காதலில்... சித்தார்த்- அதிதி!

cc

நீண்ட நாட்களாக தங்களது காதலை மறைத்து வந்தது "பாய்ஸ்' சித் தார்த்-"செக்கச் சிவந்த வானம்', "சைக்கோ' பட நாயகி அதிதிராவ் ஜோடி. சமீபத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய சித் தார்த்திற்கு, அதிதிராவ், தனது இன்ஸ்டாகிராமில் காதலுடனான வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

போராளி கீர்த்தி!

Advertisment

cc

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்திவருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தெலுங்கில் "போலா ஷங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்குத் தங்கச்சியாக நடிக்கிறார். தமிழில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக "சைரன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும், கே.ஜி.எஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "ரகு தாத்தா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமன்குமார் இயக்குகிறார். தென்காசியில் இப்படத்தின் அடுத்தகட்ட படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது. தைரியமிக்க ஒரு பெண் கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். தன் கொள்கைகளுக்காக ஒரு பெண் நடத்தும் போராட்டம் குறித்த, நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் வெளியாகிறது.

Advertisment

குஷி ஆர்யா!

ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். கதா நாயகியாக சித்தி இட்னானி நடிக்க கிராமத்துப் பின்னணியில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் "பையா 2' படத்திலும், பா.ரஞ்சித் இயக்கும் "சார்பட்டா 2' படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படி அவர்வசம் வரிசையாக படங்கள் இருக்க, மேலும் ஒரு பெயரிடாத படத்தில் கமிட் டாகியுள்ளார். இப் படத்தை விஷ்ணு விஷாலை வைத்து எஃப். ஐ.ஆர். படத்தை இயக்கிய மனுஆனந்த் இயக்கவுள்ளார். சமீபத்தில் விஷாலை சந்தித்த அவர், தனது அடுத்த படத்தின் கதை யைக்கூற, ஆர்யா நடிப்பதாக ஒப்புக்கொண் டுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளைக் கவனித்து வருகிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

தனுஷ்- வடிவேலு காம்போ!

தன் உடல்மொழி யாலும் டைமிங் வசனங்களாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. மாரிசெல்வராஜ்-உதயநிதி கூட்டணியில் உருவாகும் "மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள வடிவேலு லைகா தயாரிக்கும் "சந்திரமுகி 2' படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மாரிசெல்வராஜ் "வாழை' படத்தில் பிசியாக உள்ள நிலையில், அடுத்த தாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் பண்ணவுள்ளார். அதை முடித்துவிட்டு "கர்ணன்' படத்திற் குப் பிறகு மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க அவரிடம் பேசி ஓ.கே. வாங்கியுள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு.

அரிதாரம் பூசும் லோகேஷ்!

"மாநகரம்', "கைதி' என ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய், கமலை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் விஜய்யை வைத்து "லியோ' படத்தை இயக்கிவருகிறார். அடுத்ததாக அவரது லைனப்பில் "கைதி 2', "விக்ரம் 2' உள்ளன. மேலும் ரஜினியுடன் ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க கமிட் டாகியுள்ளார். இப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்க ளான இரட்டையர்கள் அன்பரிவ் இயக்கு கிறார்கள். லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இசை யமைப்பாளர் அனிருத்தும் முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்க வுள்ளார். ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகிறது.

ஸ்டண்ட் மாஸ் டர்கள் அன்பரிவ், "கே.ஜி.எஃப்.1' படத் திற்காகத் தேசிய விருது வாங்கினார்கள். லோகேஷ் கனகராஜுடன் அவர் இயக்கிய "மாஸ்டர்' படத்தைத் தவிர அனைத்து படங்களிலும் அவருடன் இணைந்து பயணிக் கின்றனர்.

-கவிதாசன் ஜெ.