நடிகையாக நடிகை!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயினாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் லீட் ரோலில் இவர் நடித்த "ஃபர் ஹானா', "சொப்பன சுந்தரி' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்த நிலை யில் லீட் ரோலில் இவர் நடிக்கும் மற்றொரு படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. "ட்ரெண்டிங் துர்கா' என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை ஒரு நடிகை யைச் சுற்றி நடக்கிற சம்பவங் கள் ஆகும். படத்தில் நடிகை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை ஒரு புது முக இயக்குநர் இயக்குகிறார். இப்படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார் ஐஸ்வர
நடிகையாக நடிகை!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயினாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் லீட் ரோலில் இவர் நடித்த "ஃபர் ஹானா', "சொப்பன சுந்தரி' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்த நிலை யில் லீட் ரோலில் இவர் நடிக்கும் மற்றொரு படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. "ட்ரெண்டிங் துர்கா' என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை ஒரு நடிகை யைச் சுற்றி நடக்கிற சம்பவங் கள் ஆகும். படத்தில் நடிகை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை ஒரு புது முக இயக்குநர் இயக்குகிறார். இப்படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்று விசாரித்தால், இதற்கு முன்னதாக லீட் ரோலில் இவர் நடித்த "டிரைவர் ஜமுனா' மற்றும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் இப்படம் தனக்குப் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம்.
தம்பிக்கு சிபாரிசு!
விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்' படத்தில் விக்ராந்துடன் இணைந்து நடித்துவருகிறார். நடிப்பைத் தாண்டி தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் விஷ்ணுவிஷால், தொடர்ந்து அவர் நடித்த படங்களை மட்டுமே தயாரித்து வந்தார். இந்த நிலையில் தனது தம்பி ருத்ராவை, தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்த முடிவெடுத்துள்ளார். தம்பி நடிக்கும் முதல் படத்தை சுசீந்திரன் இயக்கினால் நன்றாக இருக்கும் என எண்ணிய விஷ்ணுவிஷால், இது தொடர்பாக சுசீந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்திவரு கிறார். சுசீந்திரன் இயக்கிய "வெண்ணிலா கபடி குழு' மூலம் விஷ்ணு விஷால் திரைத் துறைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 மொழிகளில் ஜெயம் ரவி!
"இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி தற்போது அந்தோணி பாக்யராஜ் இயக்கும் "சைரன்' படத்தில் நடித்துவருகிறார். விரைவில் "கோமாளி' படத்திற்குப் பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் பிரம்மாண்ட மாகத் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாள ராக பணியாற்றும் இப்படம், ஜெயம் ரவி கேரியரில் பெரிய பட்ஜெட் படமாக உருவாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித் துள்ளது. மேலும் 18 மொழிகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்குவதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது .
விறுவிறு விக்னேஷ்சிவன்!
விக்னேஷ்சிவன் விரைவில் தனது அடுத்த படத்தைத் தொடங்கவுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நயன்தாராவை நடிக்க கமிட் செய்துள்ளார் விக்னேஷ்சிவன். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசைஅனிருத். விக்னேஷ் சிவன் படம் என்பதால் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் அனிருத். இப்படம் காதல் கலந்த காமெடி ஜானரில் தயாராகவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீக்ரெட் அருள்நிதி!
அருள்நிதி தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் "டிமான்ட்டி காலனி 2' படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஹரிஷ்பிரபு இயக்கும் "திருவின் குரல்' மற்றும் கௌதமராஜ் இயக்கும் "கழுவேத்தி மூர்க்கன்' உள்ளிட்ட படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே மேலும் ஒரு படத்தில் சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் விஜய் என்பவர் இப்படத்தை இயக்க சுப்பையா என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் அருள் நிதி சினிமா கரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என கூறப் படுகிறது. படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் நடை பெற்று வரு கிறது.
-கவிதாசன் ஜெ.