Advertisment

டூரிங் டாக்கீஸ்! இந்தியில் குத்தாட்டம்!

ss

இந்தியில் குத்தாட்டம்!

லோகேஷ் கனகராஜ் பாடல்களே இல்லாமல் இயக்கிய "கைதி' படத்தை, பாலிவுட்டில் ரீமேக் செய்யும் அஜய்தேவ்கன், அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் கமர்ஷியலுக்காகவும் குத்துப் பாடல் ஒன்றை சேர்த்திருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஆடப் போகிறவர் ராய்லட்சுமி. பாலிவுட்டில் காலூன்றப் போராடிவரும் ராய்லட்சுமி, இந்தப் பாடலை சரியான வாய்ப்பாக நினைத்து குஷியாகியுள்ளார்.

Advertisment

"பையா'வை நம்பும் பூஜா!

"முகமூடி' படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவுக்கு, அப்படம் வெற்றிபெறாததால் தமிழில் அதிக வாய்ப்பு வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க, பின்பு விஜய்யின் "பீஸ்ட்' பட வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படமும் பெரிதாக அவருக்குக் கை கொடுக்கவில்லை. தமிழில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி யிருந்தாலும் அங்கு ஒரு ஹிட் கொடுக்க வில்லையே என்ற கவலை அவரது மன

இந்தியில் குத்தாட்டம்!

லோகேஷ் கனகராஜ் பாடல்களே இல்லாமல் இயக்கிய "கைதி' படத்தை, பாலிவுட்டில் ரீமேக் செய்யும் அஜய்தேவ்கன், அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் கமர்ஷியலுக்காகவும் குத்துப் பாடல் ஒன்றை சேர்த்திருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஆடப் போகிறவர் ராய்லட்சுமி. பாலிவுட்டில் காலூன்றப் போராடிவரும் ராய்லட்சுமி, இந்தப் பாடலை சரியான வாய்ப்பாக நினைத்து குஷியாகியுள்ளார்.

Advertisment

"பையா'வை நம்பும் பூஜா!

"முகமூடி' படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவுக்கு, அப்படம் வெற்றிபெறாததால் தமிழில் அதிக வாய்ப்பு வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க, பின்பு விஜய்யின் "பீஸ்ட்' பட வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படமும் பெரிதாக அவருக்குக் கை கொடுக்கவில்லை. தமிழில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி யிருந்தாலும் அங்கு ஒரு ஹிட் கொடுக்க வில்லையே என்ற கவலை அவரது மனதில் இருந்து வருகிறது. அதனால் தமிழில் நிச்சயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவிலிருந்த பூஜாவுக்கு மீண்டும் ஒரு தமிழ் பட வாய்ப்பு வந்துள்ளது. கதையைக் கேட்ட பூஜா, மிகவும் இம்ப்ரஸாக, உடனே படக்குழுவுக்கு ஓ.கே. சொல்லிவிட்டார். மேலும், இப்படம் கண்டிப்பாக தனக்குப் பெயர் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். அப்படி என்ன படம் என்று விசாரித்தபோது, லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஆர்யாவை வைத்து இயக்கவுள்ள "பையா 2' படத்தில்தான் பூஜா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்றும், இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

Advertisment

cc

பிரதீப் காட்டுல மழை!

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய "கோமாளி', "லவ் டுடே'’ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டது. இதில் ‘லவ் டுடே’ இந்தியில் ரீமேக்காகிறது. ஆனால் அதில் பிரதீப் ரங்கநாதன் இயக்கவும் நடிக்கவும் இல்லையாம். மாறாக வேறு ஒரு பிரபல இயக்குநர் இயக்கவிருக்கிறார். இதனிடையே பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது அவர் இயக்கும் புதிய படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் விக்னேஷ்சிவன் அவரை அணுகியுள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாயகனை மாற்றிய சுந்தர்.சி!

இயக்குநர் சுந்தர்.சி, 2018ஆம் ஆண்டு வரலாற்றுப் படமான "சங்கமித்ரா'வை தொடங்கினார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளத்துடன் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்படம் "சுந்தர்.சியின் கனவுப் படம்' எனப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில்... தற்போது அந்தப் படத்தை கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறாராம். அதன் முதற்படியாக நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளார். ஹீரோவாக ஜெயம் ரவி கமிட்டாகியிருந்த நிலையில்... "பொன்னியின் செல்வன்' படத்தால் அந்த சாயல் இந்த படத்தில் வருவதாகக் கூறி அவர் விலகிவிட்டார். இதனால் ஜெயம் ரவி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் விஷாலை ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர் சி. கதாநாயகியாக பூஜா ஹெக்டே. லைகா இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சுறுசுறுப்பான சௌந்தர்யா!

கிராபிக் டிசைனராக பல படங்களில் பணியாற்றியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த், ஜெய், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "கோவா' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு ரஜினியை வைத்து "கோச்சடையான்', தனுஷை வைத்து "வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கிய பின்பு மற்ற எந்த படங்களிலும் பணியாற்றவில்லை. இந்த நிலையில் மீண்டும் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதற்காக பல முக்கிய இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இறுதியில் அபிலாஷ் பிள்ளை என்பவர் சொன்ன கதை பிடித்துப்போக, விரைவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாகத் தயாராகிறது. அபிலாஷ் பிள்ளை, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற "மாளிகப்புரம்' படத்தின் எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிதாசன் ஜெ.

nkn040323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe