ராஷ்மிகா ராஜ்யம்!
ரசிகர்களால் "நேஷனல் க்ரஷ்' என அழைக்கப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்தியிலும் பிரபலமாகி வருகிறார். இப்போது இந்தியில் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக "அனிமல்' படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக "புஷ்பா 2' படத்திலும், தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ஒரு பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார். இதுவரை விஜய், அல்லுஅர்ஜுன், மகேஷ்பாபு என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ராஷ்மிகா, தற்போது "ரெயின்போ' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயா ரிக்க, சாந்தரூபன் இயக்குகிறார். ஃபேண்டஸி கலந்த காதல் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தில் முதலில் சமந்தாவை கமிட் செய்திருந்தது படக்குழு. அவர் அப்போது தசை அலர்ஜி நோயால் பாதிக்கப் பட்டிருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போனது. பின்பு நயன்தாராவை அணுகி அவரிடம் ஓ.கே. வாங்கினார்கள். அவரும் சில காரணங்களால் விலக, படக்குழு ராஷ்மிகாவை அணுகி, லீட் ரோல் எனச் சொன்னதும் உடனே ஓ.கே. சொல்லிவிட்டா ராம் ராஷ்மிகா. மேலும் தான் நடிக்கும் கதா பாத்திரத்துக்கு சமந்தா, நயன்தாரா என முன்னணி ஹீரோயின்கள் கமிட்டாகி பின்பு விலகியது ராஷ்மிகாவுக்கு தெரியவர... கிட்டத்தட்ட அவர்களுக்கு இணையாக சம்பளம் கேட்டுள்ளா ராம். ராஷ்மிகாவுக்கு மார்க்கெட் ஏறி வருவதால் அவர் கேட்ட சம்பளத்துக்கு செவி சாய்த்துள்ளதாம் படக்குழு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_198.jpg)
தாமதிக்கும் அயலான்!
"மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாகக் கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் ஆரம்பமாகவுள் ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மீண்டும் "அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சிவகார்த்தியேன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவிக்குமார் -சிவகார்த்திகேயன் கூட்டணியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் "அயலான் படம் இன்னும் முடிவடையவில்லை. சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாவதால் கிராஃபிக்ஸ் பணிகள் முழுமையாக முடியாமல் இருப்பதால் தாமதமாகி வருகிறதாம்.
ஜீனி ரவி!
ஜெயம் ரவி தற்போது அந்தோணி பாக்யராஜ் இயக்கும் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி யுள்ளார். இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ னல் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 18 மொழிகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இளம்நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படத்தை புவனேஷ் அர்ஜுனன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். படத்திற்கு "ஜீனி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பாலிவுட்டில் ஜூனியர்!
"ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை அடுத்து "கே.ஜி.எஃப்' பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன்முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக்ரோஷன் நடிக்கும் "வார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப் படத்தில் நடிப்பதன் மூலம் முதல் முறையாகப் பாலிவுட்டில் கால்பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். சமீபகாலமாக தென்னிந்தியப் படங்களான "புஷ்பா', "கே.ஜி.எஃப் 2', "ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டில் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தன. மேலும், பாலிவுட்டில் தடம் பதித்த தென்னிந்தியப் பிரபலங்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா வரிசையில் ஜூனியர் என்.டி.ஆரும் இணையவுள்ளார்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/cinema-t_1.jpg)