Advertisment

டூரிங் டாக்கீஸ்! ஆக்ஷனில் அனுஷ்கா!

cc

ஆக்ஷனில் அனுஷ்கா!

cc

Advertisment

தெலுங்கு மற்றும் தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வந்த அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்புபோல் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் தனது 48வது படத்தில் சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் அனுஷ்கா, அடுத்ததாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் படம் உருவா கிறது. தமிழில் தனது மார்க்கெட் உயர ஏ.எல்.விஜய்யும் ஒரு காரணம் என்ப தாலும், அவர் இயக்கத்தில் நடித்த 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்' உள்ளிட்ட படங்கள் ரசிகர் களின் வரவேற்பைப் பெற்றதாலும் ஏ.எல். விஜய் மூலம் ரீ-என்ட்ரி கொடுத் தால் நன்றாக இருக்கும் என அனுஷ்கா நம்புகிறார். கதையும் அன

ஆக்ஷனில் அனுஷ்கா!

cc

Advertisment

தெலுங்கு மற்றும் தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வந்த அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்புபோல் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் தனது 48வது படத்தில் சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் அனுஷ்கா, அடுத்ததாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் படம் உருவா கிறது. தமிழில் தனது மார்க்கெட் உயர ஏ.எல்.விஜய்யும் ஒரு காரணம் என்ப தாலும், அவர் இயக்கத்தில் நடித்த 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்' உள்ளிட்ட படங்கள் ரசிகர் களின் வரவேற்பைப் பெற்றதாலும் ஏ.எல். விஜய் மூலம் ரீ-என்ட்ரி கொடுத் தால் நன்றாக இருக்கும் என அனுஷ்கா நம்புகிறார். கதையும் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப்போக, படப்பிடிப் புக்கு இப்போதிலிருந்தே தயாராகி வருகிறார். ஏ.எல்.விஜய் தற்போது அருண்விஜய், எமி ஜாக்சன் நடிக்கும் "அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் பிசியாக இருப்பதால் இப்படத்தை முடித்துவிட்டு அடுத்து அனுஷ்கா படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்..

கான்கள் கூட்டணி!

படம் நடிப்பதிலிருந்து ஸ்மால் பிரேக் எடுத்திருக்கும் அமீர்கான், தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் "சாம்பியன்ஸ்' படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சல்மான்கானை வைத்து ஒரு படம் பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆமீர் கான். தமிழில் பிரசன்னா நடிப்பில் "கல்யாண சமையல் சாதம்' படத்தை எடுத்த ஆர்.எஸ். பிரசன்னா, இந்தியில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரில் ஒரு கதையை அமீர்கானிடம் சொல்லியிருக்கிறாராம். அந்த கதையைக் கேட்ட உடனே, இதில் தான் நடிப்பதைவிட, நண்பர் சல்மான்கான் நடித்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் எனக் கூறி சல்மானை அணுகியிருக்கிறாராம் அமீர்கான். ஆனால் கதையைக் கேட்ட சல்மான்கான் எது வும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். அமீர்கானுடன் சல்மான்கான் நெருங்கிப் பழகி வருவதால் இதற்கு நோ சொல்ல வாய்ப்பில்லை என்கிறது பாலிவுட் வட்டாரம். எனவே விரைவில் இந்த கான்களின் கூட்டணி, ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் முதல்முறையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

cc

Advertisment

ஃபாரினில் பையா 2!

இயக்குநர் லிங்குசாமி, "தி வாரியர்' படத்தைப் பெரிதும் நம்பியிருந்த நிலையில், அதுவும் எதிர்பார்த்த அளவு போகாததால் சற்று அப்செட்டில் இருக்கிறார். இருப்பினும் ஒரு கம் பேக் கொடுத்தாகவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாகத் தனது அடுத்த படத்தின் கதையைப் பார்த்துப் பார்த்து எழுதி வருகிறார். அந்த படத்தைப் பற்றி விசாரித்தால், கார்த்தி, தமன்னாவை வைத்து அவர் இயக்கிய "பையா' படத்தின் அடுத்த பாகம் என்கின்றனர். "பையா' படம் தனது சினிமா கரியரில் முக்கியமான படமாக அமைந்ததால் "பையா 2' கைகொடுக்கும் என நம்புகிறார். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யாவை புக் செய்துள்ளாராம் லிங்குசாமி. முதல் பாகம் பெங்களூர் டூ மும்பை நோக்கி கதை இருந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளிநாட்டில் நடப்பது போன்று அமைத்துள்ளார். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகவும், தற்போது அதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் லிங்குசாமி ஈடுபட்டு வருவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சைலண்ட் ஹீரோ ஷாம்!

"12 பி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஷாம், தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான "வாரிசு' படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்திருந்த நிலையில், மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ஷாமுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை "கோலி சோடா', "10 எண்றதுக்குள்ள' உள்ளிட்ட சில படங்களை எடுத்த விஜய்மில்டன் இயக்க, படத்திற்காகத் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை சத்தமே இல்லாமல் படக்குழு நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.

nkn080223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe