Advertisment

டூரிங் டாக்கீஸ்! சபாஷ் சூரி!

cc

சபாஷ் சூரி!

காமெடியன் டூ ஹீரோ என்ற ஃபார்முலாவில் தனது திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளார் சூரி. "விடுதலை' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் "கொட்டுக்காளி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலை யில் இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்பே ஹீரோவாக நடிக்க சூரிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அந்த வகையில் "விடுதலை' தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் புதிய படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை எல்ரெட் குமாரே இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் பொன்ராமும் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்து வருகிறார். இப்படி தொடர்ந்து ஹீரோ பட வாய்ப்புகள் வருவதால், "இனிமேல் தொடர்ந்து ஹீரோவாகத்தான் சூரி நடி

சபாஷ் சூரி!

காமெடியன் டூ ஹீரோ என்ற ஃபார்முலாவில் தனது திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளார் சூரி. "விடுதலை' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் "கொட்டுக்காளி' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலை யில் இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்பே ஹீரோவாக நடிக்க சூரிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அந்த வகையில் "விடுதலை' தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் புதிய படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை எல்ரெட் குமாரே இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் பொன்ராமும் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்து வருகிறார். இப்படி தொடர்ந்து ஹீரோ பட வாய்ப்புகள் வருவதால், "இனிமேல் தொடர்ந்து ஹீரோவாகத்தான் சூரி நடிக்கப்போகிறாரா' என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் பரவத் தொடங்கிவிட்டன. அதற்கு விளக்கமளித்துள்ள சூரி. "இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒன்றுமில்லை. சினிமாவில் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றுள்ளார்.

Advertisment

c

மீண்டும் கோமாளி கூட்டணி!

ஜெயம் ரவி தற்போது அந்தோணி பாக்யராஜ் இயக்கும் "சைரன்' படத்தில் நடித்து வருகிறார். கீர்த்திசுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அவர் நடித்த "பொன்னியின் செல்வன் 2', "இறைவன்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் "கோமாளி' படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடிக்க பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அடுத்தடுத்த அப்டேட்டும் வெளியாக வுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதீப் ரங்கநாதன், "லவ் டுடே' படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்க வுள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் கூட்டணி!

"முண்டாசுப்பட்டி', "ராட்சசன்' படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மூன்றாவது முறையாகக் கைகோர்த்துள்ளார்கள் விஷ்ணு விஷால் -ராம்குமார் கூட்டணி. இந்தக் கூட்டணியின் முந்தைய படங்கள் காமெடி மற்றும் சைக்கோ த்ரில்லர் ஜானரில் அமைந்த நிலையில், இரண்டும் சூப்பர் ஹிட்டடித்தது. அதனால் ஹாட்ரிக் கூட்டணி அமைக்கவுள்ள இந்த புதிய படம் எந்த ஜானரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது. இந்த நிலையில் இப்படம் காதல் கலந்த ஃபேண்டஸி ஜானரில் உருவாகிறது. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கதாநாயகிக்கான தேடுதல் வேட்டையில் தற்போது படக்குழு இறங்கியுள்ளது. கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்களை அணுகி வருகிறதாம் படக்குழு. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

நெக்ஸ்ட் நயன்-ராகவா!

cinema

Advertisment

தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் உருவாகும் "ஜவான்' படம் மூலம் இந்தியிலும் கால்பதிக்கவுள்ளார் நயன்தாரா. அதனால் தற்போது அப்படத்தின் பணிகளில் பிசியாக உள்ள அவர் தமிழில், ஜெயம் ரவியின் "இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது போக இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதன் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை "மேயாத மான்' ரத்னகுமார் இயக்க, ஹாரர் ஜானரில் இப்படம் உருவாகிறதாம். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மூன்று பேரும் அவரவர் படங்களில் பிசியாக இருப்பதால் அது முடிந்தவுடன் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், "சந்திரமுகி 2', "ஜிகர்தண்டா 2' படத்திலும், ரத்னகுமார் விஜய்யின் "லியோ' படத்தின் பணிகளிலும் பிசியாக உள்ளார்கள்.

-கவிதாசன் ஜெ.

nkn180323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe