Advertisment

டூரிங் டாக்கீஸ்!

touringtalkies

ரகசியங்களை அவிழ்க்கும் நேரம்!

தெலுங்கு திரையுலகினர் மீது அதிரடியான பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி "இது தமிழ் சினிமா நேரம்' எனச் சொல்லி... பரபரப்பை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்.

Advertisment

touringtalkies

நடிகர்கள் "நான் ஈ' நானி, அபி டகுபதி, டாக்டர் ராஜசேகர், டைரக்டர்கள் கொரட்டால சிவா, சேகர் கம்முலா ஆகிய தெலுங்கு பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு வைத்த ஸ்ரீரெட்டி... ""தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவுகள் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் படவாய்ப்புத் தருவதாகக்கூறி என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது... அவர் யார்? என்பதை தெரிவிப்பேன்'' என பீடிகை போட்டு பிரஷ்ஷர் ஏற்றியிருந்தார்.

"நானி நல்லவர். அவர் மீது குற்றம் சுமத்தலாமா? விட்டால் என் மீதும் குற்றம் சுமத்துவார் ஸ்ரீரெட்டி' என சமீபத்தில்

ரகசியங்களை அவிழ்க்கும் நேரம்!

தெலுங்கு திரையுலகினர் மீது அதிரடியான பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி "இது தமிழ் சினிமா நேரம்' எனச் சொல்லி... பரபரப்பை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்.

Advertisment

touringtalkies

நடிகர்கள் "நான் ஈ' நானி, அபி டகுபதி, டாக்டர் ராஜசேகர், டைரக்டர்கள் கொரட்டால சிவா, சேகர் கம்முலா ஆகிய தெலுங்கு பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு வைத்த ஸ்ரீரெட்டி... ""தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவுகள் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் படவாய்ப்புத் தருவதாகக்கூறி என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது... அவர் யார்? என்பதை தெரிவிப்பேன்'' என பீடிகை போட்டு பிரஷ்ஷர் ஏற்றியிருந்தார்.

"நானி நல்லவர். அவர் மீது குற்றம் சுமத்தலாமா? விட்டால் என் மீதும் குற்றம் சுமத்துவார் ஸ்ரீரெட்டி' என சமீபத்தில் விஷால் சொல்லியிருந்தார்.

இந்நிலையில்... ‘தமிழ் சினிமா நேரத்தை தொடங்கிவிட்டார் ஸ்ரீரெட்டி.

""ஹே.. தமிழ் டைரக்டர் முருகதாஸ் ஜி... எப்படி இருக்கீங்க? கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் வருதா? வெலிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்துக்கொண்டோம். எனக்கு பட வாய்ப்புத் தருவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் நமக்குள் நிறைய...! இந்த நிமிஷம் வரை உங்களிடமிருந்து வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. நீங்களும் ரொம்ப பெரிய ஆள் சார்''.

இப்படி முக நூலில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

ஸ்ரீரெட்டி, முருகதாஸ் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாக ஸ்ரீரெட்டி குறிப்பிட்டிருக்கும் வெலிகொண்டா ஸ்ரீநிவாஸ் டைரக்டர் மற்றும் கதாசிரியராக இருக்கிறார் தெலுங்கு சினிமாவில்.

இதேபோல நடிகர் ஸ்ரீகாந்த்தைப் பற்றியும் பரபரப்பாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீரெட்டி

"ஐந்து வருடங்களுக்கு முன்... ஹைதராபாத் பார்க் ஹோட்டலில் நடந்த செலிபிரடி கிரிக்கெட் லீக் (சி.சி.எல்) பார்ட்டி நினைவிருக்கிறதா?...................? என்னுடன் நடனம் ஆடும்போது... எனக்கு பட வாய்ப்பு தருவதாகச் சொன்னது நினைவிருக்கிறதா?' என கேட்டுள்ளார்.

(அந்த கோடிட்ட இடத்தில் ஸ்ரீரெட்டி எழுதிய ஆங்கில வாக்கியத்தை தமிழ்ப்படுத்த முடியவில்லை. பாலியல் செயல்பாட்டில் நிகழும் ஒரு செயலை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்).

parvathimenon

Advertisment

"பூ' மற்றும் "மரியான்' உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் பார்வதி மேனன்... கேரளாவில் முன்னணி நடிகை. சமூக விஷயங்களிலும் துணிச்சலாக குரல் கொடுப்பவர்.

மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து... நடிகைகளுக்கு நேரும் நெருக்கடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க திட்டமிட்டார். ஆனால் அவர் தேர்தலில் நிற்கவில்லை.

"என்னை தேர்தலில் நிற்கவிடாமல் முக்கியமான சிலர் தடுத்துவிட்டனர்' என பார்வதி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் மோகன்லால் தலைமையில் புதிய நிர்வாகம் அமைந்துவிட்டது. திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க எடுத்த முடிவால்... சங்கமே ரெண்டாகும் சங்கடத்தில் இருக்கும் நிலையில்... பார்வதியின் பேட்டி குடைச்சலைக் கொடுக்க...

"பார்வதியை யார் தடுத்தது? பார்வதி விரும்பினா சங்கத்தில் அவருக்கு பதவி தர தயாராக இருக்கோம் ஒருமனதாக...' என மோகன்லால் சொல்லியுள்ளார்.

"பார்வதியை போட்டியிடவிடாமல் தடுத்தது மம்முட்டிதான்...' என ஒரு தகவல் பரவிவருகிறது.

சில மாதங்களுக்குமுன்... கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் பேசிய பார்வதி... ""மம்முட்டி இந்த வயதில்... பெண்களுக்கு எதிராக வசனம் பேசி "கசாபா' படத்தில் நடித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

இதனால்... மம்முட்டி ரசிகர்கள் பார்வதியைப்பற்றி அவதூறு பரப்பி, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். எல்லை மீறிய இந்த மிரட்டலால் போலீஸில் புகார் செய்தார் பார்வதி. அதன்பேரில் இரண்டு மம்முட்டி ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு... மம்முட்டி தன் ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.

ஆனால்... தாமதமாக இந்த பிரச்சினையில் தலையிட்டதாக மம்முட்டி மீது மீண்டும் விமர்சனம் வைத்தார் பார்வதி.

அதனால் மம்முட்டிதான் சங்க தேர்தலில் பார்வதி போட்டியிடாதபடி இடைஞ்சல் தந்திருக்கக்கூடும் என ஒரு பேச்சு நிலவுகிறது.

மம்முட்டிக்கும், மோகன்லாலுக்கும் இடையே சினிமா தொழிலில் போட்டி இருந்தாலும்... தங்களுக்கு எதிர்க்குரல் தருபவர்களுக்கு எதிராக இணைந்த கைகளோடு செயல்படுகிறவர்கள்தான் என்பது மல்லுவுட் நிலவரம்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies nkn17.07.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe