Advertisment

டூரிங் டாக்கீஸ்! காத்திருக்கும் கீர்த்தி!

ss

காத்திருக்கும் கீர்த்தி!

cc

Advertisment

கீர்த்தி சுரேஷ், தற்போது கே.ஜி.எஃப். பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமான "ரகு தாத்தா' படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ். அவ்வப்போது கதா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை யும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் "பெண் குயின்' படத்தைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை "டிமான்டி காலனி', "இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞான முத்து இயக்கவுள்ளார். "கோப்ரா' படத்தை அடுத்து தற்போது "டிமான்டி காலனி 2' பட பணிகளில் பிசி யாக இருக்கும் அஜய் ஞானமுத்து, இப்படத்தை முடித்துவிட்டு கீர்த்தி சுரேஷ் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்

காத்திருக்கும் கீர்த்தி!

cc

Advertisment

கீர்த்தி சுரேஷ், தற்போது கே.ஜி.எஃப். பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமான "ரகு தாத்தா' படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ். அவ்வப்போது கதா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை யும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் "பெண் குயின்' படத்தைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை "டிமான்டி காலனி', "இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞான முத்து இயக்கவுள்ளார். "கோப்ரா' படத்தை அடுத்து தற்போது "டிமான்டி காலனி 2' பட பணிகளில் பிசி யாக இருக்கும் அஜய் ஞானமுத்து, இப்படத்தை முடித்துவிட்டு கீர்த்தி சுரேஷ் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் பிஸி!

அஜித்தை வைத்து "பில்லா', "ஆரம்பம்' என ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக இருந்த விஷ்ணுவர்தன், தமிழில் கடைசியாக ஆர்யாவின் "யட்சன்' படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து இந்தி பக்கம் போனதால், தமிழ் பக்கம் திரும்பாத விஷ்ணுவர்தன் அஜித்தின் "ஏகே 62' படத்தில் விக்னேஷ்சிவன் நீக்கப்பட்டவுடன் திரும்புவார் என பேச்சுகள் அடிபட்டது. ஆனால், விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதால் அஜித் படத்தை இயக்க முடியாமல் போனதாகப் பரவலாக பேசப்பட்டது. இந்த தகவலால் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்த விஷ்ணுவர்தன் இப்போது என்ன செய்கிறார், அடுத்து யாரை இயக்கவுள்ளார் என்ற கேள்வி உலாவரத் தொடங்கிய நிலையில், அவரைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன், தற்போது கரண் ஜோகர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இது தொடர்பாக பல முன்னணி ஹீரோக்களை சந்தித்து கதை கூற... சல்மான் கானுக்கு அந்த கதை பிடித்துப்போக... சல்மான்கானை இயக்க வாய்ப்புள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க திட்ட மிட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

c

வடக்குப்பட்டி சந்தானம்!

சந்தானம், தற்போது கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜ் இயக்கும் "கிக்' படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே "இந்தியா பாகிஸ்தான்' படத்தை இயக்கிய ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும், சுந்தர் சி. இயக்கவுள்ள 'அரண்மனை 4' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் "டிக்கிலோனா' படம் மூலம் தனக்கு ஹிட் கொடுத்த இயக்குநர் கார்த்திக்யோகியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ‘"வடக்குப்பட்டி ராமசாமி'’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்திற்குப் பல தென்னிந்திய நடிகைகளையம் படக்குழு அணுகிய நிலையில்... இறுதியாக மேகாஆகாஷை புக் செய்துள்ளனர். பீரியட் காமெடி ட்ராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி Vs கமல்!

Advertisment

ரஜினி மற்றும் கமல் படங்கள் ஒரே தேதியில் வெளியாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரின் படங்களும் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் "ஜெயிலர்' படம் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மறுபுறம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் "இந்தியன் 2' படம் கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிந்துள்ளது. இந்த இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களான சன் பிக்சர்ஸ் மற்றும் லைகா, தங்களது படத்தை தீபாவளிக்கு வெளியானால் நன்றாக இருக்கும் எனவும் பண்டிகை நாட்கள் என்பதால் ரசிகர்களின் வரவேற்பும் அதிகமாக இருக்கும் எனவும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தத் தகவல் ரஜினி மற்றும் கமலின் காதுகளுக்கு போகவில்லையாம். தயா ரிப்பாளர்களின் முடிவுக்கு இருவரும் செவி சாய்க்க வாய்ப்பில்லை என்கிறார்கள் கோலிவுட் சீனியர்கள். ஒருவேளை ரஜினி மற்றும் கமல் க்ரீன் சிக்னல் கொடுக்கும் பட்சத்தில்... 15-ஆவது முறை இருவரின் படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. "சந்திரமுகி' மற்றும் "மும்பை எக்ஸ்பிரஸ்' படங்கள் 2005-ல் ஒரே தேதியில் வெளியானது குறிப்பிடத் தக்கது.

-கவிதாசன் ஜெ.

nkn110223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe