டூரிங் டாக்கீஸ்! - சினிமாவில் ஒரு சிங்கக்குட்டி!

karthi

ழவுக்கும், உறவுக்கும் வந்தனை செய்திருக்கிறது "கடைக்குட்டி சிங்கம்'’படம்.

சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பில், "பசங்க'’பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, விஜி சந்திரசேகர், பானுப்ரியா, சூரி, பிரியா பவானிசங்கர், மௌனிகா... உட்பட நிறைய நட்சத்திரங்களின் பங்களிப்பில்... தரமான படமாக வந்திருக்கிறது.

குணசிங்கம் (கார்த்தி), ரணசிங்கம் (சத்யராஜ்), கண்ணுக்கினியாள் (சாயிஷா) என தமிழ் மணக்கும் பெயர்களை பெரும்பாலான கதாபாத்திரங்களுக்குச் சூட்டியிருக்கும் டைரக்டர் பாண்டிராஜ்... கிராமியப் பின்னணியில் விவசாயப் பெருமையையும், உறவுகளின் அருமையையும், காதலின் இனிமையையும், சாதிய கொடுமையையும் பொட்டில் அறைகிற மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

karthi

ஐந்து அக்காள்களுடன் பிறந்த கடைக்குட்டி குணசிங்கம்... தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் தங்கமாக ஜொலிக்கிறார்.

கல்லூரி விழாவில் கார்த்தி பேசுகிற காட்சி விவசாயத்தை அலட்சியப்படுத்தும் மனோபாவம் கொண்டவர்களின் சட்டையைப் பிடித்து உலுக்குகிறது.

""பெரியவங்க, நெல்லும் சொல்லும் ஒண்ணுன்னு சொல்லுவாங்க. ஒரு நல்ல நெல்ல, நல்ல நெலத்துல வெதைச்சா அது நூறு மடங்கு பெருகும்னு சொல்லுவாங்க. அதுமாதிரி, ஒரு நல்ல சொல்ல, உங்கள மாதிரி படிக்கிற பசங்ககிட்ட சொன்னா அது நூறு மடங்கு பெருகும்னு தோணுச்சு. குழந்தைகள்ட்ட நீ இன்ஜினியர் ஆகுறியா? டாக்டர் ஆகுறியா?னு கேட்டு விவசாயம் என்பதை ஒரு ஆப்ஷனாகக் கூட கொடுக்கிறதில்ல.

karthiவிவசாயம்தான் இந்தியாவோட முதுகெலும்புன்னு சொல்லிச் சொல்லியே பார்க்க முடியாம முதுகுக்குப் பின்னாடி ஒளிச்சு வச்சுட்டாங்க. நாமளும் இது தெரியாம வாழ்ந்துக்கிட்டிருக்கோம். சில பேரு இது புரிஞ்சு, பாக்குற ஐ.டி. வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்க வந்தா, அவனையும் பிழைக்கத் தெரியாதவன்னு சொல்லுற அறியாமை இருக்கு. ஒருசிலருக்கு விவசாயம் பண்ணுறவனுக்குப் பொண்ணே கொடுக்கக்கூடாதுன்னு பிற்போக்குத்தனம் இருக்கு. வெளிநாட்ல எல்லாம் படிச்சவனும் சேர்ந்துதான் விவசாயம் பார்க்குறான். ஆனா இந்தியாவுல மட்டும்தான் படிச்சவன் விவசாயம் பார்க்கக்கூடாது, படிக்காதவன்தான் விவசாயம் பார்க்கணும் என்பது தலையெழுத்தாப் போச்சு. விவசாயம் பண்ணுற இடத்துல மீத்தேன் எடுக்குறேன், பீத்தேன் எடுக்குறேன், ஈத்தேன் எடுக்குறேன்னு விவசாயத்தை அழிக்க ஒரு கூட்டமே கிளம்பியிருக்கு.

பணக்காரனோட டயட்டும் ஏழையோட பட்டினியும் என்னைக்கு வேற வேறன்னு உங்களுக்கு புரியுதோ அப்போதான் விவசாயம் பாக்க வச்சுட்டு ரேஷன் கடைல அரிசி வாங்க வச்சது எவ்வளவு பெரிய தேச குற்றம்னு உங்களுக்குப் புரியும். நம்ம நம்மாழ்வார் அய்யா சொன்ன மாதிரி "பசுமைப் புரட்சி'ன்னு ஆரம்பிச்சதுல இன்னைக்கு பசுமையும் இல்ல, புரட்சியும் இல்ல. மக்கள், அரசு, விஞ்ஞானிகள் மூணுபேரும் சேர்ந்தாதான் நம்ம நாடு நல்லாருக்கும். என்னைக்கு இளைஞர்கள் விவசாயத்தையும் அரசியலையும் ஒரு புரொஃபஸனா நினைக்குறீங்களோ அன்னைக்குத்தான் இந்தியா வல்லரசாகும். ஒவ்வொரு அக்ரிகல்ச்சுரல் பிராடக்டுக்கும் ஒரு கவர்ன்மென்ட் மார்க்கெட் வரணும். அப்போதான் விவசாயிகளோட தற்கொலை குறையும். இன்னைக்கு ஒரு விவசாயியோட சாவு நாளைக்கு லட்சக்கணக்கானவர்களோட சாவு. அதுசரி... விவசாயிங்க நாம ஏன் சாவணும்? மானங்கெட்டவனெல்லாம் உயிரோட இருக்கும்போது நாம ஏன் சாவணும்? படைக்கிறவன் மட்டும் கடவுளில்லை.... பயிரிடுறவனும் கடவுள்தான்''

-இப்படி பொறி பறக்கிறது அந்தப் பேச்சு. படம் பார்க்கிறவர்கள் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.

ரொம்ப நாளைக்குப் பிறகு சூரியின் நடிப்பு மன நிறைவைத் தருகிறது. இந்தக் "குட்டி'க்கு தன் நடிப்பால் "கெட்டி' சேர்த்திருக்கிறார் சூரி.

வன்முறைப் படம், பேய் படம், சிரிப்புப் படம்... என தொடர்ந்து பார்த்து சலித்திருக்கும் ரசிகர்களின் மனதிற்கு இதமான படம் இது.

தெலுங்கில் "சின்ன பாபு'’என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் ‘"கடைக்குட்டி சிங்க'த்தை’ பார்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு... "குடும்பம், கிராமிய வாழ்க்கை, கிராமிய மரபுகள், வாழ்க்கை முறையை ஆபாசமில்லாமல் இந்தப் படம் காட்டியிருக்கிறது'’என டுவிட்டரில் பாராட்டியிருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியையும் சமூக அக்கறையோடு இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். உதாரணத்திற்கு வில்லனை, கருவேலமரங்களை வெட்டி அகற்ற வைக்கிற காட்சி.

எளிமையான திரைக்கதையில் வலிமையான கருத்துகளைச் சொல்லியிருக்கிற டைரக்டர் பாண்டிராஜை மனதாரப் பாராட்டலாம்.

சிங்கம் குட்டியாக இருந்தாலும்... கர்ஜனை பலமாக இருக்கிறது.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn24-7-2018
இதையும் படியுங்கள்
Subscribe