டூரிங் டாக்கீஸ்! அதிதி புது சேதி!

cinema

அதிதி புது சேதி!

cinema

கார்த்தி நடிப்பில் வெளியான "விருமன்' படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "மாவீரன்' படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிதி ஷங்கர் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்க, விஜய்யின் "மாஸ்டர்' படத்தைத் தயாரித்த சேவியர்பிரிட்டோ தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும், காதல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகுவதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி அதி

அயோத்தி அதிரடி!

கடந்த சில வருடங்களாகவே சசிகுமார் நடித்த அனைத்துப் படங்களும் சரியாகப் போகவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான "அயோத்தி' படம் அவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு, தமிழைத் தாண்டி தற்போது தெலுங்கு மற்றும் இந்தித் திரையுலகிலும் கவனம் பெற்றிருக்கிறது. "அயோத்தியா' என்ற தலைப்பில் இரண்டு மொழிகளிலும் ரீமேக் ஆகிறதாம். தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும் உருவாகிறது. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் பிஸியோ பிஸி!

"3' படம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த தனுஷ், தொடர்ந்து "எதிர் நீச்சல்', "காக்கா முட்டை', "விசாரணை', "காலா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தார். கடைசியாக அவர் நடித்த "மாரி 2' படத்தைத் தயாரித்த நிலையில்... பிறகு எந்த படமும் தயாரிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் படங்களைத் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார் தனுஷ். "கர்ணன்' பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தனுஷ் தெரிவித்திருந்தார். அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இந்தச் சூழலில் இருவரும் இணையவுள்ள படத்தை தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான "வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' சார்பாக தனுஷ் தயாரிக்க முடிவு செய்துள்ளார். "வாழை' படத்தில் பிசியாக உள்ள மாரி செல்வராஜ், அடுத்ததாக துருவ் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு தனுஷ் பட பணிகளை தொடங்கவுள்ளார். தனுஷ் "கேப்டன் மில்லர்' படத்தை அடுத்து சேகர்கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே தனது 50-ஆவது படத்திலும் கவனம் செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

c

ஹேப்பி கவின்!

"டாடா' பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள கவின், தனது அடுத்த பட ஸ்க்ரிப்ட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் பல இயக்குநர்களிடம் கதை கேட்ட கவின், இறுதியாக ஒரு கதையை டிக் செய்துள்ளாராம். அந்த படத்தை பற்றி விசாரிக்கையில், நடன இயக்குநர் சதீஷ், கவினை சந்தித்து ஒரு காதல் கதை கூறியுள்ளார். கதையைக் கேட்ட கவின் உடனே ஓ.கே. சொல்லிவிட்டு படத்திற்கான கால்ஷீட்டையும் ஒதுக்கியுள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர், நடிகை கள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கதாநாயகி பிரியங்கா மோகன் எனவும், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பாரதிராஜா!

"என் இனிய தமிழ் மக்களே' என கிராமத்துக் கதையை யதார்த்தமாகத் திரையில் காண்பித்தவர் இயக்குநர் பாரதிராஜா. கடைசியாக 2020-ஆம் ஆண்டு வெளியான "மீண்டும் ஒரு மரியாதை' படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே பல படங்களில் அவ்வப்போது தலையைக் காண்பித்து வந்த பாரதிராஜா, சமீப காலமாக முழுநேர நடிகராக மாறி பல படங்களில் நடித்துவருகிறார். தொடர்ச்சியாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பாரதிராஜா தற்போது மீண்டும் டைரக்ஷன் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளாராம்.

"தாய் மெய்' என்ற தலைப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சத்தில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு, அதில் நடிக்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமும் அவருடைய முந்தைய படங்களைப் போல கிராமத்துப் பின்னணியில்... தேனி பேக் ட்ராப்பில் நடக்கவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-கவிதாசன் ஜெ.

nkn250323
இதையும் படியுங்கள்
Subscribe