கமலுக்கு புது ஜோடி!

ஷங்கர் இயக்கும் "இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்திவரும் கமல், அடுத்ததாக அ.வினோத், மணிரத்னம், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்றவுள்ளார். இதில் மணிரத்னத்துடன் இணையும் படம் கமலின் 234வது படமாக உருவாகிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க கமிட்டாகியுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி த்ரிஷா விலகிவிட்டார். த்ரிஷாவுக்கு பதில் நயன்தாராவை புக் செய்துள்ளது படக்குழு. இப்படம் மூலம் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நயன்தாரா. மேலும், கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட நயன்தாரா இப்படம் மூலம் கமலுடனும் ஜோடி போடவுள்ளார்.

நூறாவது படம்!

Advertisment

"ஜெயம்', "சந்தோஷ் சுப்பிரமணி யம்', "தனி ஒருவன்' என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்கு நர் மோகன்ராஜா. கடைசியாக சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் "காட்ஃபாதர்' படத்தை இயக்கி யிருந்தார். இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் அவ ருக்கு வந்து குவிகிறது. அந்த வகை யில் தெலுங் கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனா, தனது 100-வது படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என மோகன்ராஜாவிடம் கேட்க, அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் அக்கி னேனியும் முதன்மை கதாபாத்திரத் தில் நடிக் கிறார். இத னால் அதற் கான பணி களில் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் மோகன்ராஜா.

cinema

அதிதி ஓ.கே.!

கார்த்தியின் "விருமன்' படம் மூலம் தமிழ் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இப்போது சிவகார்த்தி கேயனுக்கு ஜோடியாக "மாவீரன்' படத்தில் நடித்துவருகிறார். மேலும் அதர்வாவின் தம்பி ஆகாஷ்முரளி நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்க படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில்... சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மூன்றாவது முறையாக ராம்குமார்- விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் படத் திலும் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படம் காதல் கலந்த ஃபேண்டஸி ஜானரில் உருவாகிறது.

விளக்குவாரா விஜய்?

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் "லியோ' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னை யில் நடைபெற்று வருகிறது. தனது அடுத்த பட வாய்ப்பை அட்லீக்கு வழங்கி னார் விஜய். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது, இந்த நிலையில் அட்லீ இயக்கவிருந்த படத்தை... தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனியிடம் கொடுக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநரை மாற்றிய தாக சொல்லப்படும் சூழலில் தயாரிப்பு நிறுவனத்தையும் மாற்றியுள்ளாராம் விஜய். தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறு வனத்துக்குத் தனது அடுத்த படத்திற்கான கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம். கோபிசந்த் மலினேனி, பாலகிரிஷ்ணா நடிப்பில் வெளியான "வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கியவர். முன்னதாக விஜய்யை சந்தித்து தனது அடுத்த கதையைக் கூற, விஜய் அவருக்கு ஓ.கே. சொல்லியுள்ளாராம்.

அதே சமயம் அட்லீயின் தரப்பு இத்தகவலை மறுத்துள்ளதாகவும், விஜய்யின் அடுத்த படத்தை அட்லீதான் இயக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் "லியோ' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யார் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்ற குழப்பத்தில் உள்ளனராம் விஜய் ரசிகர்கள். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விரைவில் தனது அடுத்த பட இயக்குநரை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.