Advertisment

டூரிங் டாக்கீஸ்! வெப் சீரிஸில் ஜோ!

cc

வெப் சீரிஸில் ஜோ!

தனது செகண்ட் இன்னிங்சில் மீண்டும், மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ஜோதிகா. அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டி யுடன் "காதல்' படத்தில் கதாநாயகி யாகவும் இந்தியில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க் கையைத் தழுவி எடுக்கப்படும் "ஸ்ரீ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் மீண் டும் ஒரு இந்தி கதையில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜோதிகா. இந்த கதை வெப்சீரிஸாக உருவாக வுள்ளதாகவும், ஜோதிகா வுடன் இணைந்து ஷபானா ஆஸ்மி, நடிகர் கஜ்ராஜ்ராவ் உள்ளிட்ட சிலர் நடிக்க வுள்ளதாகவும் கூறப்படு கிறது. "தாபா கார்டல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள தாகச் சொல்லப்படும் இந்த கதை, ஐந்து குடும்பப் பெண்களைப் மையமாக வைத்து உருவாகிறது. சோனாலிபோஸ் இயக்கவுள்ள

வெப் சீரிஸில் ஜோ!

தனது செகண்ட் இன்னிங்சில் மீண்டும், மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ஜோதிகா. அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டி யுடன் "காதல்' படத்தில் கதாநாயகி யாகவும் இந்தியில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க் கையைத் தழுவி எடுக்கப்படும் "ஸ்ரீ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் மீண் டும் ஒரு இந்தி கதையில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜோதிகா. இந்த கதை வெப்சீரிஸாக உருவாக வுள்ளதாகவும், ஜோதிகா வுடன் இணைந்து ஷபானா ஆஸ்மி, நடிகர் கஜ்ராஜ்ராவ் உள்ளிட்ட சிலர் நடிக்க வுள்ளதாகவும் கூறப்படு கிறது. "தாபா கார்டல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள தாகச் சொல்லப்படும் இந்த கதை, ஐந்து குடும்பப் பெண்களைப் மையமாக வைத்து உருவாகிறது. சோனாலிபோஸ் இயக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து தொடங்குகிறது.

Advertisment

cc

ஆவலுடன் அனுபமா!

தமிழில் "கொடி' படம் மூலம் தனுஷுடன் ஜோடி போட்டு அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அடுத்ததாக "தள்ளிப் போகாதே' படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டார். இதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் "சைரன்' படத்தில் இவரது பெயர் இடம்பெற்றது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் தமிழ் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் யாருடன் ஜோடி போடவுள்ளார் என்று விசாரிக்கையில், யாருடனும் இல்லையாம். மாறாக லீட் ரோலில் நடிக்கவுள்ளார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியம் வாய்ந்த சப்ஜெக்ட் என்றும், படத்தை லைகா தயாரிக்க... புதுமுக இயக்குநர் ஜீவா என்பவர் இயக்கவுள்ளார். படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதால், அதில் நடிக்க ஆவலாக உள்ளார் அனுபமா. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், முதல்முதலாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அங்கு வெளியான "பட்டர்ஃப்ளை' படம் அவருக்குக் கை கொடுக்கவில்லை. ஆனால், இப்படம் தனக்குக் கண்டிப்பாகப் பெயர் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் அனுபமா.

Advertisment

cc

தெளிவுபடுத்துங்க சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. சரித்திரப் படமாக 3டி முறையில் 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து தற்போது திருவள்ளூர் பகுதியில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறனுடன் "வாடிவாசல்', சுதா கொங்கராவுடன் ஒரு படம் என சூர்யாவின் லைனப் இருக்கிறது. இப்போது அந்த லைனப்பில் மேலும் ஒரு படம் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "சீதா ராமம்' பட இயக்குநர் ஹனு ராகவபடி இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும், "புஷ்பா' படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகப் பேசப்பட்டது. அது வெறும் வதந்தி என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஹனு ராகவபடி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப் படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்தைத் தீர்க்க, அடுத்த படத்தில் நடிப்பது குறித்து ஒரு தெளிவான அறிவிப்பை சூர்யா வெளியிடவேண்டும்.

படப்பிடிப்பில் பாலா!

"வணங்கான்' படத்தில் சூர்யா விலகியதால் அந்த இடத்திற்கு அருண் விஜய்யை நிரப்பியுள்ளாராம் பாலா. இதையடுத்து ஹீரோயினாக கமிட்டான க்ரீத்தி ஷெட்டியும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்திலிருந்து விலகி யுள்ளார். இதனால் வேறு கதாநாயகிகளை தேடி வந்த பாலா, கடைசியாக ரோஷினி பிரகாஷ் என்பவரை புக் செய்துள்ளார். ரோஷினி பிரகாஷ், தமிழில் "ஏமாளி', "ஜடா' போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாத தொடக்கம் வரை அங்கு முதல் ஷெட்யூல் நடக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை எந்த குழப்பமும் வராமல் இருக்க மிகுந்த கவனத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம் பாலா.

-கவிதாசன் ஜெ.

nkn110323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe