ப பிடிக்கும்' என பதிலளிக்கிறாராம்.
விருது விருந்து!
சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணியில் மூன் றாவதாக கடந்த ஆண்டு வெளியான படம் "மாமனிதன்'. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்று வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து 56-ஆவது வேர்ல்ட் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி விருது வாங்கியுள்ளது. ஸ்பெஷல் ஜூரி ரெமி விருது என்ற பிரிவின் கீழ் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பப் படத்திற்காக சீனு ராமசாமிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
"விடாமுயற்சி'யில் அஜித்!
துணிவை தொடர்ந்து தற்போது "விடாமுயற்சி'யில் இறங்கவுள்ளார் அஜித். உலக சுற்றுப் பயணத்தில் இருந்த அஜித், அண்மையில் சென்னை வந்தடைந்துள்ளார். அஜித்தை சந்தித்த "விடாமுயற்சி' படக்குழுவினர் படத்தின் முழு ஸ்க்ரிப்டை கொடுத்துள்ளனர். ஸ்க்ரிப்டை பார்த்த அஜித் ஓ.கே. சொல்லியுள்ளார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதற்கட்டமாக கிட்டத்தட்ட 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு, அதில் அஜித் போர்ஷனை மட்டும் 40 நாட்கள் படமாக்கவுள்ளனர். இப்படத்தை 2024 பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்திருமேனி இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
பரபர... பாண்டிராஜ்!
இயக்குநர் பாண்டிராஜ், அடுத்த பட வாய்ப்புக்கு அலைமோதுகிறார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, விஷால் உள்ளிட்டவர்களிடம் கதை கூறியுள்ளார். அவர்களின் பதிலுக்கு காத்திருக்கிறார். பின்பு விஷால் இவர் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. இப்படத்தை ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன் சார்பாகத் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பதாகவும் பேச்சுகள் அடிபட்டது.
இந்நிலையில் ஜெயம் ரவியை சந்தித்து ஒரு ஒன்லைன் சொல்லியுள்ளார் பாண்டிராஜ். அது ஜெயம் ரவிக்கு பிடித்துப்போக முழு கதையை ரெடி பண்ணச் சொல்லி பாண்டிராஜிடம் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த பாண்டிராஜ், அதே உற்சாகத்துடன் தனது உதவி இயக்குநர் டீமுடன் ஸ்க்ரிப்ட் எழுதும் பணிகளில் இறங்கியுள்ளார்.
பார்க்கிங் ரெடி!
நடிகர் ஹரிஷ்கல்யாண், "நூறு கோடி வானவில்', "டீசல்', "லெட்ஸ் கெட் மேரீட்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்த நிலையில் மற்றொரு புதிய படத்தில் சத்தமில்லாமல் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை "பலூன்' பட இயக்குநர் சினிஷ் தயாரிக்க அவரது உதவி இயக்கு நர் ஒருவர் இயக்குகிறார். ஹரிஷ்கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். படத்திற்கு "பார்க்கிங்' என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறது.
-கவிதாசன் ஜெ.