Advertisment

டூரிங் டாக்கீஸ்! மகிழ்ச்சியில் மகிழ்திருமேனி!

dd

மகிழ்ச்சியில் மகிழ்திருமேனி!

"துணிவு' பட வெற்றியால் குஷியில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக் கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி ஆச்சரியத்தை அளித்தது. அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் அவர் இயக்கவில்லை, "ஏ.கே. 62' புராஜெக்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டு விட்டார் எனச் சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் முதலில் விக்னேஷ் சிவன் ஒரு ஒன் லைன் மட்டுமே அஜித்திடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார். இதையடுத்து தற்போது முழுக்கதையை விக்னேஷ் சிவன் கூற, அஜித்துக்கு அது பிடிக்கவில்லை. அதன் காரணமாக அஜித்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவன் இழக்க, தற்போது அந்த வாய்ப்பு "தடம்', "கலகத் தலைவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனிக்கு கிடைத்துள்ளதாம். முன்னதாக விஜய் பட வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்த நிலையில், "கலகத் தலைவ

மகிழ்ச்சியில் மகிழ்திருமேனி!

"துணிவு' பட வெற்றியால் குஷியில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக் கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி ஆச்சரியத்தை அளித்தது. அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் அவர் இயக்கவில்லை, "ஏ.கே. 62' புராஜெக்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டு விட்டார் எனச் சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் முதலில் விக்னேஷ் சிவன் ஒரு ஒன் லைன் மட்டுமே அஜித்திடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார். இதையடுத்து தற்போது முழுக்கதையை விக்னேஷ் சிவன் கூற, அஜித்துக்கு அது பிடிக்கவில்லை. அதன் காரணமாக அஜித்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ்சிவன் இழக்க, தற்போது அந்த வாய்ப்பு "தடம்', "கலகத் தலைவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனிக்கு கிடைத்துள்ளதாம். முன்னதாக விஜய் பட வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்த நிலையில், "கலகத் தலைவன்' படத்தினால் அது பறிபோனது. இப்போது அஜித் பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் விக்னேஷ் சிவன் போல் தவற விடாமல் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

sdfs

இரண்டாவது இன்னிங்ஸ்!

திருமணத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் ஜோராக நடிக்கத் தொடங்கிவிட்டார் ஹன்சிகா. தனது செகண்ட்ddd இன்னிங்ஸைத் தொடங்கிய ஹன்சிகாவிடம், "மேரேஜுக்குப் பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து விடும், வாய்ப்பும் முன்பு போல் இருக்காது' என்று சில சினிமா சீனியர்கள் சொல்ல... "அப்படி யெல்லாம் ஒன்னும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் மேரேஜுக்குப் பிறகு பெண்கள் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சமம்தான். அதனால்தான் நான் மீண்டும் நடிக்க வந்திருக்கேன்'' என கொஞ்சும் தமிழில் பதிலளித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு முதல்படமாக ஹன்சிகா தற்போது "மெட்ராஸ் எண்டர் பிரைசஸ்' நந்தகோபால் தயாரிப்பில் இகோர் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். ஆரி வில்லனாக, ஜிப்ரான் இசை யமைக்கும் இப்படத்தின் படப் பிடிப்பு சென்னையில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

குழப்ப குமார்!

"பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, "இதற்குத்தானே ஆசைப்பட் டாய் பாலகுமாரா', "காஷ் மோரா' உள்ளிட்ட சில படங் களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ‘"கொரோனா குமார்'’ என தலைப்பு வைக்கப் பட்ட இப்படத்தை தயாரிப் பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்ப தாக அறிவித்த படக்குழு, பின்பு எந்த ஒரு அப்டேட்டும் வெளி யிடவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக கடந்த ஆண்டு கூறப்பட்ட நிலையில் இயக்குநர் கோகுல், "நிச்சயம் இப்படம் எடுக்கப்படும். வதந்திகளை நம்ப வேண்டாம்'' என விளக்கமளித்திருந்தார். கோகுல் விளக்கமளித்து இன்னும் ஒரு ஆண்டு கடந்த பிறகும் எந்த அப்டேட்டும் வெளியாகாததால் பல வதந்திகள் இப்படம் தொடர்பாக எழ தொடங் கின. அந்த வகையில் தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு பதில் "லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன் நடிக்க வுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது இந்தத் தகவலையும் மறுத்துள்ளது படக்குழு. ஆனால் கோலிவுட் வட்டாரத்தில், சிம்பு இப்படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அதற்குப் பதில் ஒரு புது ஹீரோவை படக்குழு தேடி வருவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சிரஞ்சீவிகாரு... பிரபுதேவா ஜோரு!

Advertisment

பிரபுதேவா நடனம் மூலம் கரியரை தொடங் கினாலும் நடிகர், இயக்குநர் என தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் வலம்வந்தார். சமீபகாலமாக நடிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா, தற்போது மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளாராம். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியைத் தழுவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல் லப்படுகிறது. நடிப்பு, நடனம் ஆகியவற்றில் தமிழில் அறிமுக மான பிரபுதேவா, இயக்குநராக தெலுங்கில் தன் முதல் படத்தை எடுத்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்று தமிழில் "உனக் கும் எனக்கும்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழ் உட்பட மொத்தம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட் டது. இந்த சென்டிமெண்ட் காரணமாக மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ள பிரபுதேவா தெலுங்கில் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்துள்ளார். முதல் படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்தை இப்படத்திற்கும் புக் செய்து வைத்துள்ள பிரபுதேவா, பல தெலுங்கு முன்னணி ஹீரோக்களிடம் கதை கூறி வருகிறார். அந்த வகையில் சிரஞ்சீவியிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கி வைத் துள்ளதாகவும், விரைவில் அவரை இயக்க அதிக வாய்ப் புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன.

-கவிதாசன் ஜெ.

nkn040223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe