சல்மான் சிபாரிசு!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_195.jpg)
தமிழில் "முகமூடி' படம் மூலம் சினிமாவில் என்ட்ரியான பூஜாஹெக்டே, தொடர்ந்து தெலுங்கு பக்கம் அதிக கவனம் செலுத்திவந்தார். அங்கு அவர் நடித்த "மகரிஷி', "அல வைகுந்த புரமுலோ' உள்ளிட்ட சில படங் கள் சூப்பர் ஹிட்டடிக்க, பின்பு இந்தி பட வாய்ப்புகளும் அவரை தேடி வந் தது. இந்தியில் சொற்ப படங்களில் நடித்திருந்தாலும் அங்குள்ள டாப் ஹீரோக்களான ஹிரித்திக்ரோஷன், அக்ஷய்குமார், ரன்வீர்சிங் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டார். இப்போது "கிஸி கா பாய் கிஸி கி ஜான்'’ படத்தில் சல்மான்கானுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படம் 21-04-2023 அன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளதால் இம்ப்ரஸான சல்மான்கான் தனது அடுத்த படமான ‘"பவன் புத்ரா'’ படத்திலும் பூஜாஹெக்டேவையே தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க இயக்குநரிடம் சிபாரிசு செய்துள்ளார். இதற்கு இயக்குநரும் செவி சாய்க்க மீண்டும் சல்மான்கானுடன் ஜோடி போடவுள்ளார் பூஜாஹெக்டே. இப்படம் சல்மான்கான் நடித்த "பஜ்ரங்கி பைஜான்'’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். முதல் பாகத்தில் கரீனா கபூர் நடித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றியுடன் அனுராக்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_144.jpg)
முதல் படத்திலேயே சிறந்த இயக்குநராக முத்திரை பதித்த சசிகுமார், அடுத்ததாக "ஈசன்' படத்தை இயக்கி யிருந்தார். இதையடுத்து நடிப்பில் அதிக கவனம் செலுத்திய அவர் இயக்கத்தின் பக்கம் திரும்பவில்லை. பின்பு பாரதிராஜாவின் கனவுப் படமான எழுத்தாளர் வேலராமமூர்த்தி எழுதிய "குற்றப்பரம்பரை' கதையை இயக்கத் தயாரானார். அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாக வில்லை. சில மாதங் களுக்கு முன்பு மீண்டும் ஒரு படம் இயக்க ரெடியாகி வருவதாக தெரிவித் திருந்தார் சசிகுமார். இந்நிலையில் சசி குமார் 13 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார். இப்படத்தில் "இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக மிரட்டிய பாலிவுட் இயக்கு நர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது. முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய "கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படம் எடுக்க சசிகுமாரின் "சுப்ரமணிபுரம்' படமும் ஒரு காரணம் எனக் கூறிய அனுராக் காஷ்யப், அப்படத்தின் டைட்டில் கார்டில் சசிகுமாருக்கு நன்றி தெரிவித்திருப்பார். இதனால் சசிகுமார் கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் அனுராக் காஷ்யப்.
தந்தைக்கு மரியாதை!
1999-ஆம் ஆண்டு வெளியான "தாஜ்மஹால்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. தொடர்ந்து "அல்லி அர்ஜுனா', "வருஷ மெல்லாம் வசந்தம்' என ஹீரோவாகவும் "சமுத் திரம்', "கடல் பூக்கள்' என முக்கிய கதாபாத்திரங் களிலும் நடித்தார். இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் மனோஜ் பாரதிராஜா. தான் நடித்த முதல் படத்தைத் தனது தந்தை இயக்கிய நிலையில்... தான் இயக்கும் முதல் படத்தில் தனது தந்தையை நடிக்கவைக்கிறார் மனோஜ் பாரதிராஜா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema2_48.jpg)
ரெடி ஜூட் சங்கமித்ரா!
"அரண்மனை 4' படத்தில் பிசியாக இருக்கும் சுந்தர் சி., அடுத்ததாக தனது கனவுப் படமான "சங்கமித்ரா' படத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளார். 2018ல் ரூ.450 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என நட்சத்திரப் பட்டாளத்துடன் படத்தைத் தொடங்கினார். ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இந்தநிலையில், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்துவரும் சுந்தர்.சி, முன்பு கமிட்டான நடிகர்களை அணுகியுள்ளார். அதில் ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் சில காரணங் களால் விலகிவிட்டனர். பின்பு ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் விஷாலையும் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவையும் கமிட் செய்து வைத்திருந்தார். இப்போது விஷாலும் சம்பளப் பிரச் சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகி யுள்ளார். அதற்குப் பதில் பிருத்வி ராஜை புக் செய்துள்ளார் சுந்தர்.சி. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/cinema-t_4.jpg)