சம்பளத்தை ஏற்றும் ஸ்ருதி!

cc

Advertisment

நடிகை ஸ்ருதிஹாசன், தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். காரணம், சமீபத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் "வீர சிம்ஹா ரெட்டி' படங்களும் அந்த ஹிட் லிஸ்டில் இணைய பயங்கர மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அதேபோல தான் அடுத்து பிரபாஸுடன் நடித்து வரும் சலார் படமும் பெரும் வரவேற் பைப் பெறும் என நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளதால், தனக்கு பான் இந்தியா நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கும் என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி வருகிறார். இதனால் சலார் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தனது சம்ப ளத்தை உயர்த் தும் எண்ணத் திலும் இருக்கி றார் ஸ்ருதி ஹாசன்.

மீண்டும் போலீஸ் தர்பார்!

cc

"ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அதில் ஒரு படமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள "லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இன்னொரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் விலக, அந்த இடத்திற்கு இயக்குநர்கள் பி.வாசு, த.செ. ஞானவேல் பெயர்கள் அடிபட்டது. இதில் த.செ. ஞானவேல் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் சீனியர்கள் சொல்ல, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தைப் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் நடிகர் ரஜினி காந்துக்கு கதாபாத்திரம் பவர்ஃபுல்லான காவல் துறை கதாபாத்திரத்திம் என்றும், ஆனால் இதுவரை அவர் நடித்த போலீஸ் கதாபாத்திரத் தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, எதார்த்தமான போலீஸ் கதாபாத்திரமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

பான் இந்தியா வெற்றி!

Advertisment

cc

திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் வெற்றிமாறன், தற்போது "விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சூர்யாவின் "வாடிவாசல்' படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் "ரங்கஸ்தலம்', "புஷ்பா' எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்த "மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க வெற்றிமாறன் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக பெரும் பொருட்செலவில் உருவாவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் தென்னிந்திய அளவில் மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவை நடிக்கவைப்பதற்காகப் பல முன்னணி ஹீரோக்களிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனவே வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் திரை வட்டாரங்கள்.

படுபிஸி மேனன்!

cc

Advertisment

இயக்கம், நடிப்பு என இரண்டு துறையிலும் படு பிசி யாக இருக்கும் கௌதம் மேனன், நடிகராக தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் "லியோ' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே விக்ரமை வைத்து "துருவ நட்சத்திரம்' படத்தை தற்போது மீண்டும் இயக்கத் தொடங்கி இறுதிக்கட்டப் படப்பிடிப்பை மேற் கொண்டு வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தபடமாக அருண் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த படமும் வழக்கம் போல அவரது ஸ்டைலில் உருவாகிறதாம். அருண் விஜய் லைனப்பில் "அச்சம் என்பது இல்லையே' படத்தைத் தொடர்ந்து பாலாவின் "வணங்கான்' படம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு படங்களை முடித்துவிட்டு கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.