சமந்தா ஹேப்பி!
தென்னிந்திய அளவில் டாப் ஹீரோக்களு டன் ஜோடி போட்டு கொடிகட்டிப் பறப்பவர் சமந்தா. ஆனால் அந்த கொடி தற்போது சற்று இறங்கியுள்ளதாக முணுமுணுக்கப்படுகிறது. அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களைத் தவிர முன்புபோல் பாசிட்டிவ் வைப் அவரைச் சுற்றி இல்லையாம். மேலும் சமீபத்தில் வெளியான "சாகுந்தலம்' படம் தோல்வியைத் தழுவ, அவரது மார்க்கெட் சற்று இறங்கிவிட்டதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. இதெல்லாம் சமந்தா காதுக்குப் போக அவர் மிகவும் அப்செட்டாம். இப்படித் தொடர்ந்து நெகட்டிவ் தகவல்களைக் கேட்டு வந்த சமந்தாவுக்கு, அவரை குஷிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் சமந்தாவின் ரசிகர் ஒருவர், சமந்தா தொடர்ந்து வெற்றிபெற மற்றும் நல்லபடியாக கரியர் இருக்க... அவரது வீட்டில் கோவிலைக் கட்டியுள்ளார். இதனை கடந்த ச
சமந்தா ஹேப்பி!
தென்னிந்திய அளவில் டாப் ஹீரோக்களு டன் ஜோடி போட்டு கொடிகட்டிப் பறப்பவர் சமந்தா. ஆனால் அந்த கொடி தற்போது சற்று இறங்கியுள்ளதாக முணுமுணுக்கப்படுகிறது. அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களைத் தவிர முன்புபோல் பாசிட்டிவ் வைப் அவரைச் சுற்றி இல்லையாம். மேலும் சமீபத்தில் வெளியான "சாகுந்தலம்' படம் தோல்வியைத் தழுவ, அவரது மார்க்கெட் சற்று இறங்கிவிட்டதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. இதெல்லாம் சமந்தா காதுக்குப் போக அவர் மிகவும் அப்செட்டாம். இப்படித் தொடர்ந்து நெகட்டிவ் தகவல்களைக் கேட்டு வந்த சமந்தாவுக்கு, அவரை குஷிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் சமந்தாவின் ரசிகர் ஒருவர், சமந்தா தொடர்ந்து வெற்றிபெற மற்றும் நல்லபடியாக கரியர் இருக்க... அவரது வீட்டில் கோவிலைக் கட்டியுள்ளார். இதனை கடந்த சமந்தா வின் பிறந்தநாளன்று திறந்துள்ளார். இத்தகவலை கேட்ட சமந்தா ரொம்ப ஹேப்பியாம். இதனால் நெகட்டிவ் விமர்சனம் பல வந்தாலும் அதனை ஓரங்கட்டி வைத்துவிட்டு ரசிகருக்காக முழு கவனத் துடன் செம எனர்ஜியாக நடித்து வருகிறாராம். இப்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா வுக்கு ஜோடியாக "குஷி' படத்தில் நடிக்கிறார்.
சம்மதமா சூர்யா?
நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்' படத்தில் நடித்துவரும் ரஜினி, அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து "ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்க்ரிப்ட் பணிகளில் பிசியாக இருக்கும் த.செ ஞானவேல், இப்படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து த.செ ஞானவேல் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால், கதைப்படி 10-15 நிமிடம்வரை ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதில் ஒரு முன்னணி நடிகர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து சூர்யாவை டிக் செய்து வைத்துள்ளார். இப்போது அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கமலின் "விக்ரம்' படத்தில் ரோலக்சாக என்ட்ரி கொடுத்த சூர்யா, கமலுக்காக அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் ரஜினிக்கும் ஒப்புக்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தயாரிப்பாளர் ஜீவா!
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் ஜீவா. ஐசரிகணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா, இதுவரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். தயாரிப்பில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக தயாரிப்பாளராக கள மிறங்கவுள்ளார் ஜீவா. இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்க, ஜீவாவே ஹீரோவாக நடிக்கிறார். இசை பணிகளை யுவன்ஷங்கர் ராஜா கவனிக்கிறார். இப்படம் ராஜேஷ் இயக்கிய முந்தைய படங் களைப் போலவே காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான "சிவா மனசுல சக்தி' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 20 வருடங்கள் கழித்து இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. ராஜேஷ், தற்போது ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை முடித்துவிட்டு ஜீவா படத்தைத் தொடங்கவுள்ளார்.
நடிப்பிலும் பிஸி!
மணிரத்னம் இயக்கிய "பம்பாய்', "குரு', "கடல்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதி வாளராக பணியாற்றியவர் ராஜீவ் மேனன். பின்பு 'மின்சார கனவு' மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து, தொடர்ந்து "கண்டு கொண்டேன் கண்டுகொண் டேன்', "சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங் களை இயக்கி னார். சமீ பத்தில் "விடுதலை' படம் மூலம் நடிகராக மாறினார். தற்போது நடிப்பதற்கான வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது 2 படங்களில் ராஜீவ்மேனன் நடித்து வரு கிறார். குகன் சென்னியப்பன் என்பவரின் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடிக்கும் "வெப்பன்' மற்றும், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் பெயரிடாத படத்திலும் நடிக்கிறார். இதைத்தவிர "விடுதலை' படம் தெலுங்கில் வெளியாகி அங் கும் ஹிட்டடித்ததால் தெலுங்கு பட வாய்ப்பும் வருகிறதாம். இதனால் தற்போது நடிப்பில் பிசியாக உள்ளார் ராஜீவ் மேனன்.
-கவிதாசன் ஜெ.